மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விரிப்போம் ஜூன் 2011

ஆச்சாரி

Jun 4, 2011

தமிழர்களிடையே அறிவார்ந்த சிந்தனை பெருக வேண்டுமானால், மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், தமிழர்களாகிய நாம் சாதாரண நிகழ்வுகளுக்கும், மனிதர்களுக்கும் அதிமுக்கியம் தருவதை முதலில்நிறுத்த வேண்டும்.

 

சென்ற மாதத்தில் புதிய ஒரு அரசாங்கம் பொறுப்பேற்று இருக்கிறது, செயல்பாடுகள் இனி தான் தெரியவரும், அதற்குள்ளாக தேவையற்ற ஆர்ப்பாட்டங்களும், புகழுரைகளும், மதிப்பீடுகளும் ஆரம்பித்துவிட்டன. ஏதோ பெரிய புரட்சி நடந்து புத்தெழுச்சி கண்டுவிட்டார் போல, ஊடகங்கள் உட்பட, பலரும் ஆர்ப்பரிப்பதை காண முடிகிறது.

 

ஒரு கூட்டத்தின் மீது இருக்கும் வன்மமும், கோபமும் மற்றொரு கூட்டத்திற்கு ஆதரவளிக்க தூண்டுதலாக இருக்கிறது. ஒரு தனி நபர் மீது இருக்கும் வெறுப்பு, மற்றொரு தனி நபருக்கு துதி பாட வைக்கிறது. இது போன்ற, துதிகளால் தான் பணியாற்ற வேண்டியவர்கள் புகழ் போதையில் மயங்கி, தவறு மேல் தவறு செய்கிறார்கள். சிந்தனையும், செயலும் வளர வேண்டிய இடத்தில் நிந்தனையும், சொல்லாடல்களும் வளர்கின்றன. சலுகைகளும், வசதிகளும் சமூகத்தில் ஒரு சிலரிடம் சென்று குவிகின்றது. தவறான அதிகார பிரயோகம், பண பலத்தால் காரியமாற்றுதல், செல்வாக்கை தவறாக பயன்படுத்துதல் போன்றவை அதிகரிக்கிறது.

 

ஆகையால் அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், சாமியார்கள் இவர்களுக்கு வாய்வலிக்கப் புகழ் பாடுவதை நிறுத்துவோம். ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள், தமிழறிஞர்கள், சமூகசேவகர்கள், விஞ்ஞானிகள் போன்றவரை போற்றி சமூக மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழிவகுப்போம்.

 

Students http://www.cheephomeworkhelp.com/ can be skillful about memorizingbut its in the use of that knowledge that I can determine what they truly understand

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சிறகு விரிப்போம் ஜூன் 2011”
  1. Kanian says:

    hi
    Please check the ‘Kusumbu’ here. We must have enough source to stop this type of nonsense.

    http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_26.html

    by
    Kanian (Venkat)

அதிகம் படித்தது