மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விவரம்

இன்றைய நாளில் ஊடகங்கள் தமிழகத்தில் பல்கி பெருகி விட்டன, பல்வேறு வடிவங்களில் அவை மக்களை அடைகின்றன. ஆனாலும் தமிழர் சமுதாயத்தை ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் களத்தில் நின்று, பணியாற்ற வேண்டிய ஊடகங்களின்  தேவை அதிகமாகவே உள்ளது.

உண்மைகள் தலைதூக்கவும், நீதி நிலைபெறவும், நியாயங்கள் கிடைக்கவும், ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பல்வேறு நேரங்களில் சமூக பிரச்னைகள் சரியான முறையில் ஆய்வு செய்து தீர்வுகளை மக்கள் முன் வைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மக்களின் உண்மையான பிரச்சினைகள் பொழுது போக்கு விடயங்களாலும், அர்த்தமற்ற சர்ச்சைகளினாலும் மறைக்கப்படும்போது அந்தப் போக்கை விலக்கி உண்மையான பிரச்சனைகளை ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மக்களைப் பாதிக்கும் முடிவுகள் எடுக்கப்படும் பொழுது சாதக பாதகங்களை அலசி, தொலைநோக்குடன் அவற்றின் தாக்கங்கள் முன் வைக்கப்படவேண்டும். தனிமனித விருப்பு வெறுப்பு இன்றி, ஒரு குறிப்பிட்ட சார்பில் செயல்படாமல், அனைவருக்கும் பொதுவான உண்மையை மட்டுமே பறை சாற்ற வேண்டும்.

ஆக இது போன்ற இடைவெளிகளை தகர்த்து, மக்களுக்கு உண்மைகளை விளக்கி, நன்மைகளை செய்ய தொடங்கப்பட்டதே சிறகு இதழ்.  இன்று செடியாக ஊன்றப்படும் இந்த இதழ் வளர்ந்து பெருமரமாகி, விழுதூன்றி நெடுங்காலம் நிழல் பரப்பும் என்ற அசைக்கமுடியா நம்பிக்கையுடன் தொடங்குகிறோம்.

உங்கள் ஆதரவும் ஊக்கமும் எங்களை மென்மேலும் வலுப்படுத்தும்.

Fewer and fewer future members of the workforce are able to educate themselves beyond homework-writer.com/ high school