சென்னையில் ஒரு பெரு விழா
ஆச்சாரிFeb 1, 2014
சென்னையில் ஒரு பெரு விழா…, ஆம் புத்தக பெரு விழா…! 37-வது புத்தகக் கண்காட்சி தான் அது.. புத்தக வாசிப்பாளர்களுக்கு ஓர் திருவிழா. சனவரி 10-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி முடிய 13 நாட்கள் ஒரு பெரிய விழா போன்றே நடந்தேறியது. ஒரே இடத்தில் 700 கடைகள், 5 இலட்ச தலைப்புக்கள், 1 கோடி புத்தகங்கள் என நடைப்பெற்ற இந்த விழாவில் 10 இலட்சம் மக்கள் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்று உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2 இலட்சம் பேர் அதிகம் என புள்ளியல் விவரம் தெரிவித்துள்ளது.
புத்தக வாசிப்பாளர்கள் குறைந்து விட்டனர் என்ற கருத்து பரவலாக பேசப் படுகிறது. இதையெல்லாம் பொய் என நிரூபித்திருக்கிறார்கள் தமிழக புத்தக வாசகர்கள் . தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறு, குழந்தைக்கான மொழித்திறன் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளது.
இந்த ஆண்டு கூட்டம் அதிகரித்ததால் வாகனங்கள் நிறுத்த அருகிலுள்ள அரசு கல்லுரி மைதானம் பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்து வாசகர்களை இலவச பேருந்து மூலமும், நம்ம ஆட்டோ மூலமும் அழைத்து வர ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.
ஆண்களில் சிறுவர் முதல் இளைஞர், நடுத்தர வயதினர், முதியவர்கள் என எல்லா வயதினரும் வந்திருந்தனர். பெண்களில் நடுத்தர வயதினர் அதிகமாக வந்திருந்தார்கள். எல்லா வகையான நூல்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் வாசிப்பாளர்கள் அனைவரும் ஆர்வ மிகுதியால் தாங்கள் விரும்பும் புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கி குவித்தனர்.
இந்த ஆண்டு வெளி நாட்டிலிருந்து கூட வந்து வாங்கினார்கள் என்பதைக் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பள்ளிச் சிறுவர்கள் கூட ஆர்வத்துடன் வாங்குவதைப் பார்க்க முடிந்தது. அதில் ஒரு 10 வயது சிறுவன் தன தந்தையிடம் இரண்டு புத்தகங்கள் வாங்கி விட்டு மூன்றாவதாக ஒன்றைக் கேட்டான்.அதற்கு அவனது தாய் அடுத்த மாதம் உன் பிறந்தநாள் வருகிறது அதற்கு வேறு செலவு இருக்கிறது, அதனால் போதும் என்றார். என்ன ஒரு ஆச்சரியம் . அதற்கு அந்த சிறுவன் எனக்கு பிறந்தநாள் புது ஆடை வேண்டாம் . அதற்கு பதில் இந்த புத்தகம் வாங்கி தாருங்கள் என் கேட்டு அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்தான்.
ஒரு நாளில் எல்லா புத்தகங்களையும் பார்க்க முடியவில்லை. வாய்ப்பு உள்ளவர்கள் நான்கைந்து முறை வருகின்றனர். ஆனாலும் இந்த 13 நாட்கள் போதவில்லை. விழாவை இன்னும் சில நாட்கள் கூட்டலாம் என்பது பல பேரின் வேண்டுகோள் .
புத்தகங்களை வாங்கிக் கொண்டு மனநிறைவுடன் அரங்கிலிருந்து வெளியில் வந்தால் தினமும் ஒரு தலைவர் அல்லது பிரபலமானவர்களின் பேச்சு, பட்டிமன்றம், நூல் வெளியீடு, என சில முக்கிய நிகழ்வுகளும் மக்களை உற்சாகப் படுத்தியது என்றால் மிகையில்லை, மேலும் சில சிற்றுண்டி கடைகளும் சற்று இளைப்பாற உதவியது.
தமிழகத்தின் அனைத்து மாநில தலைநகரங்களில் இதுபோன்ற புத்தக திருவிழாவிழாக்களை ஏற்பாடு செய்தால் புத்தக விரும்பிகள் பயனடைவார்கள்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கட்டுரை நன்றாக இருக்கிறது…..சில நல்ல புத்தகங்கள் அல்லது புதிய வரவுகள் இவை பற்றியும் சிறிது கூறி இருக்கலாம்…….பரிந்துரைத்திருக்கலாம்….நன்றி சகோ…நான்…வாங்கிய புத்தகங்கள் சில… குறிப்பாக இரோம் ஷர்மிளா…..மணிப்பூரின் வரலாறை ஓரளவு தெரிந்து கொள்ள வாய்ப்பு…இந்தப்புத்தகத்தைப்பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறேன்….