மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர்களின் போராட்டம்

ஆச்சாரி

Dec 1, 2011

தமிழர்களின் ஈழப் போராட்டம் முதல் இன்று நடக்கும் கூடங்குளம் போராட்டம் வரை  நம் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இது நம்மிடையே எழுந்துள்ள விழிப்புணர்ச்சி மற்றும் எழுச்சியைத் தான் காட்டுகிறது. அடிப்படையில் தமிழர்களாகிய நாம் நம் தமிழர் நலனுக்காக போராடுவது போல் தோன்றினாலும் உண்மையில் நம் தமிழகத்தில் எழுந்துள்ள விழிப்புணர்ச்சியின், எழுச்சியின் தாக்கம் தான் இது. இதை வெறும் தமிழகத்தின் நலன் என்று  பார்ப்பதை விட்டு ஒட்டுமொத்த மனித குலத்தின் நலன் என்று தான் நாம் பார்க்க வேண்டும். மொழி சுதந்திரம் கலாச்சார சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித சுதந்திரம் இதை அன்றி வேறொன்றும் நாம் இங்கு கேட்கவில்லை. தமிழகத்தில் இன்று எழுந்துள்ள எழுச்சி ஏனைய மாநிலங்களிலும் வர வேண்டும் அதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம். தமிழகத்தில் இன்று எழுந்துள்ள எழுச்சி மற்ற மாநிலங்களில் வராமல் நாம் நம் இலக்கை அடைவது கடினம்.

தமிழர்களுக்கு உள்ள மிகப் பெரிய பிரச்சினையே தங்களின் போராட்டத்தை தமிழகத்தை தாண்டி எடுத்துச் செல்வதில்லை. நமக்குள்ள ஒரு சிந்தனை ஓட்டம் வேறு மாநிலத்தில் வாழும் மக்களுக்கும் உண்டு என்பதை நாம் அறிதல் வேண்டும். உதாரணமாக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழர்களுக்கு மட்டுமே உரிய போராட்டமாக நினைப்பது. ஹிந்தி எதிர்ப்பு  என்பது தமிழகத்தைத் தவிர ஒரிசா, மகாராஷ்டிரம், வங்காளம் என ஏனைய மாநிலங்களிலும் உள்ளது. அவை தமிழகத்தை போல் வலுவாக இல்லை. அவர்களுக்கும் நம்மைப் போன்ற பிரச்சினை இருக்கிறது. அவர்களுடன் நம் போராட்டத்தையும் இணைத்து எப்படி நாம் வலிமையான போராட்டமாகக் கொண்டு செல்கிறோம் என்பது மிக முக்கியம்.

இன்று பாலஸ்த்தீனியத்தில் நடக்கும் மனித உரிமை மீறல் நாம் யாவரும் அறிந்ததே. அவற்றை நாம் உணர்வு பூர்வமாக பார்ப்பதை விட ஒரு அடிப்படை மனிதாபிமான பிரச்சனையாகத்தான் நாம் பார்த்து அதற்கு நம்முடைய ஆதரவை கொடுக்கிறோம். அதை போன்று தான் நம்முடைய தமிழர் பிரச்சினைகளையும் உணர்வுபூர்வமாக பார்ப்பதை விட அறிவார்ந்து தான் வேற்று மாநிலத்தவர்கள் பார்க்கக்கூடும். இதை நாம் அறிந்து நாம் எப்படி நம் போராட்டங்களை வேற்று மாநிலத்தவருக்கு கொண்டு சென்று ஆதரவு திரட்ட போகிறோம் என்பது நமக்கு மிக அவசியம்.

அதே போன்று காவிரி பிரச்சினையிலும் கீழ் நதியை சேர்ந்த மாநிலமான ஆந்திராவுடன் மற்றும் ஏனைய மாநிலங்களுடன் இணைந்து போராட்டத்தை எடுத்து செல்லவேண்டும்.

தமிழர்களுக்கு இன்று தீய சக்தியாக நமக்குள் வளர்ந்து இருப்பது கண்மூடித்தனமான நம்பிக்கைதான். இந்த தீய நம்பிக்கை தான் தனி மனித வழிபாட்டையும், கட்சி வழிபாட்டையும் வளர்த்து வந்துள்ளது. வேறு மாநிலங்களில் மாநில பிரச்சினை என்று வந்துவிட்டால்  எல்லா கட்சிக்காரர்களும் தங்கள் கட்சி பாகுபாட்டை கலைந்துவிட்டு மாநிலத்தின் நலன் கருதி ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். ஒருபுறம் நடிகனுக்காக அவனை நம்பி எதையும் செய்யும் கூட்டம். இந்த பலகீனத்தை தமிழரின் பெருமையாய் ‘தமிழர்கள் ஒருவன் மீது நம்பிக்கை வைத்துவிட்டால் எந்த காலத்திலும் கைவிடமாட்டான்’ என்று வேறு பேசுகிறார்கள். வாழ்க்கையில் தடுமாறுகின்ற தலைவனை கைவிட வேண்டாம், கொள்கையில் தடுமாறுகின்ற தலைவனை கைவிடத்தான் வேண்டும். இந்த அறிவுகூட இல்லாத அறிவற்ற இனமாக நாம் மாறியுள்ளோம் என்பது மிகவும் வேதனை அளிக்கிறது. ஆந்திராவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் தெலுங்கானவோ ஆந்திராவோ அவர்கள் யாவரும் அந்த மண்ணின் மைந்தர்களாகவே உள்ளனர். அந்த பிராந்தியத்தின் நலனிலே மிகவும் கவனமாக உள்ளனர். இதற்கு காரணம் அந்த தலைவர்கள் இல்லை அந்த தலைவர்களை உருவாக்கிய மக்கள். எவன் ஒருவனும் பிராந்தியத்தின் நலனுக்கு எதிராக பேசிவிட்டு அவன் சொந்த வீட்டில் கூட கால் வைக்கமுடியாது. அவனுக்கு பேசிய நாளே அவன் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவர் அம்மக்கள், ஏனென்றால் அவர்கள் நம்மை போன்று செம்மறி ஆட்டுக்கூட்டம் இல்லை.

காங்கிரஸ் காரர்களின் நிலைமை இப்படி என்றால் கம்யூனிஸ்ட்களின் நிலைமை இதைவிட மோசமாக தமிழகத்தில் உள்ளது. தன்னுடைய மாநில மக்களின் நலனுக்காக தன்னுடைய மொழிக்காக வல்லரசுகளின் ஆதிக்கத்தை மீறி வங்கதேசத்தை உருவாக்கிய வங்காள கம்யூனிஸ்ட்கள் எங்கே, பேச்சுக்கு கூட தனி ஈழம் பற்றி பேசாத தமிழக கம்யூனிஸ்ட்கள் எங்கே. இவர்கள் இன்று கூடங்குளத்தில் நடக்கும் மக்கள் போராட்டத்தை ஆதரிக்காமல் கூடங்குளம் அணுமின் திட்டத்தின் ஆபத்தை கருதாமல் கம்யுனிச ரஷ்யாவின் திட்டம் என்பதாலேயே ஆதரிக்கின்றனர். நாட்டின் நலன் என்ற பேரில் பிராந்திய நலனை புறம் தள்ளும் தலைவர்களை மாற்றும் கடமை நம் மக்களுக்கு உள்ளது.

முதலில் நம் தமிழர் நலன் கருதிய அரசை தமிழகத்தில் நாம் உருவாக்க வேண்டும். அந்த குறிக்கோளை நோக்கி இப்பொழுதே பயணத்தை தொடங்க வேண்டும்.1967 இல் திமுக, காங்கிரஸ் அரசை  எதிர்த்து ஆட்சியை பிடித்த பொழுது ஒட்டு மொத்த இந்தியாவும் நம் தமிழகத்தை திரும்பி பார்த்தது. அது தமிழகத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெரும் அரசியல் மாற்றத்தை கொண்டுவந்தது. இன்று தமிழகத்தில் இரு கட்சிகள் மாறி மாறி நம்மை 40ஆண்டுகள் மேல் ஆண்டுகொண்டிருக்கின்றனர். அதை மாற்றுகின்ற அரசியல் சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இன்று தமிழகத்தில் இளைஞர்களின் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுகிறது. இந்த சமூக எழுச்சியை அரசியல் எழுச்சியாக இளைஞர்கள் மாற்றி தமிழர்களின் நலனை கருத்தில் கொண்ட அரசை கொண்டுவரவேண்டும்.

இன்று தமிழகத்தில் எழுந்துள்ள எழுச்சி நாட்டின் ஏனைய மாநிலத்தவரின் சிந்தனையில் இருந்து மாறுபட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது இன்று இந்தியாவில் வளர்ந்த சமூகத்தின் சிந்தனை என்பது ஒரு வல்லாதிக்க சிந்தனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உலகமயமாக்கல்  பொருளாதார சமூக சூழல். இந்த சூழல் முதலாளித்துவ கோட்பாடுகளை தாங்கி  நடத்தப்படும் ஊடகங்களின் பலத்தால் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. நம் தமிழகத்தில் மட்டும் மக்கள்(சிலர்) சரியான தருணத்தில் விழித்துக்கொண்டனர். இந்த இடைவெளி நம்மை இந்திய நாட்டின் ஏனைய சிந்தனையில் இருந்து மாறுபட்டு காட்டுகிறது. இதை பயன்படுத்தி தமிழகத்தில் மனித குலத்தின்  நன்மைக்காக நடக்கும் போராட்டங்களை தேச விரோத போராட்டங்களாக இன்றைய ஊடகங்கள் ஏனையோருக்கு எடுத்துச்செல்கின்றன. இந்த வல்லாதிக்க சிந்தனையில் மாட்டிக்கொண்ட இன்றைய மேல்தட்டு மக்கள் இந்தியா வல்லரசு அல்லது வளர்ந்த நாடாக வேண்டும் என்ற சிந்தையில் இன்று மனித குலத்தின் மேல் தொடுக்கப்படும் தாக்குதல்களை கண்டும் காணாமல் உள்ளனர். ஊடகங்களும் இந்த தாக்குதல்களை மறைக்கின்றனர் அல்லது நியாயப்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் இந்த எழுச்சி என்பது ஈழப்படுகொலைக்குப்பின் வந்தது. இந்த போருக்கு பின் தமிழக மக்களுக்கு ஊடகங்களை தாண்டிய விழிப்புணர்ச்சி பெருகியது. தமிழர்கள், ஊடகங்களை தாண்டி இணையத்தில் கருத்துக்களை பரிமாறி  இணையத்தில் தங்களுக்கென்று வலிமையான இடத்தை பிடித்துள்ளனர். ஈழப்போர்  என்பது வல்லாதிக்க சிந்தனையின் உச்சமே அன்றி வேறெதுவும் இல்லை. வல்லாதிக்க சிந்தனை மற்றும் அரசியல் பழிவாங்கும் செயல் இந்த இரண்டும் இன வெறியுடன் இணைந்து மக்களை கொன்று குவித்துள்ளது. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இனவெறியை விட முதலாளித்துவ வல்லாதிக்க சிந்தனை என்பது மனித குலத்துக்கு எதிரானது. இந்த மயக்கத்தில் வாழும் நம் தேசபக்தர்களை விழிப்படையச்  செய்ய வேண்டும். நம் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானாதில்லை மாறாக வல்லரசாகும் சிந்தனைக்கு எதிராக நல்லரசாக நம் நாட்டை ஆக்கும் முயற்சி என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

Final thoughts what to know and do about tinder one of the driving forces http://www.besttrackingapps.com behind this dating app is to find people you can actually meet up with in real-life often for sexual acts

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

5 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழர்களின் போராட்டம்”
  1. வே.தொல் says:

    சமுதாயச் சிக்கல்களை, வளர்ச்சிப் போக்கை ஆதிக்கக் குழுவினர், ஆதிக்கம் செய்யப்படுவோர் என்ற பிரிவினைப் பார்வையில் மட்டுமே பார்ப்பது பாதி உண்மையையே காட்டும். அதன் அடிப்படையில் எடுக்கப்படும் போராட்டங்களும் தீர்வுகளும் அரை வேக்காடாகச் சாண் ஏறி முழும் சறுக்குபவையாகவே வந்து முடியும். சோவியத் ருசியா, சீனா… போன்ற சோசலிச பரிசோதனைகள் படுதோல்வி அடைந்ததற்கு முதலாளித்துவ சதிகளோ, போர்களோ காரணங்கள் அல்ல. அந்தந்த நாட்டு மக்கள் மனப்பான்மையே.

    கூடாங்குளத்து அணுமின் திட்டங்களை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் பொது மக்களின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கும் படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளும் படி கோரிக்கை விடுவார்களா? குறைந்த அளவு அப்போராட்டத்தை முன் நின்று நடத்துபவர்கள் அப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவார்களா?

    சுரண்டல், ஆதிக்கம், மோசடி… நடைபெற இரண்டு பக்கங்களும் (ஒத்துழைக்க) வேண்டும். அதில் ஒரு பக்கத்தை மட்டும் குறை சொல்லி, அதிலும் தன் வசம், தன் சக்திக்குட்பட்டவற்றைச் செய்யக் கூடிய வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு, போராட்டம் நடத்துவது தன்னையும் ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களையும் ஏமாற்றும் ‘தன்முனைப்பு’ (ஆணவம்) ஆகும். இது முடிவில் அடுத்த பக்கத்திற்கே ஆதரவாக வந்து முடியும்.

  2. வேல் says:

    உரிமை இழந்தால் வாழ்வு இழப்பாய் தமிழா…. உரிமைக்கு இன்று உழைக்க மறுத்தால் நாளை வாழ்வே இழக்க நேரும். ஓன்றுசேர்வோம் , போராடுவோம்….. உரிமை காப்போம்!

  3. Nellai Kumaran says:

    //இன்று இந்தியாவில் வளர்ந்த சமூகத்தின் சிந்தனை என்பது ஒரு வல்லாதிக்க சிந்தனையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது உலகமயமாக்கல் பொருளாதார சமூக சூழல். இந்த சூழல் முதலாளித்துவ கோட்பாடுகளை தாங்கி நடத்தப்படும் ஊடகங்களின் பலத்தால் மக்களின் மீது திணிக்கப்படுகிறது. நம் தமிழகத்தில் மட்டும் மக்கள்(சிலர்) சரியான தருணத்தில் விழித்துக்கொண்டனர். //

    http://www.luckylookonline.com/

    //கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல் தனிமனித சுயநலத்தை தூண்டும் போக்கை விரைவுபடுத்தியிருக்கிறது. இதன் விளைவாக எவ்வளவோ உன்னத சிந்தனைகளும், இயக்கங்களும் காலாவதியாகத் தொடங்கியிருக்கிறது. திராவிட இயக்கமும் அதற்கு பலிகடா ஆகிவிடுமோ என்று இன்று அஞ்ச வேண்டியிருக்கிறது.//

  4. kondrai vendhan says:

    காங்கிரசு என்ற இயக்கம் சார்ந்தவர்கள், கம்யூனிச கட்சியாளர்கள் மற்றும் கம்யூனிச கருத்தியலாளர்கள் தங்கள் நிலை உணர்ந்து மனிதர்களாக மாறுவதற்கு சிந்திக்க வைக்கும் கட்டுரை. இது காலத்தின் கட்டாயம். மனம் மாறினால் மனிதனாகலாம். இதுவும் கம்யூனிச கருத்தியலுக்கு எதிரானதல்ல. நன்றி.

  5. kasi visvanathan says:

    //நம் போராட்டங்கள் தேசத்திற்கு எதிரானாதில்லை மாறாக வல்லரசாகும் சிந்தனைக்கு எதிராக நல்லரசாக நம் நாட்டை ஆக்கும் முயற்சி என்பதை தெளிவு படுத்த வேண்டும்.// தேசியவாதிகள் தேசியத்தின் பொருள் புரிய மிக அழகாக எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றி.

அதிகம் படித்தது