சித்த மருத்துவம்
ஆச்சாரிMay 1, 2013
அம்மன் பச்சரிசி இலை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்டால் உடல் பலம் பெறும்.
உடல்புண் ஆற:
நம் வாயில் உள்ள எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு. உடலில் ஏற்பட்ட சிராய்ப்பு புண் மீது எச்சிலைத் தடவி வந்தால் புண் ஆறும்.
மேனி பளபளப்பாக:
ஆரஞ்சுப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்புப் பெறும்.
கடுங்காய்ச்சல்:
நொச்சி இலைப் சுடுநீரில் போட்டு நீராவி பிடிக்க கடுங்காய்ச்சல் குணமாகும்.
நரம்புவலி குறைய:
துளசி விதைகளைத் தூள் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் ஏற்படும் வலி குணமாகும்.
தினமும் அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.
வாய்ப்புண் குணமாக:
நெல்லி, மா இலைச்சாற்றை நீரில் இட்டு நான்கு காய்ச்சி வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
தோல் சம்பந்தமான நோய் தீர:
குப்பை மேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து தினசரி குளித்து வர தோல் சம்பந்தமான நோய் குணமாகும்.
குழந்தையின் வயிற்றுவலி தீர:
வசம்பை பொடியாக்கி 100 மில்லி தாய்ப்பாலில் கலக்கி குழந்தைக்கு கொடுக்க வயிற்றுவலி குணமாகும்.
கண் பாதுகாப்பிற்கு:
ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நினைத்து, அத்துணியை நிழலில் உலர்த்தி கண்களைத் துடைத்து வர கண் சம்பந்தமான நோய் தீரும்.
மார்புச்சளி குணமாக:
ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச் சளி குணமாகும்.
ரத்தம் சுத்தமாக இருக்க:
திராட்சை, சாத்துக்குடி பழத்தை உண்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”