மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம்

ஆச்சாரி

May 1, 2012

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி பெரும்பாலான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தச் சட்டத்தால் என்ன பயன் என்றும் அந்தச் சட்டத்தை எப்படி பயன்படுத்துவது என்றும் நமது ‘சிறகு’ வாசகர்களுக்காக – வழக்கறிஞர் திரு. கிறிஸ்டோபர் அவர்கள் விளக்கம் அளித்தார். அவ்விளக்கம்:
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக் கூடைகளுக்குச் கூட செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால் 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு பொதுமக்கள் கேட்கும் தகவலைத் தர மறுத்தால் அரசு ஊழியர் சட்டத்தை மீறியவராகக் கருதப்படுவார். அவருக்கு தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

விண்ணப்ப மனு ஒரு வெள்ளைத் தாளில் கைகளால் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்து கொள்ளலாம். மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற வில்லையை ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாகக் கொடுக்க வேண்டும். இந்த நீதிமன்ற வில்லைகள், முத்திரைத்தாள் முகவர்களிடம் கிடைக்கும். நீதிமன்ற வளாகங்களிலும் கிடைக்கும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத் தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம் பெற வேண்டும்.
மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்க வேண்டும். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும். மனுக்களை நேரிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பலாம். தூதஞ்சல் (courier) மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு நகல் எடுத்து வைத்துக் கொண்டு அனுப்பிய பிறகு அஞ்சல் முத்திரையுடன் கூடிய ஆதாரச் சீட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.

வெளி நாடுகளில் வாழ்வோர் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக் கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் அதற்குண்டான முத்திரைக் கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.
பொதுத் தகவல் தொடர்பு அதிகாரியிடமிருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்தில் கிடைக்க வேண்டும். ஒரு நபரின் உயிர்ப் பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி தகவல் நேரத்தில் தர வேண்டும்.

நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்து கொள்ளலாம். உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்த வேண்டும்.

சாமானிய மக்கள் தாங்கள் அறிய விரும்பும் தகவல்களை உடனே தெரிந்துகொள்ள கொண்டுவரப்பட்டதே இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தின் மூலம் மக்கள் ஆட்சியின் மகத்துவம் உணர்த்தப்படுகிறது. நீங்கள் கேட்கும் தகவலைத் தர கடமைப்பட்டுள்ள அதிகாரிகள் உரிய பதிலைத் தர மறுத்தால் அவர் மீது வழக்குத் தொடுக்கலாம். இந்தச் சட்டத்தின் வழி பொதுமக்களுக்கு பல தகவல்களைப் பெற்றுத் தர தொண்டு நிறுவனங்கள் களப் பணி ஆற்றிவருகின்றன. இவைகளின் மூலமும் நாம் அறிய விரும்பும் தகவலைப் பெறலாம். எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி பலன் பெறுவோம்.

For example, if you know that your teen is spy cell phone sexting, you can talk about some recent sexting scandals that celebrities may be going through

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

11 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிவோம்”
  1. Anusuyaevi.R says:

    domestic vialence act sattappadi pathikkapatta manaivikku ena payan?
    Jeevanamsa valakku evvalu natkalil mudikalamnu irukka?

  2. vairamuthu says:

    scholarship apply panni ketaikkala yara poi pakkanum

  3. gopi says:

    dearsir
    how to original press repoter inentify
    pls tallme sir

  4. Charles says:

    எங்கள் ஊருக்கு அரசால் வழங்கப்படும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  5. Charles says:

    எங்கள் ஊருக்கு இலவச கேஸ் அடுப்பு அரசால் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  6. vinoth kumar says:

    my sister working in staff nurse.tirunelveli districtku transfer vanganum.vaganises placesa eappiti therincukanum. athuku yaara pakkanum.

  7. ஜாகிர் உசைன் says:

    இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகிறது இன்னும் விடை கிடைக்கவில்லை யாரை அனுகலாம்

  8. p.prakash thaveethu says:

    விதவை பென்சன் வாங்குபவர்கள் கேஸ் இணைப்பு பெறலாமா

  9. thangadurai says:

    why didnot give to business loans to youngters

  10. thangadurai says:

    how to reduce criminal cases.

அதிகம் படித்தது