மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறுதானியங்கள் மற்றும் சத்துப்பட்டியல்

ஆச்சாரி

Dec 7, 2013
  • சிறு தானியங்கள் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய முக்கிய உணவுப்பொருட்கள் ஆகும்.
  • அரிசி, கோதுமையை விடச் சிறு தானியங்களில் அனைத்துச் சத்துக்களும் நிரம்பி காணப்படுகின்றன.
  • அரிசியை விடச் சராசரியாக 12% க்கும் அதிகமாகப் புரதம் சிறு தானியங்களில் உள்ளது.
  • 100 கிராம் சமைத்த சிறு தானிய உணவில் 6 கிராம் புரதச்சத்து உள்ளது.
  • உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் தேவையான அளவு காணப்படுகின்றன.
  • இரவு நேரச் சிறு தானிய உணவு நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கிறது.
  • சிறு தானிய உணவுகள் இதயம் சார்ந்த (Cardio vascular) நோய்களுக்கு சிறந்தது.
  • விட்டமின் ‘பி’ அதிக அளவில் காணப்படுகிறது. நமது உடம்பிலுள்ள கார்போஹைட்ரேட்டை சமன்படுத்தவும், தேவையான கொழுப்பைத் தரவும் விட்டமின் ‘பி’ தேவைப்படுகிறது.
  • சிறு தானியங்களில் விட்டமின் பி6, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் (Zinc), தாமிரம் (Copper), மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது.
  • மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்து இரத்த அழுத்தத்தைச் சீராக்கப் பயன்படுகிறது. சிறுதானியத்திலுள்ள தாமிரச்சத்து, இரும்புச் சத்து இரத்த சுழற்சிக்குப் பயன்படுகிறது.
  • சிறு தானியத்திலுள்ள துத்தநாகம், மேங்கனீஸ் இரத்தக்குழாய்களைப் பாதுகாத்துச் சருமம் மற்றும் நரம்பு செல்களையும் பாதுகாத்து ஒழுங்கான சீரணத்திற்கு வழிவகுத்து, நமது உடம்பில் கேன்சர் போன்ற கொடிய நோய்களை வராமல் தடுக்கிறது.
  • நமது உடம்புக்குத் தேவையான (HDL) நல்ல கொழுப்பு சிறு தானியம் மூலம் மிக அதிகமாக கிடைக்கிறது.
  • தைராய்டு, தைராக்சின் பெர்ராக்ஸைடு (Thyroid Peroxide) சிறு தானியங்களில் இருப்பதால் தைராய்டு கட்டுப்படுத்தப்படுகிறது.
  • நீரிழிவு நோயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்து சிறுதானியங்களில் காணப்படுகிறது.  

சிறு தானியங்கள்

புரதச்சத்து(கிராம்)

கால்சியம்(கிராம்)

நார்ச்சத்து(கிராம்)

இரும்புச்சத்து(கிராம்)

வரகு 8.3 27.0 9.0 0.5
சாமை 7.7 17.0 7.6 9.3
திணை 12.3 31.0 8.0 2.8
குதிரைவாலி 11.2 11.0 10.1 15.2
சோளம் 7.87 12.00 6.6 2.99
கம்பு 10.6 38.0 1.3 16.9
கேழ்வரகு 7.3 343.0 3.6 3.9
அரிசி 6.8 10.0 0.2 0.7
கோதுமை 11.8 41.0 1.2 5.3

 மேற்கண்ட பட்டியலைக் கவனித்தால் சிறுதானியங்களில் அரிசி, கோதுமையை விட நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல், மூலநோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கும். இந்தப் பட்டியலைப் படித்த பிறகாவது நம் தமிழ் உறவுகள் அன்றாட உணவில் இவ்வுணவுகளைச் சேர்த்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

As parents, the most frightening aspect of the peeple app is that anyone can http://topspyingapps.com/ add a new user to the system and the profile can’t be removed

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சிறுதானியங்கள் மற்றும் சத்துப்பட்டியல்”
  1. மகேஸ்வரன் says:

    அய்யா,
    நன்மை பயக்கும் இந்த தானியங்கள் தெருவில் கிடக்கின்றன, நாம் அணியும் செருப்பு, ஆடைகள் குளிர்சாதன அறையில் இருக்கின்றன, இதை எப்படி சொல்வது என்றால் நம்ம சொந்த காசில் நாமே சூனியம் வைத்துக் கொள்கிறோம்,

    தங்கள் தகவல்களுக்கு நன்றி

  2. பத்ரி நாராயணன். மா says:

    அய்யா,
    தங்களுடைய பதிவு மிக மிக அருமையாக உள்ளது
    ஆனால் நம் மக்கள் அதனை புரிந்து கொள்வதில்லை
    நம் மக்கள் செருப்பு வாங்க காட்டும் அக்கறை உணவு பொருள் வாங்க காட்டுவதில்லை என்பது
    மிக வேதனையான விசயம்.

அதிகம் படித்தது