மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விரிப்போம் – செப்டம்பர் 2011

ஆச்சாரி

Sep 1, 2011

தமிழ் நாட்டில் மட்டுமல்லாது மொத்த இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதும் ஒரு விடயத்தை நாம் காண முடியும். அது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட கூட்டம் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை தொந்தரவு செய்து தமக்கு சாதகமாக காரியங்களை சாதிப்பது. பெருவாரியான பொது மக்களின் நலனுக்காக இதனை செய்தால் அதனை பாராட்டிப் புகழலாம். ஆனால் பொது மக்களின் நலனுக்கு எதிராக இது போன்ற காரியங்கள் நடந்தால்,அதுவும் அதி ரகசியமாக நடந்தால் இதனை எப்படி தடுப்பது என்பது தான் கேள்வி. இயற்கை வளங்கள் மொத்த சமுதாயத்துக்கும் பொதுவான சொத்து, அதனை ஒரு சிறிய கூட்டம் கொள்ளையிட்டு பணம் பெற்று வளம் பெறுவதற்காக சட்டத்தையும் அரசையும் வளைத்தால் அதனை எப்படி எதிர்கொள்வது?

தமிழகத்தின் புகைவண்டி சேவையை எடுத்துக்கொண்டால் மிக மோசமான நிலையில் இருப்பது குன்றின் மேலிட்ட விளக்கு, ஆனால் சாலைகளும், பேருந்து போக்குவரத்தும் மிக அதிகமாக இருக்கிறது, சாலைப் போக்குவரத்து முழுதும் எண்ணை வளங்களை நம்பி இருப்பது யாவரும் அறிந்த விடயம், இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு கேடு, மேலும் தினம் அதிகரிக்கும் எண்ணை விலையால் ஏற்படும் கொடுமையான பாதிப்பு. புகைவண்டி சேவையானது தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களையும் இணைத்து இருக்க வேண்டும். அதுவும் மின்மயமாக்கப் பட்டதாக இருக்க வேண்டும். இதனை நடக்க விடாமல் தடுப்பது யார், தமிழ் நாடு முழுக்க இருக்கும் பேருந்து முதலாளிகள் கூட்டம் ஒன்றாக சேர்ந்து கொண்டு புகைவண்டி சேவையை தடுத்துக் கொண்டு உள்ளனர். கொட்டும் பணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் மக்களையும் சூழலையும் அழிக்கின்றனர்.

தமது சாதியை சேர்ந்த அரசு அதிகாரிகள், முதலாளிகள், அரசியல்வாதிகள் என்று கூட்டு சேர்ந்து கொண்டு அதன் மூலம் அரசை அழுத்தம் தந்து காரியம் சாதித்துக் கொள்ளும் கூட்டம் இன்று ஏராளம். இது போல மதம் சார்ந்த கூட்டம், தொழில் சார்ந்த கூட்டம், கட்சி சார்ந்த கூட்டம் என்று இணைந்து கொண்டு மக்களை கொள்ளையிடுவதோ அல்லது அவர்களுக்கு வரவேண்டிய வசதிகளை தடுப்பதோ என்று சுயநலமிகள் சுரண்டி வருகின்றனர், பெருகி வரும் இந்த ஒட்டுண்ணிகளை இனம் கண்டு அழிப்பது நம் இன்றியமையாத கடமையாகும். இது குறித்த விழிப்புணர்ச்சியும், தெளிவும் மக்களுக்கு ஏற்பட வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.

Line spacing double-space the text order essays online cheap by www.order-essay-online.net/ uniformly throughout the manuscript, with the exception of footnotes, quotations, etc

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சிறகு விரிப்போம் – செப்டம்பர் 2011”
  1. suresh kumar says:

    There is no possiblity private railway station. becouse if any business people not earing or profit to long term.

  2. ராஜபாளாயத்தான் says:

    இந்த செய்தி நானும் என் நண்பர்கள் மூலம் தெரிய வந்தேன். இந்த செய்தி உண்மைய / பொய்யா? உண்மை எனில் இதனை சரி செய்ய சராசரி மனிதன் (என்னை போன்றோர் ) செய்ய வேண்டிய பணி என்ன. பத்திரிக்கை சமுதாயம் கேள்வி கேட்பதுடன் இல்லாமல் பதிலும் சொல்லுமாறு வேண்டுகிறேன் .தனியார் புகை வண்டி, தமிழகத்தில் (இந்தியாவில்) சத்தியமா !!!

அதிகம் படித்தது