மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களில் அறக்கோட்பாடுகள்

ஆச்சாரி

Feb 1, 2013

முன்னுரை

பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது திருமுருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் (அ) கூத்தரற்றுப்படை என ஆற்றுப்படை நூல்களாகும். பத்துப்பாட்டில் தெய்வங்களது அருளைப் பெற்ற சான்றோர் பக்தர் ஒருவர் அருள் பெற விழையும் மற்றொருவருக்குக் கூறும் வகையில் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் சமய நெடும் பாடலாகவும்,  பதினோராந்திரு முறையில் வைத்துப் போற்றப் பெறுவதாகவும் அமைந்துள்ளன. சமயம் மக்களைப் பக்குவப்படுத்தும் நோக்கில் நெறியோடு அறத்தை பாதுகாப்பதாக  அமைந்துள்ளது.

ஆற்றுப்படை விளக்கம்

ஆறு என்னும் சொல்லுக்க வழி அல்லது நெறி என்பது பொருளாகும்.  ஆற்றுப்படுத்தும் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப்படுத்தலாகும். வறுமையோடு இருப்பவனை அவன் துயர்களைப்  போக்கி  பெருஞ்செல்வம் பெறுமாறு அவரையும் வழிப்படுத்துதலே  ஆற்றுப்படை என்னும் நூலாகும். இலக்கியச்  சொல்லகராதியும் ஆற்றுப்படுத்தலுக்கு வழிப்படுத்தின என்ற பொருளையே கூறுகின்றன. ஆற்றுப்படை என்பது ஒருவகையான பாடல் மரபுடையது. புரவலாரைக் காணாது வறுமையில் வாடுகின்றான் ஒரு கலைஞன். புரவலன் ஒருவனைக் கண்டு பரிசில்கள் பெற்று சீரும் சிறப்புமாகத் திரும்புகின்றான்  மற்றொரு கலைஞன். இவன் அவனைப் பார்க்கின்றான், இரக்கத்தால் அவன் வாழ வழி காட்டுகின்றான். அவன் புரவலனிடத்து சென்றால் வறுமை தீரும், கலை வளரும், தன்மானம் அழியாது எனக் கூறி பாணர், கூத்தர், பொருநர், விறலியர், புலவன் போன்றோர்  வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தை  தாம் பெற்றவற்றை எல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும் என்று கலைக்களஞ்சியம் கூறுகின்றது.

வழி, வழி ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை என்றும், ஆற்றுப்படுத்துதல், வழிப்படுத்துதல் என்றும் வழிப்படுத்தின. வழிகாட்டி பல்வேறு  அறிஞர்களின்  நெறியைச் செலுத்துவது ஆற்றுப்படையின் கருத்தாகும்.

பாடப்பட்டோன் வரலாறு

திருமுருகாற்றுப்படை நக்கீரால் பாடியவை. இவர் முருகப் பெருமானின் மீதுள்ள அன்பின் காரணமாக 317 அடிகளில் ஆசிரியப்பாவால் பாடப் பெற்றவையாகும்.

திருமுருகாற்றுப்படை, முடத்தாமக் கண்ணியாரால் பாடியவையாகும் கரிகாற்பெருவளத்தான் அறச்சிறப்புகளைப் பற்றி 248 அடி ஆசிரியப்பாவால் பாடப் பெற்றவையாகும்.

சிறுபாண் ஆற்றுப்படை,  நல்லூர் நத்தத்தனரால் பாடியவையாகும். இவை ஒய்மாநாட்டு நல்லியக்கோன் அரசனாக இருந்து கடையெழு வளளல்களில் ஒருவனாக திகழ்ந்தான். அறக்கோட்பாட்டில் சிறிதும் தவறாமல் ஆண்டு வந்தான். இவை 269 அடிகளால் ஆனவையாகும்.

பெருபாண் ஆற்றுப்படை, அடியலூர் கூடுத்தரக்கண்ணாரால் பாடப்பட்டவையாகும். தொண்டைமான் இளந்திரையன் அறப்பண்போடு வாழ்ந்ததை  500 அடி பாடல்களில் விளக்குகின்றன.

மலைப்படுகடாம்,  பெரும் குன்றூர்ப் பெரும் கௌசிகனாரால் பாடியவையாகும். நன்னன் வள்ளல், தன்மையில் இலக்கணமாக திகழ்ந்தவனாகும்.  இவை 583 அடி பாடல் வகை கொண்டவையாகும்.

1.            திருமுருகாற்றுப்படை கோட்பாடு

முருகனிடம் அருள் பெற்ற புதல்வர் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் வீடுகளுக்குச் சென்று அவனைப் போற்றி வணங்கி யாராலும் பெற முடியாத பரிசு பெற்றுக்கொள் என்ற கருத்து இந்நிலையில் உள்ளது. புலவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்தியதால்  இந்நூல் புலவர் ஆற்றுப்படை என்றும் கூறுவர்.

வீடு பேற்றுக்கமைந்த திருவருள் ஞானத்தை நல்குதலின் தலைவியற்று நிற்கும் குறவன் முருகப் பெருமான் ஆதலால்,  ஆற்றுப்படைக்கு இடனாகின்ற வகையில் முருகப்பெருமான் திருப்பெயரால் இந்த ஆற்றுப்படை திருமுகாற்றுப்படை என வழங்கப்படுகின்றது என்பர்.

திருமுருகாற்றுப்படை ஆற்றுப்படை வீடுகள் பற்றிக் கூறுவதால் ஆறு பகுதிகளாக அமைந்துள்ளது. முருகன்,  குறிஞ்சி நிலச் சிறப்புக் கடவுள்.  ஆதலால்  பொதுப்படை மலை நாட்டிற்குரியவன் முருகன் ஆவான்.  குறமகள் செய்யும் வழிபாடும் கூறி அப்பெருமானைப் புதிய பக்தன் எப்படி வழிபட வேண்டும் என்பதைச் சுட்டி முருகன் அருள் புரியும் திறத்தினையும் கூறியுள்ளது. அத்தகைய செவ்வேலையுடைய முருகப் பெருமானுடைய சேவடியை அடையும் நல்ல உள்ளத்தோடு நீ புறப்பாடு என்று வீடு பேற்றினை விரும்பும் புலவனிடம் கூறுவதாகும்.

சூர மகளிர் செயல்களும் முருகக் கடவுள் சூரனைச் சம்காரம் செய்த சிறப்பும், மதுரையின் பெருமையும் திருப்பரங்குன்றக்  கோட்பாட்டில் சிறப்பாக அமைந்துள்ளன.

திருமுருகாற்றுப்படை அக்கால சமுதாயத்தில் நிலவிய தெய்வங்கள், கோவில்கள், வழிபாடு முறை, தெய்வ வணக்கம் ஆகியன இடம் பெற்றுள்ளன.

தெய்வ வழிபட்டில், எண்ணிய காரியங்களிலே எளிதில் வெற்றி பெறலாம் என்று நம்பினர். துன்புற்றவர்களின் துயரங்களைப் போக்கும் அவர்களை இன்புற்று வாழச் செய்யும் இத்தகைய ஆற்றலும், அருளும் உடையது தெய்வம் என்று நம்பினர்.

2.            பொருநர் ஆற்றுப்படை

 சோழன் கரிகாலனைப் பற்றிப் புகழ்ந்து  பாடிய பாட்டு பொருநராற்றுப்படை ஆகும். கரிகாலனுடைய கொடைத்தன்மை, வீரத்தன்மை, அரசியல் மேன்மை, பெரும் புகழ் போன்ற செய்திகள் இடம் பெறுகின்றன. மிக இளம் வயதிலேயே அரசன் ஆனவன், முதியவன் போல் வேடமிட்டுக் கொண்டு ஒரு வழக்கில் தீர்ப்புக் கூறியவன், இமயம் வரை சென்று  பல மன்னர்களை வென்றவன், தமிழ்நாட்டில் சேரனையும், பாண்டியனையும் வென்று பெரிய அரசனாக விளங்கியவன், இவன் காவிரி ஆற்றுக்குக் கரை அமைத்தவன், கல்லணை கட்டியவனும் இவனே என்பர்.

அரசனின் விருந்தோம்பும் பண்பு, இந்நூலில் மிகவும் சிறப்பாகப் பேசப்- படுகின்றது. கரிகால் வளவனின் இளமை, தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தியமை, வெண்ணிப் போர் வெற்றி என்ற வரலாற்று செய்திகள் வரிசையாகக் கூறப்படுகின்றன.  அவனுடைய வீரச் சிறப்பும், கொடைச் சிறப்பும் நன்கு பேசப்படுகிறது.

அறங்கூறும் நூல்களை அறிந்து அம்முறையைப் பின்பற்றி ஆட்சி புரிந்தவர். பகைவர்களை வெல்லும் வேற்படையையுடைய சிறந்த வீரன் (228&231) என்றும் கூறப்படுவதிலிருந்து மன்னன் கரிகாலனின் பண்பும் ஆட்சிச் சிறப்பும் அறியப்படுகின்றது.

 அக்கால சமுதாயத்தில் கரிகாலன் என்னும் சோழமன்னனின் அரசியல் வாழ்க்கைப் பற்றி பொருநர் ஆற்றுப்படை குறிப்பிடுகின்றது. கரிகாலன் தன் அரசியல் வாழ்க்கையில் நீதியையும், நேர்மையும் கைக்கொண்டிருந்தான் என்பதையும், இவன் நடுநிலைமை தவறாமல் நீதி வழங்குவோன் (187&188)  என்றும், கரிகாலன் உலகத்தை ஒரு குடையின் கீழ் ஆண்டவன், குடிமக்களின் பாலல் குறையாத அன்பு கொண்டவன் என்றும் இதில் குறிப்பிடப்படுகிறது.

3.            இவன் கடையெழு வள்ளல்களுக்குப் பிற்காலத்தில் இருந்தவன், அவர்களைப் போன்ற சிறந்த கொடையாளி ஓவியர் குடியிலே பிறந்தவன்.

 ஒய்மான் நாட்டை ( திண்டிவனம் ) உள்ளிட்ட, தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக வேண்டும் என்று எண்ணுகின்றனர். அவனுடைய ஆட்சிக்குள் மாவிலங்கை,  எயிற்பட்டிணம்,  வேலூர்,  ஆமூர் போன்ற நகரங்கள் அடங்கியிருந்தன.  மாவிலங்கை இவனது தலைநகரம். நல்லியக்கோடன், ஒய்மான் நல்லியக் கோடன் என்றும் இவன் பெயர் வழங்கப்படுகிறது.

 “மாவிலங்கை என்னும் சிறந்த நகரத்தை தலைநகராகக் கொண்டு செங்கோல் செலுத்திய ஒவியங்கடி என்னும் சிறந்த அரசர் குடியிற் தோன்றி சிறப்பான  அறிவும்  நன்குடைமையும், பிறவும் உடைனவாய்த் திகழ்ந்தான்’’ என (207,217) என்ற அடிகளில் நல்லூர் நத்தத்தனார் இவ்வள்ளலின் அருமை பெருமைகளை  நன்கு பாராட்டியுள்ளார்.

 சங்க காலத்தில் ஈகை குணம் சிறக்கப் பெற்ற ஏழு வள்ளல்களின் பெருமை பற்றி இந்நூல் வழி அறிய முடிகின்றது. மழை வளமுடைய, மலையின் பக்கத்திலே கான மயிலொன்று கலாபத்தை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அதைக் கண்டவுடன்  குளிர் தாங்காமல் நடுங்குகின்றது என்று எண்ணி, உடனே தனது போர்வையை அதன் மீது போர்த்தினான். இவன்  வலிமை வாய்ந்தவன். ஆசிரியர் குடியிலே பிறந்தவன் பேகன் என்னும் பெயருடையவன். (84&87)

அரசியல் அறம் செங்கோல், முறைமை தவறாத ஆட்சியினை உடையவன், கொடை, அளி, செங்கோல், குடியோம்பல்  ஆகிய நான்கும்   உடையவனாய்த் தான் பெறற்கு அரிய ஆறில் ஒரு பங்கு பொருளையும் வறுமை நீங்கிய வழிக்கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், கழித்தல் வேண்டின் இழத்தலும் தளர்ந்த குடிகளைப் பேணலும், யாவர்க்கும் தலையளி செய்தலும், குடிகளைப் பிறர் நலியாது காத்துத் தானும் நலியாது பேணுதலும், பிறவுமாகிய அரசியல் அறத்தை வழுவாது காப்பவன். இதனை,  “ஏரோர்க்கு நிழன்ற  கோலினை’’ (233) என்ற அடி பயன்று வரும் தொடரால் அறியலாம். இவன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநர்க்கும், புலவர்க்கும், அருமறை, பயின்ற அந்தணர்களுக்கும் எப்பொழுதும் காட்சி தருவான்.  அவர்கள் வேண்டுவனவற்றை விருப்புடன் கொடுப்பான். இமயம் போன்ற அவனுடைய உயர்ந்த மாளிகையின் கதவு இவர்களுக்காக எப்பொழுதும் திறந்தேயிருக்கும்.

4,            பெரும்பாணாற்றுப்படை

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று  வரும் பாணன், வழியில் பேரியாழினை இடப்பக்கத்தில் தழுவிக் கொண்டு தன்னை ஆதரிப்பவர் யாருமில்லை என்ற எண்ணத்துடன் கால் சென்ற வழியிலே நடந்து வரும் பாணனை காண்கிறான்.  இவனை அவ்வள்ளலிடம் வழிப்படுத்தும் வகையில் தான் பெற்ற பரிசின் தன்மைகளைக் கூறியும் அதன் மூலம் வறுமை நீங்கியது என்றும், தான் சென்ற வழியின் அருமைகளையும் கூறுகின்றான்.  இவ்வகையில் அமையும் பெரும்பாணாற்றுப் படை மூலம் சங்க காலத்தில் நிலவிய நாட்டுவளம், ஆட்சி முறை,  வாழ்ந்த மக்கள், அன்றாட வாழ்வில் இடம் பெற்ற உணவு, உடை, உறையுள், அணிகலன்கள், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கலைகள், தொழில், வாணிகம், பண்டமாற்று ஆகிய சமுதாய கோட்பாடாக எடுத்துக்காட்டப்படுகின்றன.

                பெரும்பாணாற்றுப்படையின் மூலம் திரையனின் அரசாட்சியின் மேன்மை பற்றி அறியப்படுகின்றது.

                அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்

                பல்வேறு திரையன்’’  (36&37)

என்ற வரிகள் அதர்மத்தை ஒழித்து தர்மத்தைச் செய்வதற்கத் துணை புரிகின்றவன் என்பதை உணர்த்துகின்றன.

புலவர்க்கும் எப்பொழுதும் கொடையாளி செய்பவன், சோர்வற்ற உள்ளமுடையவன், கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள், அறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகிய சுற்றத்தார்களை உடையவன், இளந்திரையன் என்று மன்னரின் சிறப்புகளைக் கூறுவதன் மூலம் இவனது ஆட்சிச் சிறப்பை அறியலாம்.

5,            மலைபடுகடாம்

மலைபடுகடாம் என்ற இப்பாட்டின் தலைவனாகிய நன்னன் சிறந்த வீரன்,  புலவர்களுக்குப் பொருள் கொடுத்துத் தமிழை வளர்த்தவன்,  தன்னையிகழ்வோரைப் போரிலே வென்று அடிமையாக்குபவன், புகழ்வோருக்குத் தன் அரசு முழுவதையும் கொடுத்து விடுபவன், அவனுடைய அவைக் களத்திலே சிறந்த கல்வியும், அறிவுமுடைய பலர் குழுமி இருந்தனர். அழியாத நல்ல புகழ் உலகுள்ள வரையிலும் நிலைத்திருக்கும்படி பகைவர்கள் பலரையும்  தோல்வியுறச் செய்தவன், அப்பகைவர்கள் நிறையாகத் தந்த அருங்கலன்களை எல்லாம் புலவர்களுக்கு மாரியைப் போல் மகிழ்ந்து  சொரிவான். தன்னையிகழ்வோரை அடிமைப்படுத்தும் ஆற்றலுடையவன், புகழ்வோருக்குத் தன் அரசாட்சியின் செல்வம் முழுவதையும்  கொடுத்து விடுவான்.  பருவ காலத்து மழை பெய்து கொண்டே இருப்பதைப் போல்,

 அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பான். (பாடல் 70,71)  இவ்வாறு  சபையில் நாள்தோறும் திறமையை வெளிக்காட்டாதவர்களை வெளிக்காட்டும்படி செய்வான். அவர்களை நல்வழிப்படுத்துவான். இதன் மூலம் (77,79) நன்னனுடைய சிறந்த அரசியல் கோட்பாடாகும்.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகற்களை நட்டு வணங்குவான். இந்த கற்களை தெய்வங்களாக வணங்குவான் எனக்  கூத்தன் மற்றொரு கூத்தனக்கு கூறுவதாகவும் (386,390)  அமைந்துள்ளது.

முடிவுரை

சங்க இலக்கியத்தில் அரசனை புலவன் ஆற்றுப்படுத்துவதும், புலவன் அரசனை ஆற்றுப்படுத்தும் நிலை  சங்க இலக்கிய காலத்திலே தொடர்ந்து தொன்று தொட்டு வருகின்றன.  திருவள்ளுவரும் அறத்துப் பாடலில் அறக்கருத்துக்களை சுவைபட எடுத்தும் இயம்புகின்றார். இதுவே சங்க இலக்கியத்தில்  அறக்கோட்பாட்டு சிந்தனையாகப்  போற்றப்படுகிறது.

Has established a schedule that will permit concentrated work over the time of the term, writing service for research paper having as a firm goal the completion of the overview proposal in draft form by the end of the seminar

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களில் அறக்கோட்பாடுகள்”

அதிகம் படித்தது