மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்த மருத்துவம்

ஆச்சாரி

May 17, 2013

1.   வயிற்றுப்பூச்சி ஒழிய:

மாங்கொட்டைப் பருப்பை நன்கு வெயிலில் காய வைத்துப் பொடியாக்கி, ஒரு சிட்டிகை தேனில் குழைத்து ஒரு நாளில் இரண்டு வேளை சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சி அழியும்.

2.       தொண்டை வலி குறைய:

விளக்கெண்ணெயும், சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் பூசினால் தொண்டை வலி குணமாகும்.

3.       புத்துணர்ச்சி பெற:

துளசி இலைகளைச் செம்புப் பாத்திரத்தில் இரவு முழுக்க நீரில் ஊர வைத்த பின் காலையில் அந்த நீரை எடுத்துக் குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

4.       உடல் எடை குறைய:

வாழைத் தண்டுச் சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில் ஏதாவது ஒன்றைத் தினமும் குடித்து வந்தால் உடல் பெருக்கம் குறையும், நம் உடலும் அழகு பெறும்.

5.       நெஞ்சுவலி தீர:

இரண்டு பேரீச்சம்பழத்தை மதிய நேரம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.

6.       முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர:

கருவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணெய் காய்ச்சி இவ்விரண்டையும் கலந்த கலவையைத் தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும்.

7.       உடல் எடை அதிகரிக்க:

தினமும் இரவு படுப்பதற்கு முன்பு பேரீச்சம்பழத்தை நன்கு மென்று சாப்பிட்ட பின், பால் குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

8.       ஞாபகசக்தி பெருக:

பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி இவைகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும்.

9.       மூச்சிரைப்பு குறைய:

சுக்கு, மிளகு, கிராம்பு, பச்சைக் கற்பூரம் ஆகிய இவைகளைச் சம அளவு இடித்து, அதை ஒரு வெள்ளைத் துணியில் சிறு பொட்டலமாக வைத்து முகர்ந்து வர மூச்சிறைப்புக் குறையும்.

10.   தேமல் சரியாக:

கமலா ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் உடம்பில்  தேய்த்து வந்தால் தேமல் சரியாகும்.

Finding www.trackingapps.org/ that balance can be difficult, but safety should always override this desire

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”

அதிகம் படித்தது