மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்த மருத்துவம்

ஆச்சாரி

Jun 15, 2013
  1.வழுக்கைத்  தலையில் முடி வளர  :

வெங்காயத்தை செம்பருத்திப் பூவுடன் சேர்த்து அரைத்து, வழுக்கை மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

 2. வெட்டுக்காயம் ஆற:

வசம்புத் தூளைக் காயத்தின் மீது தூவினால் வெட்டுக்காயம் ஆறும்.

 3. வயிற்றுப்புண் குணமாக:

தினமும் 1 குவளை திராட்சைப் பழச்சாறு அருந்தி வர வயிற்றுப்புண் குணமாகும்

 4. மார்புச்சளி தீர:

ஏலக்கைப் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மார்புச்சளி தீரும்.

 5.  சிறுநீர் கோளாறு நீங்க:

முலாம்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கோளாறுகள் குணமாகும்.

  6.   காதுவழி குணமாக:

ஊமத்தம் பூவை பிழிந்து சாறு எடுத்து இரு துளிகள் காதில் விட்டால் காது வழி குணமாகும்.

 7.   உடல் சூடு குறைய:

தினமும் ஆட்டுப்பால் அருந்திவர உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.

 8.  முகத்தில் உள்ள கட்டிகள் குணமாக:

முகத்தில் அடிக்கடி சந்தனம் குழைத்துப் பூசிய பின் அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள கட்டிகள் குணமாகும்.

9.   கண்குளிர்ச்சி பெற:

கருவேப்பிலைத் துவையல் உண்டு வர கண்கள் குளிர்ச்சி பெறும். தவிர வாழை இலையில் சோறு சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும்.

10.   மஞ்சள் காமாலை தீர:

கீழாநெல்லி இலையை நன்கு அரைத்துப் பாலுடன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

11.      உணவு செரிக்க:

வெற்றிலையில் இரும்புச்சத்தும், ஜீரணச்சத்தும் உள்ளது. ஆதலால் உண்டபின் வெற்றிலை போடுவது நல்லது.

12.     ரத்தம் சுத்தம் பெற, ரத்தம் விருத்தியாக:

தினமும் அருகம்புல் பானம் அருந்தி வந்தால் ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த விருத்தி உண்டாகும். உள்வெளிப் புண்கள் ஆறும்.

 

It is possible to contact a message creator, but there are no profiles or http://www.topspying.com timelines that give clues into a person’s identity

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”

அதிகம் படித்தது