மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சித்த மருத்துவம்

ஆச்சாரி

Jul 1, 2013

1. உடல் பலவீனம் நீங்க : பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பலம்  பெரும்.

2. ரத்தம் சுத்தம் பெற : தினமும் அருகம்புல் பானம் குடித்து வந்தால் ரத்தம்  சுத்தமாவதோடு, ரத்த விருத்தியும் உண்டாகும்.

3. வயிற்றுபுண் குணமாக :மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு  வந்தால் வாய்ப்புண்னும், வயிற்றுப்புண்னும்                              குணமாகும்.

4. மூல நோய் தீர : புங்க மரத்துப் பட்டையை வேகவைத்து அந்த  நீரைக்   குடித்து வந்தால் மூலம் குணமாகும்.

5. இதய நோய் தீர :  மூன்று திராட்சைப் பழத்தை வெந்நீரில் ஊறவைத்து,   சாறு எடுத்து சம அளவு துளசிச் சாற்றை இதோடு  சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்,படபடப்பும்  குறையும்.

6. நரை முடி கருப்பாக: முளைக்கீரையை வாரம் ஒருநாள் தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால் நரை குறையும்.

7. உடல் வலிமை பெற: வேப்பம்பூவை கசாயம் வைத்துக் குடித்து வந்தால்  உடல் வலிமை பெரும்.

8. பற்கள் கெட்டி பெற; மாவிலையில் பற்களைத் தேய்த்து வந்தால்  பற்களின்  ஈறுகள் கெட்டிப்படும்.

9. ரத்த அழுத்தம் குறைய: தினமும் மீன் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம்  குறையும்.

10. உதிரப்போக்கு நிற்க: குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, 1 தேக்கரண்டி  சீரகம் சேர்ந்து அரைத்துப் பசும்பாலில் கலந்து                           சாப்பிட்டு வர ரத்தப் போக்கு நிற்கும்.

11. காசநோய் தீர:  தினமும் உணவில் அன்னாசிப் பழம் சேர்ந்து சாப்பிட்டு வர   காச நோய் தீரும்.

12. கண்பார்வை தெளிவடைய: இரண்டு முந்திரிப் பருப்பு, 1 தேக்கரண்டி   கசகசாவை அரைத்துப் பாலில் கலக்கிக் காலை                                வெளியில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை   கூர்மையாகும்,  சருமமும் மினுமினுப்பாகும்.

13. வெட்டுக்காயம் குணமாக: கண்ணாடித்துண்டால் நம் உடலில் காயம்  ஏற்ப்பட்டால், வாழைப்பழத்தை அந்தக் காயத்தின் மீது வைத்துக் கட்டினால் ரத்தப் போக்கு நின்று   காயம் விரைவில் ஆறும்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சித்த மருத்துவம்”

அதிகம் படித்தது