சித்த மருத்துவம்
ஆச்சாரிApr 15, 2013
வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டிச் சாறு பிழிந்து இரண்டு காதுகளில் அச்சாற்றை ஊற்றினால் காதுவலி குணமாகும்.
சளிக்கு:
தூதுவளை, ஆட்டுப்புழுக்கை, நண்டு, சீரகம், இதை மூன்றும் அம்மியில் தட்டிப் பிழிந்து, இதை குழப்புக் கரண்டியில் போட்டு நன்கு கொதிக்க விட்டால் மேலாக முற்றிய நீர் வரும், அதைக் குடித்துவிட்டு அடியில் இருக்கும் கப்பியை நெஞ்சு மற்றும் தலையில் தடவிக் கொண்டால் சளி போகும்.
மஞ்சள் காமாலைக்கு:
கீழநெல்லியை அரைத்துப் பசும்பாலில் சேர்த்து அரைத்து 3 நாளைக்கு காலையில் வெறும் வயிற்றில் குடித்த பின், 4-ம் நாளில் ஆட்டுக்கால் சூப்பைப் குடித்தால் மஞ்சள்காமாலை தீரும்.
வெட்டுக் காயத்துக்கு:
கரப்பான் இலையை அரைத்து வெட்டுப்பட்ட இடத்தில் துணி வைத்து நன்கு கட்டிவிட்டால் உடம்பில் வெட்டிய பகுதி ஒட்டிக் கொள்ளும்.
கை,கால் சிரங்குக்கு:
குப்பைமேனி இலையோடு உப்பைச் சேர்த்து அரைத்து கை,காலில் தேய்த்துக் குளிப்பாட்டினால் சிரங்கு குறையும்.
காய்ச்சலுக்கு:
விளக்கெண்ணெயை உடல் முழுக்க தேய்த்தால் காய்ச்சல் தீரும்.
வயிற்றுப்போக்கு:
பால்பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலைக்குச்சியை வாணலியில் இட்டுக, அதைக் நன்கு கருக வறுத்து அப்போடியை தாய்ப்பாலில் கலந்து குழந்தைக்கு கொடுத்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வயிற்றுப்பொறுமல் நீங்க (குழந்தைக்கு):
பால் பெருங்காயத்தை தாய்ப்பாலில் உரசிக் கொடுத்தால் குழந்தைக்கு உள்ள வயிற்றுப்பொறுமல் தீரும்.
குதிங்கால் வலிதீர:
தவிட்டையும், உப்பையும் சேர்த்து வறுத்து அதைத் துணியில் கட்டி ஒத்தடம் இட குதிகால் வலி தீரும்.
காக்காய் வலிப்பு தீர:
வெள்ளை வெங்காயத்தைத் துணியில் கட்டி அதை நன்கு மசித்துச் சாறுபிழிந்து, இரண்டு காதுகளிலும் ஊற்றினால் காக்காய் வலிப்பு குணமாகும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”