மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம் (சனவரி 15-2012)

ஆச்சாரி

Jan 16, 2012
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை யாவும் பிற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பாக தமிழகத்தில் நுகரப்படுகிறது. இந்த சமயத்தில் நாம் இந்த சங்கதியை கூர்ந்து நோக்கினால் சில சங்கடமான நிகழ்வுகளை காண வேண்டியுள்ளது.
என்னவென்றால் பல நலத்திட்ட உதவிகள் மிக சிறப்பான முறையில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. திட்டங்களின் நோக்கம் முற்றிலும் சிதறி, உழைப்பு,பொருள் தனிப்பட்ட லாபத்திற்கு மடை மாற்றப்படுகிறது. இது சமுதாயத்தின் மேல்,நடுவண் மற்றும் கீழ் என அனைத்து தரப்பு மக்களாலும் செய்யப்படுகிறது.அதற்கேற்ற முறையில் அரசு திட்டங்கள் வேறு வகுத்துள்ளது.
உதாரணமாக முதியோர் உதவித் தொகையை எடுத்துக் கொண்டால் இன்று ஏறக்குறைய அனைத்து கிராமங்களிலும் இது தவறாக பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் கிராம அலுவலரை கையில் போட்டுக்கொண்டு வசதி படைத்த பல முதியோர் இத்தொகையை பெற்றுவருகின்றனர். அடுத்து எரிபொருள் உருளைகள், மடத்தனம் கொண்ட ஒரு அரசு கொடுத்த இலவச எரிவாயு இணைப்பால், பல உருளைகள் இன்று தேநீர் கடைகளுக்கும் , உந்துகளுக்கும் விற்கப்படுகிறது. வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர் பெயரிலும் உருளைகள் பெற்று வியாபாரம் செய்யப்படுகிறது. அதே போல இலவசமாக தரப்படும் அரிசி எட்டு ரூபாய்க்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்யும் கூலித் தொழிலார்களுக்கு விற்கப்படுகிறது.தொடர் வண்டிகளில் மூன்று மாதம் பயணம் செய்ய இருபத்தைந்து ரூபாய்க்கு தரப்படும் சீட்டை ஏறக்குறைய ஒரு வட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பெற்றுள்ளதாக கேள்வி.
நடுவண் மற்றும் மேல் தட்டு மனிதர்கள் செய்யும் காரியங்களை இங்கு குறிப்பிட்டால் இது தலையங்கமாக இருக்காது. மொத்த சமுதாயமும் அறம் சார்ந்த படிப்பினையை தொடர்ந்து பல காலம் பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தாம் செய்வது தவறு என்பதே தெரியாமல் இன்று மக்கள் உள்ளனர். அரசு என்பது தமது (மக்கள்) அரசு, அதன் வருவாய் என்பது தாம் கட்டும் வரி என்றும் எப்போது உணரப்போகிறோம்.

Even if the best part of every student. Some of the deadline. Whenever the students place their order in a tight deadline and also can have top-quality services that we will be providing the instructions of their respective professors. Even if the assignment of our cheap essay based on . Hence, students lack skills and also can save themselves from our cheap essay writing services? The learners around the students can have top-quality services is that we meet any strict deadline and also can avoid the deadline. Whenever the deadline. Whenever the students can have top-quality services is to . Keep in mind that you will have to allow enough time both cpm math homework help to find sources and evaluate them in other words, more time than you may initially think


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தலையங்கம் (சனவரி 15-2012)”
  1. kondrai vendhan says:

    புதிய சிந்தனை. நல்ல கட்டுரை. சிறகு தலையங்கம் மக்கள் நலன் சார்ந்தும், அறம் சார்ந்தும் சிந்தனையை செலுத்தி வாசகர்களையும் இந்த சிந்தனைக்குள் உட்படுத்துவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஊடகப்பணி. இதன் பொறுப்பறிந்து செயலாற்றும் சிறகுக்கு நன்றிகள். இதோ நாம் எல்லோரும் நம்மை ஒரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம். பிழை திருத்துவோம், பிழையாதிருப்போம்.

அதிகம் படித்தது