தமிழரைத் தமிழராக்குவோம்
ஆச்சாரிSep 15, 2013
ஒரு உயரினத்திலிருந்து இன்னொரு உயரினம் பரிணமித்துச் செல்வதாகச் சொல்லப்படும் பரிணாம வளர்ச்சி மனிதனோடு நின்று விடுமா? மனிதனுக்குப் பிறகு அடுத்த கட்டப் பரிணாம வளர்ச்சி என்ன? இந்த கேள்விக்குப் பதிலாக ஜெர்மானிய அறிஞன் நீட்சே ‘மனித இனத்தில் இருந்து சூப்பர்மேன் தோன்றுவான். அவன் மனித குலத்தையே ஆட்சி செய்வான்’ என்ற ஒரு கருதுகோளை முன் வைத்தான். அந்தக் கருதுகோளை உண்மையென உள்வாங்கிக் கொண்ட இட்லர் ‘உலக இனங்களிலே உயர்ந்த இனம் ஆரிய இனம். அந்த ஆரிய இனத்தில் இருந்து தான் நீட்சே குறிப்பிடும் சூப்பர்மேன் தோன்ற முடியும். அந்த சூப்பர்மேன் தானே தான்’ எனக் கற்பித்துக் கொண்டு கடைசியில் தன் முடிவைத் தானே தேடிக் கொண்டான்.
ஆனால் தமிழர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்ன என்பதற்குத் தெளிவான விடையைக் கண்டறிந்து சொன்னார்கள்.
மிருகத்திலிருந்து வந்தவன் மனிதன் என்பதால் அவனுள் மிருக குணங்கள் நிச்சயம் இருக்கும். அந்த மிருக குணங்களை முற்றாகக் களைந்து, அன்பு, பாசம், நட்பு, காதல், ஈவு, இரக்கம், தியாகம் போன்ற அரும் பெருங்குணங்களைத் தன்னுள் வளர்த்துக் கொண்டு, தெய்வ நிலைக்கு மனிதன் தன் எண்ணம், சொல், செயலால் உயர்ந்துநிற்பதே மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி என்பதை அறுதியிட்டுச் சொன்னார்கள். இதனையே வள்ளுவர் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ எனச் சொல்லி சென்றார். எனவே மனிதனின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி உடலளவிலானது அல்ல, மனத்தளவிலானது என்பதை தமிழன் உணர்ந்து கொண்டான். அதனாலேயே வள்ளுவரும் மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறங்களுள் எல்லாம் சிறந்த அறம் என வலியுறுத்தினார். வள்ளுவன் வழியில் நின்று, இன்றளவும், உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனத்தளவில் கூட பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்க எண்ணாத பெருந்தகையாளர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மானுடம் போற்றும் அந்தத் தமிழனின் நிலை இன்று எப்படியிருக்கிறது?
ஈழத்தில் தமிழினம் முற்றுமாக அழிக்கப்பட்டுவிட்டது. எஞ்சியவர்கள் அங்கே அடிமைகளாய், கைதிகளாய், பிணைக் கைதிகளாய் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்த அவலத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தார்மீக கடமையுள்ள தமிழ்நாட்டின் நிலை என்ன? எந்தச் சிங்கள ராணுவம் ஈழத்தில் தமிழினத்தை அழித்து ஒழித்ததோ, அதே ராணுவத்தின் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்கை குருவிகளைச் சுட்டுக் கொல்வது போல் சுட்டுக் கொல்கிறது. சித்திரவதை செய்கிறது. சிறைப்படுத்துகிறது.
ஏனென்று கேட்க நாதியில்லாத நிலையில் தாயகத் தமிழனாம் மீனவன், தவித்துக் கொண்டிருக்கிறான். தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் யாரோடு யார் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திப்பது என்ற சிந்தனையைத் தவிர வேறு சிந்தனையே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் 1965 மொழி போராட்டத்திற்குப் பிறகு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாய் தன்னெழுச்சியாய்த் திரண்டெழுந்த மாணவர் சக்தி ஒரு அரசியல் சக்தியாகப் பரிணமித்து விடாமல் பார்த்துக் கொண்டதில் மட்டும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார்கள்.
ஈழத்தில் தமிழனுக்குப் பாதுகாப்பில்லை. உலகின் பலபாகங்களில் வாழும் தமிழனுக்கும் பாதுகாப்பில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழனுக்கும் பாதுகாப்பில்லை. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கே பாதுகாப்பில்லை.
எந்த வம்புதும்புக்கும் போகாத தமிழனத்தின் எந்த நல்லது கெட்டதிலும் பங்கெடுக்காத, தானுண்டு தன் பணியுண்டு என்று இருந்த ஜேம்ஸ் வசந்தன் என்ற பிரபலமான திரை இசைக் கலைஞர், அண்மையில் ஊடகங்களைக் கூட்டி, தனது அண்டை வீட்டில் வாழும் ஒரு மலையாளப் பெண்மணி, தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒரு மலையாள உயர் அதிகாரியின் துணையுடன் தன்னைச் சிறையில் தள்ளிய அனுபவங்களை விவரித்த போது நாம் அதிர்ந்து போனோம். அகில உலக அளவில், இந்திய அளவில், தென்னிந்திய அளவில், தமிழ்நாட்டிற்குள்ளும் தமிழர்களுக்கு எதிரான சதிவேலைகளில் தீவிரமாக இறங்கியிருப்பவர்கள் மலையாளிகளே!
எம்.கே நாராயணன், சிவசங்கர மேனன், ஜார்ஜ், தாமஸ், விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார், ஏ.கே.அந்தோணி போன்ற சர்வதேச வலைப்பின்னலுள்ள ஒரு மலையாள இனக்குழுதான்
மூளையாகச் செயல்பட்டு ஈழத்தில் தமிழினப் படுகொலையை நடத்தி முடித்தது. பார்ப்பணீய சக்திகளின் கரந்தடி வேலை, திராவிட திருகுதாளங்களின் கள்ள மௌனம், போலிப் போராட்டங்கள், சோனியா தலைமையிலான காங்கிரசின் பழிவெறி இவற்றைச் சரியாகப் பயன்படுத்தி தமிழினப் படுகொலையை நடத்தி முடித்தது இந்த மலையாளக் கூட்டம்.
இரண்டு கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகளைக் கைது செய்து இந்தியா கொண்டு வந்த ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து, அன்றாடம் அவர்களைத் தாக்கும் சிங்களக் கடற்படையிடம் மட்டும் நட்பு பாராட்டுகிறாரே ஏன்? தமிழ் இனத்துக்கு எதிரான இனவெறிதானே காரணம்?
கேரளமாக மாறிப் போன சேர நாட்டின் பூர்வகுடிகள் நாடார் சமுதாய மக்கள். அந்த மண்ணின் மைந்தர்கள். நாயர்களும், நம்பூதிரிகளும் அங்கு வந்தேறிய வந்தேறிகள். ஆனால் நாடார் சமுதாய மக்கள் வந்தேறிகள் என மத்திய அரசு ஒன்பதாவது பாடப்புத்தகத்தில் பதிவு செய்கிறார் ஒரு நாயர் சாதிக் கல்வி அதிகாரி. தமிழினத்துக்கு எதிராக மலையாளிகளின் இத்தகைய இனவெறி தான் தமிழ்நாட்டிற்குள்ளும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு ஒரு சான்றுதான் ஜேம்ஸ் வசந்தனுக்கு சொந்த மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த சோகம். ஊடகங்களுக்கு முன்னால் தைரியமாக வாய் திறந்த வசந்தன் இப்போது யாரிடமும் வாய் பேசுவதேயில்லை. தமிழ்நாட்டிற்குள்லேயே ஒரு புகழ் பெற்ற தமிழனுக்கு வாய்ப்பூட்டுப் போடும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கமும், செல்வாக்கும், ஆணவமும் தாய்த் தமிழ் நாட்டிலேயே தலை விரித்தாடுகிறது என்பதை இந்நிகழ்வு உறுதி செய்கிறது.
தாய்தமிழ் நாட்டுக்குள்ளேயே தமிழனுக்கு ஏன் இந்த அவலம்? தாய்த்தமிழ் நாட்டில் தமிழனின் அரசியல் இன்று தமிழர்களிடம் இல்லை. தமிழக அரசியல் வடுகர்களிடமும், மலையாளிகளிடமும், பார்ப்பனர்களிடமும் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறது. காட்சி ஊடகங்கள் ஒரே குடும்பத்தாரிடம். திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், திரையரங்குகள், ஃபைனான்ஸ், விளம்பரம் அனைத்தும் அந்த ஒற்றைக் குடும்பத்தின் பிடியில், செய்தி ஊடகங்கள் தமிழரல்லாதோர் ஆதிக்கத்தில்.
தமிழக அரசியலை வடுகர்களிடம் இருந்து விடுவித்து தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தைத் தமிழன் கைப்பற்றாத வரை உலகம் முழுதும் வாடும் தமிழனத்திற்கு விடிவு இல்லை. ஏனெனில் தமிழ்நாட்டைத் தமிழன் ஆளும் போது மட்டும் தான் ஈழத்தில் தனியரசு சாத்தியமாயிற்று. தமிழ்நாட்டைக் கரிகாலன் ஆண்ட போது அவனுடைய பிரதிநிதியாய் ஈழத்தை எல்லாளன் ஆண்டான். அந்நியர்களான பல்லவர்கள் தமிழகத்தை ஆண்ட போது இலங்கையில் சிங்களன் மானவர்மன் கோலோச்சினான். மீண்டும் சோழர்கள் காலத்தில் குறிப்பாக இராசராசன், இராசேந்திரன் காலத்தில் இலங்கை முழுதும் சோழநாட்டின் ஒரு அங்கமாக மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரில், இன்றைய அனுராதபுரத்தை சனநாத மங்கலம் என்று இராசராசனின் புனைப் பெயரைச் சூட்டி தலைநகராக்கி, இலங்கை முழுமையும் தமிழர்கள் ஆண்டார்கள். அதன்பின் சோழர்கள் ஆட்சியை வீழ்த்தி சலுக்கியன் குலோத்துங்கன் தமிழகத்தை ஆண்டபோது, தமிழ் ஈழ அரசும் இலங்கையில் வீழ்ந்தது. சலுக்கியன் குலோத்துங்கன் சிங்களனுக்குத் தன் பெண்ணைக் கட்டிக் கொடுத்தான். மீண்டும் தமிழ்நாட்டில் தமிழன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆதிக்கம் வந்த பிறகு யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆரிய நாட்டார் என்ற பெயரில் ஈழத்தை தமிழர்கள் ஆண்டார்கள்.
ஆகவே தமிழ்நாட்டைத் தமிழன் ஆளும் போது மட்டுமே ஈழத்தில் தமிழனின் தனியரசு கோலோச்சியது. எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, அதிகாரமில்லாத மாநிலந்தான் தமிழகம் என்ற போதும், அந்த அதிகாரமில்லாத மாநிலத்தை ஆளுகின்ற அதிகாரமாவது, புகழ் நாட்டமில்லாத, பொருள் நாட்டமில்லாத, மரண பயமில்லாத, ஒரு மானமுள்ள தமிழ்த் தலைவன் கைக்கு வரும் வரை தமிழ்நாட்டிற்கு விடிவு இல்லை. தமிழ் ஈழத்திற்கும் விடிவு இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களிலும், இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் வாழும் தமிழர்களுக்கும் விடிவு இல்லை.
பார்ப்பனீய சூழ்ச்சி, திராவிட மாயை, திணிக்கப்பட்ட இந்திய தேசியம் இந்த மூன்று தளைகளில் இருந்தும் விடுபட்டு, தமிழ் தேசியத்தை கட்டியமைப்பதே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை உலகத் தமிழினம் இன்று உணரத் தலைப்பட்டு விட்டது. அதே நேரத்தில் மதவெறியும், சாதி வெறியும் நமது எதிரிகளின் துரோகிகளின் திட்டமிட்ட கூட்டுச் சதியால் தமிழகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மதங்களை ஒழிப்பதும், சாதிகளை ஒழிப்பதும் இன்றையச் சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. சாதிகளை ஒழித்து விட்டுத்தான் தமிழ் தேசியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் தமிழ்த் தேசியத்தை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது. இதுவே யதார்த்தம்.
ஆனால் மதவெறியிலிருந்தும், சாதி வெறியிலிருந்தும் அரசியல் பிடியிலிருந்தும் தமிழர்களை விடுவித்து, அவர்களுக்குள்ளிருக்கும் இயல்பான இன உணர்வினை மேலோங்கச் செய்து, நான் முதலில் தமிழன், அதன் பிறகே இன்ன மதத்துக்காரன், நான் முதலில் தமிழன், அதன் பிறகே இன்ன சாதிக்காரன், நான் முதலில் தமிழன், அதன் பிறகே இன்ன கட்சிக்காரன், எனத் தமிழர்களைத் தமிழர்களாக ஒருங்கிணைப்போம். அவர்களுக்குத் தமிழ் மொழியின் வரலாற்றை, தமிழ் மண்ணின் வரலாற்றை, தமிழ் இனத்தின் வரலாற்றை கற்பிப்போம். அவ்வாறு நாம் கற்பிக்கக் கற்பிக்க அவர்களுக்குள் இருக்கும் தமிழன் என்ற இன உணர்வு மேலும் மேலும் மேலோங்க, மதவெறியும், சாதி வெறியும், அரசியல் பிடிமானமும் அவர்களை விட்டு மெல்ல மெல்ல விலகும். தமிழரைத் தமிழராக்குவோம். அந்த தமிழர்கள் தங்களுக்கான அரசியலைத் தங்கள் கையில் எடுப்பார்காள். தமிழ் மண்ணை விடுவிப்பார்கள். தமிழ் இனத்தை விடுவிப்பார்கள்.
தமிழரைத் தமிழராக்கும் இந்தப் பணி முதலில் தாய்த் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்நாடு சரியானால் தரணியெல்லாம் வாழும் தமிழர்களின் நிலையும் சரியாகும். அந்தப் பணிக்கு நாம் அனைவரும் ஆயத்தமாவோம்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
உண்மை இங்கே உரைக்கப்பட்டுள்ளது. உப்பு கரிக்கும் உணர்வுள்ளவர்களுக்கு இதன் பொருள் புரியும்.மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்.
படு மோசமான கட்டுரை. சம்மந்தம் இல்லாத புகைப்படஙல்.
இன, ஜாதி காழ்ப்புகளை உமிழும் இதைப்போல் கட்டுரைகளை பிரசுரிப்பது நல்ல ஜர்னலிஸத்தின் எதிரி. சிறகின் தரம் பாதாளத்தில் விழுந்து விட்டது.
விஜயராகவன்