மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் மரணம் – ஆழ்ந்த இரங்கல்

ஆச்சாரி

Jun 15, 2013

தமிழ் உணர்வாளர், எழுத்தாளர், இயக்குனர், நடிகர் மணிவண்ணன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58. இவருக்கு மனைவியும், ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.  இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவை சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.

கல்லுக்குள் ஈரம் படத்திலிருந்து பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர், பின்னர் அவரது படங்களில் பிரதான எழுத்தாளராகப் பணியாற்றினார். அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் என பல படங்களில் அவர்தான் வசனகர்த்தா. பின்னர் கோபுகங்கள் சாய்வதில்லை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெள்ளி விழா படங்களைத் தந்த மணிவண்ணன் கடைசியாக இந்த ஆண்டு அமைதிப்படை 2 என்னும் படத்தை இயக்கினார். இது அவருக்கு 50 வது படம்.  ரஜினி நடித்த கொடிபறக்குது படத்தில்தான் அவர் நடிகராக அறிமுகமானார். இவர் கிட்டத்தட்ட 400 படங்கள் வரை அவர் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது பல ஆண்டுகளாக தமிழின விடுதலைக்காக போராடி வந்தவர். ஒரு உரையில், தன்னுடைய பெற்றோர்களின் மரணத்தில் அழாமல் மனதை திடமாக வைத்திருந்ததாகவும், ஆனால் தன்னோடு பாசமாக பழகிய தம்பி தங்கைகள், முள்ளிவாயக்காலில் புதைந்த இடமே தெரியாமல் போன போது தான் மனம் இடிந்து பல மாதங்களாக அழுததாகவும் கூறியிருந்தார். இதேவேளை தான் தமிழீழத்தில் பிறந்திருந்தால் ஒரு போராளியாகப் பிறந்து இலங்கையின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி மாவீரனாகப் புதைக்கப்பட்டிருப்பேன் என்பதையும் உறுதியோடு கூறியிருந்தார். தீயோர் எல்லாம் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழும்போது நல்லோர் விரைவில் மடிவது பெருந்துயரே! இந்த தமிழ் உணர்வாளர் மரணத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

This is especially troublesome, because tinder is linked to facebook and instagram http://www.besttrackingapps.com accounts where it is estimated that 44 percent of teens have lied about how old they really are to gain access to age restricted content

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தமிழ் உணர்வாளர் மணிவண்ணன் மரணம் – ஆழ்ந்த இரங்கல்”
  1. கார்த்திக் says:

    தீயோர் எல்லாம் நீண்ட ஆயுளுடன் நெடுங்காலம் வாழும்போது நல்லோர் விரைவில் மடிவது பெருந்துயரே!
    #உண்மை

  2. kasi visvanathan says:

    தமிழ் இனம் இழக்கக் கூடாததையும், இழக்கக் கூடாதவர்களையும் இழந்து, ஒரு தேக்கத்தையும் அகத்தாய்வயும் சந்தித்து நிற்கிறது.
    நமக்கான கடமைகள் பல உண்டு.
    தமிழ் இனத்திற்காக துடித்த இதயம் அடங்கியது.
    இனி அவர் ஏற்றிய நெருப்பை ஏந்திச் செல்லும் பொறுப்பு தொடங்கியது.

அதிகம் படித்தது