மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்த மருத்துவம்

ஆச்சாரி

Jun 1, 2013

1. பல்வலி, பல் நோய் தீர:

ஆலமரத்துப் பட்டையை மை போலப் பொடி செய்து கொள்ளவும். நீரைக்  கொதிக்க வைத்த பின் இதோடு சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு மூன்று மாதம் சாப்பிட்டு வர பல்நோய் குணமாகும்.

 2.கண் பார்வை தெளிவடைய:

பாதாம் பருப்பை வறுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

 3.வேர்க்குரு நீங்க:

வடித்த கஞ்சியின்  சூடு ஆறிய பின், உடலில் தடவி குளிர் நீரில் குளித்து வந்தால் வேர்க்குருத் தொல்லை தீரும். அல்லது வெங்காயத்தை இடித்துச் சாறாக்கி வைத்துக்கொண்டு, இதனுடன் பப்பாளிப் பாலை கலந்து வேர்க்குரு உள்ள இடத்தில் தடவி வந்தால் வேர்க்குரு தொல்லை தீரும்.சருமமும் பளபளப்பாகும்.

 4.வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் குணமாக:

நம் உடலில் உள்ள சூட்டைத் தனித்து குளிர்ச்சி தரக்கூடியது நாவற்பழம்.இப்பழத்தை வாயுத்தொல்லை உள்ளவர்களும், வயிற்றில் புண் உள்ளவர்களும் தொடர்ந்து உண்டு வந்தால் இப்பிரச்சனை தீரும்.

5.அஜீரணத் தொல்லை தீர:

சிறு குவளை நீரில் கருவேப்பிலை, சீரகம், இஞ்சி இம்மூன்றையும் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின், அதை ஆறவைத்து, இந்நீரை வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் சரியாகும்.

6.வலிப்பு நோய் தீர:

வலிப்பு நோய் உள்ளவர்கள் வெள்ளை வேங்காயத்தை நன்கு நசுக்கிய பின் ஒரு துணியில் கட்டிப் பிழிந்து சாறு எடுத்து, இந்தச் சாற்றை இரண்டு காதுகளிலும் ஊற்றினால் வலிப்பு உடனே குணமாகும்.

7.மனக் கோளாறு குணமாக:

மனப்பிரச்சனை உள்ளவர்கள் ஓராண்டுக்கு இரண்டு முறை தங்களது கைகளில் மருதாணி அரைத்துப் பூச வேண்டும். இவ்வாறு கை.கால்களில் மருதாணி இடுவதினால் உங்களுக்கு வரும் னக்கோளாறுகள் வராமல் தடுக்கலாம்.

8.நெஞ்சுவலி குணமாக:

நெஞ்சுவலி உள்ளவர்கள் தினமும் இலந்தைப் பழம் சாப்பிட்டு    வர நெஞ்சுவலி குணமாகும்.

 9. முகச்சுருக்கம் நீங்க:

முகத்தில் சுருக்கம் உள்ளவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, மிருதுவான பஞ்சை இவ்வெள்ளைக்  கருவில் தோய்த்து முகம், கழுத்தில் தடவிய பின் அரைமணி நேரம் கழித்து ஈரப்பஞ்சினால் துடைத்து வந்தால் முகச்சுருக்கம் தீரும்.

 10. மூட்டு வலி தீர:

அத்தி மரத்துப் பாலை எடுத்து மூட்டு வலி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் மூட்டு வலி தீரும்.

 11. சலித்தொல்லை தீர:

இஞ்சிச் சாற்றையும், துளசிச் சாற்றையும் சம அளவு எடுத்து, இவ்விரண்டையும் நன்கு கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை தீரும்.

Some of these reactions may http://essayprofs.com result in students being able to answer their own questions

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”

அதிகம் படித்தது