சித்த மருத்துவம்
ஆச்சாரிApr 1, 2013
அரச மரத்துப் பாலை வெடிப்புள்ள இடத்தில் தடவி வர குணமாகும்.
2. நெஞ்சுவலி நீங்க:
தினமும் இலந்தைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி உள்ளவர்கள் விரைவில் குணமடைவர்.
3. இதய படபடப்புத் தீர:
தினமும் ஒரு பேரிக்காய் உண்டு வந்தால் இதய படபடப்பு நீங்கும்.
4. வாய்ப்புண் குணமாக:
தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
5. மூலம் குணமாக:
கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வந்தால் மூல நோய் குணமாகும்.
6. சொறி, சிரங்கு குணமாக:
அருகம்புல் தைலம் தேய்த்து தினமும் இருவேளை குளித்து வந்தால் சொறி, சிரங்கு குணமாகும்.
7. தொப்பை குறைய:
சுரைக்காயைக் குறைந்தது வாரம் இருமுறையாவது சாப்பிட்டு வந்தால் தொப்பை விரைவில் குறையும்.
பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.
9. கெட்டநீர் வெளியேற:
நம் உடலில் தேவை இல்லாத கெட்டநீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
10. மூளை பலம் பெற:
பீர்க்கங்காய் வேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதைக் குடித்து வர மூளை பலம் பெறும்.
11. உடல்வலி தீர:
முடக்கத்தான் இலையுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்துக் கசாயம் செய்து குடித்து வந்தால் உடல்வலி தீரும்.
12. இடுப்பு வலி தீர:
வேள்ளைப்பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குணமாகும்.
13. திக்குவாய் சரியாக:
வில்வமர இலையைத் தினமும் காலையில் உணவுக்கு முன் தின்று வந்தால் வாய் திக்குதல் சரியாகும்.
14. பித்தக்கோளாறு தீர:
அகத்திக்கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறு தீரும்.
15. வாய்ப்புண் குணமாக:
அகத்தி இலையை நீரில் போட்டு அவித்தப் பின் அந்நீரைப் பருகினால் வாய்ப்புண் குணமாகும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”