மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னையில் இயந்திரவியல் சிறுதொழில் நிறுவனங்கள் – அழிந்ததற்கான காரணங்களும் – மீட்சிக்கான யோசனைகளும்

ஆச்சாரி

Nov 23, 2013

பிரபலமாக முன்பு சென்னையில் இயங்கி வந்த இயந்திரவியல் சார்ந்த நிறுவனங்கள் பல இன்று அழிந்து விட்டன அவை இருந்த இடத்தை பிற துறை நிறுவனங்கள் நிரப்பி விட்டன. இதனை நாம் ஆராய்ச்சி செய்யும் பொழுது பல காரணங்கள் புலப்படுகின்றன. முதலாவதாக இன்று எல்லாமுமே உலகமயமாக்கப்பட்டிருக்கிறது. உலகமயமாக்கும்போது அதற்கான தயார் நிலையில் நாம் இல்லை என்பதுதான் முக்கிய காரணம். மேலும் இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக (Small Scale Industries) குறுந்தொழில் செய்பவர்கள் மிகமிக பழைய தொழில் நுட்ப முறையையே பின்பற்றி வந்திருக்கின்றனர்.

இதில் பெரிய நிறுவனங்களில் இன்று தப்பிப் பிழைத்தவர்களைக் காண்போமானால் ஒரு உண்மை புலப்படும். இவர்கள் மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றுகின்றனர். இந்த நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக, புதிய தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்தியதாலும், சரியான செயல்முறைகளைப் பின்பற்றுவதினாலும் இவர்களால் இன்று நிற்க முடிகிறது.

மேலும் முக்கிய காரணம் என்னவென்றால் ஒரு தொழிலை நடத்துபவரின் மேற்பார்வை மிக முக்கியம். இவர் இங்கு இருக்கும் பிரச்சனைகளைச் சரிசெய்து மேம்பட நிறுவனத்தை நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததும் அழிவுக்கு முக்கிய காரணம் ஆகும்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டும் என்றால் ஒரு நிறுவனம் தொடங்கி 5 வருடம் வரை முன்னிலை வகிக்கும் அளவிற்கு இந்த நிறுவனத்தைக் கொண்டுவருவர். ஏன் லாபகரமானதாகக் கூட கொண்டு வருவார்கள். 5 வருடத்திற்குப் பிறகு ஒரு மேளாளரை இந்நிறுவனத்திற்கு நியமித்து அவரிடம் முழுப்பொறுப்பையும் ஒப்படைத்து விடுவார்கள். இதுதான் மிகமுக்கியமான விசயமாகும். எப்பவுமே இந்தத் தொழிலில் இருப்பவர்கள் தான் எப்பொழுதும் முன்னிலை வகித்து நிறுவனத்தை நிர்வகிக்க வேண்டும். இதுவும் ஒரு காரணமாகும்.

இன்று இயந்திரவியலில் விலைவாசி ஏற்றம் இருப்பதால், விலைவாசி ஏற்றத்திற்குத் தகுந்தாற்போல் உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும். செலவை எப்படிக்குறைப்பது என்று பார்த்தோமானால் முக்கியமாகத் தொடர்ந்து பயிற்சியளிக்கப்பட வேண்டும்.

நிறுவனத்தில் முதல் நாளில் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் தொழிலாளர்களிடம் நல்ல முன்னேற்றம் இருக்க வேண்டும். இதனால் நிறுவனமே வளர்ந்திருந்த நிலையில் இருக்கவேண்டும். நிறுவன முன்னேற்றம் என்பது செயல்முறையிலேயே செய்துவரவேண்டும். அவ்வாறு தொடர்ச்சியாக நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்சென்றால் தான் செலவுகள் குறையும். இன்று 10 ரூபாய்க்கு ஒரு பொருளை செய்து அதனை 12 ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்றால் அடுத்த வருடம் இதே பொருளை நீங்கள் 9 ரூபாய்க்கு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். அடுத்தவருடம் 8 ரூபாய்க்கு செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். அதே போல் அன்றைக்குத் தேவைப்பட்டால் 12 ரூபாய் பொருளை 10 ரூபாய்க்கு குறைத்து விற்கவும் தயாராக இருக்க வேண்டும். இந்த விசயங்கள் இல்லாமல் இருப்பதுதான் குறுந்தொழில் அழிய முக்கிய காரணமாகின்றன.

ஒரு வாடிக்கையாளர் தனக்கென பொருள் வாங்க முன்பதிவு செய்யும் போது, சந்தை நிலையாக இருப்பது போல் இருக்கும். தொடர்ந்து நிலையாகவே இருக்கும் என்று கூற முடியாது. இதற்கு நிறுவனத்தார் முன் கூட்டியே சிந்தித்து, சந்தைப் பகுப்பாய்வை (Market Analysis) மேற்கொள்ள வேண்டும். இன்னும் எளிமையாகக் கூற வேண்டும் என்றால் இன்றைக்கு என்ன தேவையோ அந்தத் தேவையை குறைந்த விலைக்கு செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

முக்கியமாக (I.S.O) இந்திய தர நிர்ணயப் பிரசுரம் பார்த்தோமென்றால் இந்தச் சான்றிதழை பல நிறுவனங்கள் வாங்கிவிடுகின்றனர். ஆனால் இந்த (I.S.O) இந்திய தர நிர்ணய மையத்தில் என்ன விதிமுறைகள் கூறி இருக்கிறார்களோ அதை பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

இந்தியத்தர நிர்ணய மையத்தில் (I.S.O) -ல் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால் நிறுவனத்தில் பொருளைத் தயாரிக்கிறோம் என்றால் (Rework Cost) -ஐ மறுஉற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டும்,

Scrap Cost-ஐ குறைக்க வேண்டும். அதேபோல் செய்யும் பணியை விரைவாகச் செய்ய வேண்டும், உற்பத்தியையும் பெருக்க வேண்டும். இதற்காக ஒரு நிறுவனத்தில் உள்ள (H.R. Department) மனிதஉரிமைப்பிரிவு (Account Department) கணக்குப்பதிவியல் பிரிவு, உற்பத்திப்பிரிவு, Maintenance Department , Quality Department  இந்தப் பிரிவுகளில் இருக்கும் பொறியியல் வல்லுனர்கள் அனைவருமே திறமையாக வேலை செய்ய வைத்து இந்த இந்தப் பிரிவுகளில், இந்த இந்த வேலை உனது வேலை என்று பிரித்துக் கொடுத்து சரியாக வேலை செய்தார்களேயானால் இன்று பல நிறுவனங்கள் அழிந்திருக்காது. இந்தக் காரணங்களால் தான் பல முக்கிய நிறுவனங்கள் அழிந்திருக்கிறது எனக் கூறலாம்.

இன்று எடுத்துக்கொண்டோமானால் பெரிய நிறுவனம் முதல் உதிரிப்பாகங்கள் விநியோகம் செய்து கொடுக்கும் சிறு நிறுவனங்கள் அழிந்திருக்கின்றன. முக்கியமாக பெரிய நிறுவனங்களுக்கு சிறு சிறு பாகத்தை விநியோகம் செய்து கொடுக்கின்ற (Sub Contractor) துணை நிறுவனங்களே அழிந்து போயிருக்கின்றன. எடுத்துக்காட்டாக சென்னையிலுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதி. இந்தப் பகுதியில் முன்பு இருந்த 75 சதவீத நிறுவனங்கள் இன்று இல்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆரம்பித்ததே எந்திரவியலுக்காகத்தான் ஆரம்பித்தார்கள். ஆனால் இன்று எந்திரவியல் இல்லை என்பதை கண்கூடாகக் காணலாம். அம்பத்தூரில் இன்று பழைய நிறுவனங்கள் அழிந்து இன்று அனைத்தும் ஐ.டி என்ற எனக் கூறப்படும் தகவல் தொழில் நுட்பத்துறைகளே எங்கும் வியாபித்து நிற்கின்றன. இவைகள் இன்று நூற்றுக்கணக்கில் முளைத்து நிற்கின்றன.

தற்போது இதன் தொடர்ச்சியாக மற்றக் காரணங்கள் என்னென்ன என்று பார்த்தோமானால் நம் நாட்டுக்கு இறக்குமதியாகும் பொருட்களில் 10-ல் இரண்டு மடங்கு விலையில் அவர்கள் தருகிறார்கள். இதற்கு உதாரணம் கூறவேண்டும் என்றால் சைனாவைக் கூறலாம். இரும்பில் சைனா தரக்கூடிய இரும்பாகட்டும், அந்தப்பொருளின் மொத்த விலையாகட்டும் எல்லாவற்றிலும் 10-ல் 2 மடங்கிலேயே பொருளின் விலையில் தரமுடிகிறது. இன்று (Supplier) விநியோகிப்பவர்கள் அழிந்தார்கள் என்றால் இவர்கள் தயாரிக்கும் பொருளின் விலை 10 ரூபாய்க்கு விற்கின்றனர். இதை வாங்கித்தான் பெரிய நிறுவனங்கள் பொருட்களைச் செய்கின்றன.

இச்சூழலில் சைனாவில் இருந்து வரும் பொருள் இரண்டு ரூபாய்க்கு வருகிறது என்றால் இங்குள்ளவர்கள் 10 ரூபாய் கொடுத்துப் பொருள் வாங்குவார்களா? இரண்டு ரூபாய் கொடுத்து வாங்குவார்களா? நிச்சயமாக இரண்டு ரூபாய் கொடுத்துத்தான் வாங்குவார்கள். தரத்தில் இவர்களது பொருள் குறைவாக இருந்தாலும், 2 ரூபாயில் வாங்கிய பொருள் 10 நாளில் செயல்படாவிட்டாலும் 10 ரூபாயில் வாங்கிய பொருள் 30 நாள் வரை வந்தாலும் 3 முறை இரண்டு ரூபாய் பொருளையே வாங்கிக் கொள்வர்.

அதனால் இதுவும் ஒரு முக்கிய காரணம். இதைத் தடுக்கவும் முடியாது. எப்போது நாம் உலகமயமாக்கல் கொள்கைக்கு வந்துவிட்டோமோ நாம் இந்தக் கொள்கையினால் அழியாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ? அதற்கான முயற்சியில் நாம் இறங்க வேண்டும். இந்த முயற்சிக்கு அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்றாலும், அவரவர் தனிப்பட்ட முயற்சியால் திட்டவட்டமான ஒழுங்கு முறையை கடைபிடிக்க வேண்டும். இதுபோல் திட்டவட்டமான ஒழுங்கு முறையை நாம் பின்பற்றினாலே போதும் இன்று இல்லாவிட்டாலும் நாளை சிறு சிறு இயந்திரவியல் துறை முன்னேற்றம் காணும்.

இன்றுள்ள இந்த நிலையை நாம் தொடர்ந்தால் முழுமையாக நமக்கென்று எதுவும் இல்லாமல் போய்விடும். இன்று இங்கு பொருட்களைத் தயாரிக்க ஆட்கள் இல்லை என்றால் சைனா போன்ற நாடுகள் தயாரிக்கும். அப்போது இவர்களே விலையேற்றம் செய்வர். ஆதலால் நம் விலையை இப்போதிருந்தே எப்படிக் குறைப்பது என்ற முயற்சியில் இறங்கினால் இந்த அழிவிலிந்து நாம் மீளமுடியும்.

அடுத்ததாக, இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமானதாகும். உலகமயமான திட்டங்களும், உலகமயமான நிறுவனங்களும் இன்று வந்துவிட்டதால் சிக்கனம் தேவையான ஒன்றாகி விட்டது. இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்கும், குடும்பத்திலும், சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

தற்போது நிறுவனங்களில் எப்படி எல்லாம் சிக்கனப்படுத்தலாம் என்றால் பல வழிமுறைகள் இருக்கிறது. நம் இந்தியா சிக்கனத்தை நன்கு கடைபிடித்து வந்த நிலையில் உள்ள நாடாகும். சிக்கனமாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் வேண்டும்.

இன்று Production நிறுவனமாக இருந்தாலும் சரி, Service நிறுவனமாக இருந்தாலும் சரி செலவுகள் எங்கு அதிகமாகிறது என்பதை ஒரு பட்டியல் இடவேண்டும். எவ்வளவு முதலீடு செய்கிறோம்? எவ்வளவு செலவு செய்கிறோம்? என்பது நமக்குத் தெரியும். அந்த செலவுகளின் பட்டியலை முதலில் பிரித்துக்கொள்ள வேண்டும்.

இந்தச்செலவுப் பட்டியலை எப்படிப் பிரிக்க வேண்டும் என்றால் உதாரணமாக தொழிலாளர்களுக்குக் கொடுத்த செலவுகள்,  சம்பளம் என்ன கொடுக்கிறோம்? இதற்கான பட்டியல், பொருள் வாங்கி, இந்தப் பொருளை வேறாக மாற்றுகிறோம். ஒரு பொருளை மாற்றம் செய்யும்போது, ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்குகிறோம், இதைச் செய்வதற்கு 15 ரூபாய் ஆகிறது என்றால், 5 ரூபாய் செலவு பண்ணி செய்கிறோம். இந்த 5 ரூபாய் செலவு பண்ணி செய்வதில் பார்த்தீர்கள் என்றால் குறைந்தது 50 காசிலிருந்து 1 ரூபாய் வரை பார்த்தால் இதர செலவுகள் வரும். இதைத் தேவை இல்லாச் செலவுகள் என்று கூறுவார்கள்.

இதற்கு உதாரணமாக Rework, Scrap இந்த மாதிரி பயனற்ற (waste) எனக்கூறுவார்கள், இந்தத் தேவையில்லாச் செலவுகளைக் கண்டுபிடித்தாலே நமக்கு நிறைய லாபங்கள் ஈட்டித் தரக்கூடிய சிக்கனம் வந்துவிடும். மற்றொன்று முயற்சி. சிக்கனம் என்று நாம் சொல்லிவிடுவதால் சிக்கனம் வந்துவிடாது. தொடர்ந்து சிக்கனம் என்ற இந்த விசயத்தை பின்பற்ற வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் எத்தனை தொழிலாளர்கள் பணி செய்கிறார்களோ அத்தனை தொழிலாளர்களிடமிருந்து சிக்கனப்படுத்துவதற்கான யோசனைகளைக் கேட்க வேண்டும். நேரடியாகவே இவர்களிடம் சென்று எப்படிப் பண்ணலாம்? எனக் கேட்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். இதன் மூலமாகத்தான் ஒரு வளர்ச்சியைக் கொண்டுவரமுடியும்.

தொடர்ச்சியான வளர்ச்சியைப் பார்த்தோமென்றால் எங்கெல்லாம் செலவுகள் அதிகம் இருக்கின்றதோ? அதில் முதலில் அதிகச்செலவு பிடித்தது எது? இரண்டாவது அதிகச் செலவு பிடித்தது எது? எனக்கண்டு இந்தச் செலவுகளைக் குறைக்க முடியுமா? முடியாதா? என ஆராய வேண்டும். எதையுமே குறைக்க முடியாது என்ற அளவிற்கு நாம் வைத்துக்கொள்ளக்கூடாது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. அதனால் இச்செலவை கண்டிப்பாகக் குறைக்க முடியும். அப்படிச் செலவைக் குறைக்க முனையும் போது இதற்கொரு  திட்டம் (Project)  மாதிரி பண்ண வேண்டும்.

Project என்பது எளிமையாக ஒரு குழுவை உருவாக்கி அதன் மூலம் சிக்கனச் செயல்பாட்டைத் தொடங்கலாம். குழு நிர்ணயம் எனும் போது ஒரு நிறுவனத்தில் Operator இருப்பார்கள்? பொறியியல் வல்லுனர்கள் இருப்பார்கள், மேளாளர்கள் இருப்பார்கள். இதுபோல் பலதரப்பட்ட நிலையில் பணி செய்யக்கூடியவர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான Project -ஐ பிரித்துக்கொடுக்கலாம்.

இப்போது Project என்றால் (Small Group Activity) சிறு குழுச்செயல்பாடு எனக் கூறுவார்கள். சிறுகுழுச் செயல்பாடு என்பது என்னவென்றால் Operator level-லயே சிறு சிறு குழுவாகப் பிரிந்து இவர்களின் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இவர்களின் அன்றாடச் செலவுகளை எப்படிச் சிக்கனப்படுத்துவது எனப்பார்க்க வேண்டும்.

பொறியியல் வல்லுனர்களைப் பொருத்தவரை தாராளமாக அதிகச்செலவு செய்யும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் இவர்களுக்கு இருக்கும் (Project) திட்டச்செயல்பாடு வேறாக இருக்கும். இவர்களிடமும் இந்தச் சிக்கனக் கொள்கையைப் பின்பற்றச் செய்ய வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் 100 பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றால் இதில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை இணைத்து ஐந்து, ஐந்து குழுவாகப் பிரிக்கலாம். அப்போது இவர்களுக்கு நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனைகளைத் தெரிவிக்க வேண்டும். இதில் நாம் ஒரு பிரச்சனையைக் கொடுக்கிறோம் என்றால் அவர்கள் சார்ந்த பிரச்சனையும் அறிந்து கொடுக்க வேண்டும். ஏன் இவர்கள் அளவிலும் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். இதில் சில பிரச்சனைகளை நாம் கொடுக்கலாம். சில பிரச்சனைகளை அவர்களேயே தேர்ந்தெடுக்கச் சொல்லலாம். இந்த இரண்டு வழிமுறைக்கொடுத்தால் அவர்கள் இதில் முனைந்து சிக்கனச் செயல்பாட்டில் இறங்குவர். இதையே (Small Group Activity) சிறுகுழுச்செயல்பாடு என்பர். அதாவது Operator அளவில் பிண்ணக்கூடியது.

இரண்டாவது Quality Circle ஆகும். இது மிக எளிமையான Scientific tool என்பர். அதாவது அறிவியல் சார்ந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடியதாகும். இதில் Operator மூன்றுபேரும் பொறியியல் வல்லுனர்களும், Technician-களும், Inspector -களும் இருப்பர். இவர்களெல்லாம் இணைந்து சிக்கனத்திற்கான செயல்பாட்டில் இறங்குவர்.

அடுத்தது மேளாளர்கள் அளவில் செய்யக்கூடியது. இவர்கள் Quality level-லயும் சேருவார்கள். இதை சிக்சிக்மா எனக் கூறுவார்கள். சிக்சிக்மா என்பது பெரிய அளவில் பேசப்படுவதாகும். இது ஒரு பெரிய நுட்பம் ஆகும். இன்று சிறு துளி பெருவெள்ளம்  என்பதைப்போல முதலில் இதற்கு முயற்சி எடுப்பதே முதல் முக்கியமாகும். இன்றைக்கு நாம் சிக்கனமாக இருக்கப்போகிறோம் என நினைத்துச் செயல்படுவதே இதற்கான முதல் வித்தாகும். இந்த வித்திலிருந்துதான் செடி வளர்ந்து, பின் ஆலமரமாகி, விழுதுவிடும் செயலாகும். இதில் பல படிநிலைகள் உள்ளன.

இந்தச் செயல்பாடுகளில் குறைந்தது 10 நிமிடத்திற்கு மேல் நாம் காலத்தை விரயம் பண்ணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் எட்டுமணி நேரம் வேலை செய்கிறார்கள் என்றால் இந்தப் பணியை அவர்கள் செய்யும் காலஅளவு 10 நிமிடமாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் பின்பு இவரின் பிரதானப் பணிகளை இதனால் செய்ய முடியாமல் போய்விடும்.

சிக்கன நடவடிக்கைக்கான செயல்பாட்டில் இறங்கும்போது இதற்கென்று அதிக காலநேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்தப் 10 நிமிடத்தில் அவர்களை எப்படிப் பண்ண வைப்பது? இதில் இவர்கள் தவறு செய்தால் என்ன செய்வது? இதற்காக நாம் சேர்த்துவிடுகிறோம் என்றால் இதற்கான பலன் வரவேண்டுமல்லவா? ஆதனால் இதற்காக Incentive- மாதிரி செய்யவேண்டும். எதையும் இன்று எதைப் பணியாளர்கள் விரும்புகிறார்கள் என்று அறுதியிட்டு கூறமுடியாது. காரணம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் விருப்பங்கள் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் சிலருக்குப் பணம் கொடுத்தால் அது பெரியதாகத் தெரியும். சிலருக்கு சான்றிதழ் கொடுத்தால் பெரியதாகத் தெரியும். இதனால் இந்த நிறுவத்தில் இந்த நேரத்தில் இங்கு எதைச் செய்தால் சரியாக இருக்கும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

இதை பணியாளர்களுக்கு ஏற்றாற்போல் செயல்படுத்த வேண்டும். இதை நிர்ணயித்து அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாம். உனக்குப் பணம் வேண்டுமென்றால் பணம் வாங்கிக்கொள், சான்றிதழ் வேண்டும் என்றால் சான்றிதழ் வாங்கிக்கொள் என விட்டுவிட வேண்டும். இவ்வாறு அவர்களிடமே முடிவை விட்டுவிட்டால் அவர்களுக்கு எது தேவை? என அவர்களே முடிவெடுத்து இப்பணியை சிறப்பாகச் செய்வர். சிக்கனமாக இருப்பது எப்படி? என்று அனைவருக்குமே தெரியும். தனிப்பட்ட முறையில் எவ்வாறு சிக்கனமாக இருப்பது என்று அனைவருக்கும் தெரிந்தாலும், நிறுவனம் என்று வரும்போதுதான் சிக்கனம் என்றால் என்னவென்று தடுமாறுகிறோம்.

இவ்வாறு சிக்கன நடவடிக்கைகள் சந்தைப்பகுப்பாய்வு தொடர்பயிற்சி,புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், உலகலாவிய போட்டிகளை சமாளிக்கும் திட்டங்கள் என்று ஒரு நிறுவனம் பல கோணங்களில் கவனம் செலுத்தி அவற்றில் எல்லாம் சிறப்பாக செயலாற்றினால் மட்டுமே இன்றைய சந்தையில் நிலைத்து நிற்க முடியும். இல்லையேல் பிற நாடுகளில் குறைந்த விலை தயாரிப்புகள் நமது நிறுவனங்களை விழுங்கிவிடும். இதனை தமிழர்களாகிய நாம் உணர்ந்து சீறிய வகையில் செயல்பட்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம்.

The ancient http://pro-essay-writer.com aztec languages of mexico, in contrast, used only one word to mean snow, cold, and ice

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னையில் இயந்திரவியல் சிறுதொழில் நிறுவனங்கள் – அழிந்ததற்கான காரணங்களும் – மீட்சிக்கான யோசனைகளும்”

அதிகம் படித்தது