மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விரிப்போம் – அக்டோபர் 2011

ஆச்சாரி

Oct 1, 2011

தமிழகத்தில் சமீப காலமாக பேருந்து விபத்துகள் பெருகி வருகின்றன, இது எதனால் என்று ஆராய்ந்தால் அதி வேக சாலைகள் காரணம் என்று தெரிகிறது. கண்மண் தெரியாமல் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் வண்டியை அதிவேகமாக  செலுத்துவது அதிகரித்து வருகிறது.மற்றவர்களை விட விரைவாக போய்  சேர வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை, வேகத்தை காட்டி மக்களை ஈர்க்கும் செயல்பாடு, அதி நவீன சொகுசு பேருந்துகள் போன்றவை விபத்துகளை பெருக செய்கின்றன. தகவல் தொழில்நுட்ப துறை வளர்ந்த பின் வாரக்கடைசி நாட்களில் நகரங்களில் இருந்து தங்கள் ஊர்களுக்கு சென்று திரும்பும் இளைஞர்கள் அதிகமாகி உள்ளனர். இவர்களின் அதிக சம்பளம் சொகுசு பேருந்துகளில் விரைவாக சென்று சேர்வதை எளிதாக்குகிறது. முடிவு விபத்தில் போய் நிற்கிறது.

தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் விபத்துக்கள் குறைவு, அவை வேகமாக சென்றால் தானே விபத்து ஏற்படும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. மாற்றப்படாத பழைய கால பேருந்துகள், அலட்சியமான பொறுப்பற்ற ஊழியர்கள், இதனை கண்டு கொள்ளாத அரசு என்று அரசாங்க பேருந்துகளின் நிலை கேவலமாக இருக்கிறது. எந்த ஊருக்கும் குறித்த நேரத்தில் செல்ல முடியாது, நிலையத்தில் எந்த பேருந்து முன்னர் செல்லும் என்ற அறிவிப்பு கிடையாது, கட்டண சீர்திருத்தமும் இல்லை. விளைவு, நொந்து போன மக்கள் நீண்ட தூரத்துக்கு  தனியார் பேருந்துகளை நாடுகின்றனர். குறைந்த தூரத்துக்கு தனியாரின் சிறிய உந்துகளை வாடகைக்கு பேச தலைப்படுகின்றனர். இந்த தனியார் வாகனங்கள் வேகக் கட்டுப்பாடு இல்லாமல் சென்று விபத்தில் சிக்குகின்றன.

வளர்ந்த நாடுகளின் கட்டமைப்பை அப்படியே அச்செடுத்தார் போல் செயல்படுத்துவதை நாம் நிறுத்தவேண்டும். அப்படியே எடுத்தாலும் முழுமையாக எடுக்க வேண்டும். அரைகுறையாக திட்டங்களை அமல் படுத்தினால் இன்னல்கள் தான் மிஞ்சும்.வளர்ந்த  நாடான அமெரிக்காவில் அதிகபட்ச வேகம் 110 கிமீ, தற்போது தனியார் ஓட்டுனர்கள் தமிழகத்தில் 140 கிமீ வேகத்தில் செல்வதாக அறிகிறோம், அங்கே வேகத்தை கண்காணிக்க அனைத்து சாலைகளிலும் காவல் துறையினர் இருப்பார்கள். இங்கே என்ன நிலைமை என்பதை சொல்ல வேண்டியது இல்லை. வளர்ச்சி என்ற பேரில் கொண்டுவரப்படும் விடயங்களை செயல்படுத்துமுன் தீவிர பரிசீலனைக்குட்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. இல்லையேல் இழப்புகள் தான் ஏற்படும்.

Potential studies that capture and hold students interest after the t/d is finished vary do my essays within www.essayprofs.com in kind

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறகு விரிப்போம் – அக்டோபர் 2011”

அதிகம் படித்தது