மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சாமர்த்திய சண்டியர்கள்

ஆச்சாரி

Feb 1, 2012

இன்று உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் மாவோயிஸ்டுகள்  , இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் உருவானதற்கு இந்தியாவின் அரசியல்வாதிகளோ அல்லது இந்தியாவின் பண பலம் படைத்த வல்லாதிக்கச் சமூகமோ என்று நாம் நினைத்தால் அது கண்டிப்பாக இல்லை. சுதந்திர இந்தியா உருவான பின் ஒரு குறிப்பிட்ட சமூகக் கருத்து கொண்ட வல்லாதிக்க சக்திகளுக்கு மட்டுமே இந்திய ஊடகவியலில் இடம் கொடுத்து விட்டோம். இன்று வரை அரசியல்வாதிகளையும், பண வல்லாதிக்கம் படைத்தோரையும் மட்டுமே எதிர்த்துப் போராடி வந்த நாம் இதுவரை அவர்களைத் தாங்கி நின்ற ஊடகங்களைக் களையெடுக்க மறந்து விட்டோம். பாம்பைக் கொல்வதற்கு பாம்பின் தலையில் அடிக்காமல் அதன் வாலில் அடித்துக்கொண்டிருந்ததின் விளைவு இன்று நம் சனநாயக முறையில் போராடும் போராட்டங்கள் எல்லாம் வன்முறைப் போராட்டமாக இரட்டிப்புச் செய்யப்படுகிறது.

ஒரு நல்ல ஊடகம் என்பது தங்களின் லாப நட்டக் கணக்குகளை பார்க்காமல் செய்தியை மறைக்காமல், செய்திகளின் தன்மைக்கேற்ப அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவேண்டும். குரலற்றவர்களுக்கு ஓங்கிய குரலாக ஒலிக்கவேண்டும். அப்படி நம் நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களின் மேல் நடத்தப்படும் வல்லாதிக்க தாக்குதல்களை மறைப்பதும் திரிப்பதுமாக அவர்களின்  வாழ்வாதாரப் பிரச்சனைகள் சமூகத்துக்கு வராமல் இருப்பதாலேயே அவர்களின் போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாறியுள்ளது.

புறக்கணிப்பின் வலி புறக்கணிக்கப்படுவர்களுக்கே தெரியும். ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானது முதல் குழந்தை பெறும் வரை தலைப்புச்செய்தியாக வெளியிடுபவர்களுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கப்போகிறது.

ஒரு பத்திரிக்கை தமிழக முதல்வரைப் பற்றி எழுதியதும் அதற்குப் பின் அந்த கட்சியினர் அவர்கள் அலுவலகத்தை தாக்கியதும் நாடறிந்ததே. முதலில் இந்த கருத்தை வெளியிட்ட நோக்கம் என்பது தனி மனித தாக்குதல்கள் என்பதில் ஐயம் இல்லை. இவர்கள் வெளியிட்ட செய்தியை செய்தியாக விட்டிருந்தால் பரவாயில்லை ஆனால் ஒரு வகுப்பினரை தாக்கும் வண்ணம் அதன் தலைப்பு இருந்தது. அதனால் (அதனாலேயே) சில நடுநிலை பத்திரிக்கைகள் தலையங்கம் வெளியிட்டு தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். முதலில் இந்த செய்தி கருத்து சுதந்தரத்தின் தவறான பிரதிபலிப்பு மற்றும் தனி நபர் தாக்குதல் என்று கூறியுள்ளது. கருத்து சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் ஐயம் இல்லை. ஆனால் கருத்து சுதந்திரத்தை இந்தப் பத்திரிகை மட்டும் தான் தவறாகப் பயன்படுத்துகிறதா என்பது தான் கேள்வி.

இத்தகைய பத்திரிகைகளிடம் இரண்டு விதமான நடுநிலைமை இருப்பதை நாம் உணரலாம். தமக்கு உகந்த சங்கதிகளில் பிரச்சினையென்றால் மேம்போக்காக கண்டிப்பது, தமக்கு ஒவ்வாத சங்கதிகள் என்றால் கடும் கண்டனத்தை தெரிவிப்பது.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தவறான கருத்துக்களை உள்நோக்கத்துடன் பரப்பிய மலையாள மனோரமா பதிப்பகத்தைக்  சென்னை புத்தகக் கண்காட்சியில் மே 17  இயக்கம் அற வழியில் கண்டித்ததை  வன்முறைக் கும்பல்கள் என்று சித்திரித்து எழுதியுள்ளது. வன்முறை எது போராட்டம் எது என்று கூடத் தெரியாதா அளவுக்கு இவர்கள் கண்கள் குருடாகிப் போனதைக் காட்டுகிறது

மேலும் மேலே குறிப்பிட்ட பத்திரிக்கையின் பதிப்பகம் புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதையும் அதே சமயத்தில் மலையாள மனோரமா பத்திரிக்கை காவலர்களின் பாதுகாப்புடன் கண்காட்சியில் இடம் பெற்று இருந்ததையும் தலையங்கம் வசதியாக மறைத்துவிட்டது.மேலும் தலையங்கத்தின் இறுதியில் சம்பந்தமே இல்லாமல் தமிழ் உணர்வாளர்கள் தொடரும் வேதனையால் மேற்கொண்ட இரண்டு போராட்டங்களை குறிப்பிட்டு சொல்லி அவர்களை வன்முறைக் கும்பல்கள் என்று சொல்லி கண்டித்திருக்கின்றனர்.

இரண்டாவதாக சொல்லப்பட்டது தனி நபர் தாக்குதல்.

முதலில் இதன் தலைப்பைத் தவிர அந்த செய்தியில் இருந்தது செய்தி மட்டுமே. அங்கு விவாதிக்கப்பட்டவைகள் தான் செய்தியாக வைக்கப்பட்டன. இந்த செய்திக்கு முதல்வரே இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த செய்தி பொய் என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் குண்டர்களை விட்டு வன்முறை செய்கின்றனர். அவர்கள் இந்த செய்திக்கு கொடுத்த தலைப்பு நிச்சயம் கண்டிக்கப்படவேண்டியதே. இது தனி மனிதத்  தாக்குதல்களாகவே இருந்துவிட்டு போகட்டும்.

இந்த இடத்தில தான் இவர்களின் சாமர்த்திய சண்டித்தனம் வெளியே வருகிறது. இப்படி கருத்து சுதந்திரம் என்பது என்ன, போராட்டம் எப்படி இருக்க வேண்டும், யார் வன்முறை கும்பல் இப்படி எல்லாவற்றையும் இவர்களே தீர்மானிப்பார்கள். இவர்கள் வகுத்த கருத்துகளை மீறுபவர்களை வன்முறை கும்பல், சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று உண்மையான போராட்டங்களை கூட இரட்டிப்புச் செய்வார்கள்.

எதிரிகளை இரண்டு வகையாகக் கையாளலாம். ஒன்று அவனை எதிர்த்து நிற்பது அல்லது அவனுடனே நட்பு பாராட்டி உறவாடிக் கெடுப்பது. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் எழுதுவது, தமிழர்களுக்கு ஆதரவாக சில சேதிகளுக்கு மட்டும் எழுதி தாங்களும் தமிழர் நல விரும்பி என்பது போல் காட்டிக்கொண்டு தங்களின் தமிழ் வாசகர் கூட்டத்தின் வர்த்தகம் பாதித்துவிடாமல் இருப்பதற்கு இவர்கள்  செய்யும் தந்திரமே. இது போன்ற நடுநிலை பத்திரிகைகளிடம் தமிழர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். முடிந்தால் களை எடுக்கவேண்டும்.

Ein ausblick auf die ghostwriter hausarbeit mglichen ergebnisse beendet das research proposal


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சாமர்த்திய சண்டியர்கள்”
  1. க. தில்லைக்குமரன் says:

    நல்ல பதிவு. வாழ்த்துகள்!

  2. kondraivendhan says:

    களவானியில் கொஞ்சம் நேர்மையானவன், ரவுடியில் கொஞ்சம் இதமானவன், கொலைகாரனாய், நாள் கிழமை பார்த்துக் கொலை செய்யும் ஆன்மீகவாதி – இப்படியாகப்பட்டவன் தான் நம்ம மான்பு மிகு தின மூளி – தினமனி. இவர்களின் வியாபார அபிவிருத்திக்கு மேற்படியானவையெல்லாம் அவசியம். இவர்களை சண்டியர்கள் என்று சொன்னால் அது ஏழேழு பிறவிக்கும் பாவம் இல்லையா ??

  3. thiagarajan says:

    அருமையான பதிவு.இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பு.

  4. kasi visvanathan says:

    மலையாள எடுபிடி, குற்றேவல் சிகாமனி இந்தீய இறையாண்மை பெற்ற தவமனி = தினமனி. பத்திரிக்கை சுதந்திர மாய்மாலம் பேசும் அடாவடி தினமனி தனது கடமையை சரிவரச்செய்வதில் தமிழர்களாகிய நாம் பெருமைகொள்வோம்.

அதிகம் படித்தது