சித்த மருத்துவம்
ஆச்சாரிFeb 15, 2013
1. தினமும் புதினா துவையலை சாப்பிட்டு வர வயிற்றுக் கோளாறுகள் தீரும்.
2.எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
3.மூச்சு வாங்கும் தொந்தரவு தீர தூதுவளை மாமருந்தாகும்.
4.ஜாதிக்காயுடன் சந்தனம், மிளகு சேர்த்து மை போல அரைத்து முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்.
5.எலுமிச்சம்பழத்தின் சாற்றை ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும்.
6.தொடர் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட குணமாகும்.
7.கொய்யாப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை வராமல் தடுக்கலாம்.
8.தினமும் கேரட், காளிப்பிளவர் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
9.தினமும் கோவைப்பழம் சாப்பிட்டு வர பல்வலி நிவாரணம் பெரும்.
10.அத்திப்பழத்தை தினத்தோறும் ஐந்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி சரியாகும்.
தொடரும் . . . .
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”