மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறகு விரிப்போம் – ஜூலை 2011

ஆச்சாரி

Jul 1, 2011

தமிழர் வாழ்வு இன்று  இந்த உலகெங்கும் விரிந்து இருக்கிறது, அனைத்துக் கண்டங்களிலும் அவர் கால் தடம் பரவி விட்டது. அனேக விதமான சாதனைகளை அவர்கள் படைத்திருக்கின்றனர். பல்வேறு தொல்லைகளை, பிரசினைகளை சந்தித்து இருக்கின்றனர், சந்தித்தும் வருகின்றனர். அத்தகைய பிரசினைகளை பல தனிமனிதர்களும், குழுக்களும் எதிர்த்து போராடினர், இன்னும் போராடி வருகின்றனர். இந்த இடத்தில் தான் தமிழர் மனதில் ஒரு சிற்றியல்பு புகுந்து விட்டது. தனிமனிதர்களும்,  இயக்கங்களும்  தாம் கையிலெடுத்த பிரசினை, தீர்வை எட்டும்போது, அந்த தீர்வு தம்மால் மட்டுமே கிடைத்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணி செயல்படுகின்றனர். எல்லவற்றிலும் பெருந்தன்மையாக இருக்கும் தமிழர், இங்கே சுய கவுரவத்தால் பீடிக்கப்பட்டு  தவறு செய்ய தலைப்படுகின்றனர். நாம் காலங்காலமாக போராடி வருகிறோம், தீர்வை எட்டும் போது, வரும் பெயரையும் புகழையும் வேறெவரோ தட்டி செல்வதா என்ற எண்ணம் மேலோங்கி, நோக்கம் சிதறுவதால் முடிவுக்கு வந்த பல தொல்லைகள் முடியாமலேயே தொக்கி நிற்கின்றன, அல்லது எதிரிகள் வலுப்பெறுகின்றனர். அரசுகளும் இதற்கு விலக்கில்லாமல் ஒருவர் கொண்டு வந்த திட்டத்தை மற்றொருவர் தவிர்க்கின்றனர்.

தலைவனுக்கு பெருந்தன்மை இருந்தால் தொண்டனுக்கு  இல்லை, தொண்டனுக்கு இருந்தால் தலைவனுக்கு இல்லை. இந்தக் கணம் மட்டுமே மெய் என்ற இந்த வாழ்வில் பெயரும், புகழும் எத்தனை நாள் நிலைத்து நிற்க போகிறது. அப்படியே பெருமை அடைந்தாலும் நம்மைக் காட்டிலும் பெருமனிதர், பேரியக்கங்களும் சில காலத்தில் தோன்றிவிடும் உலகல்லவா இது. ஊர் கூடித்தான் தேர் இழுக்க முடியும் எனும்போது, பெருமை, சிலருக்கு மட்டும் எப்படி கிட்டும்?

He works as an independent consultant with many universities in the uk and internationally http://www.essayprofs.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சிறகு விரிப்போம் – ஜூலை 2011”
  1. thol says:

    நம்மிடம் இருப்பதைத் தான் பிறருக்குக் கொடுக்க முடியும். நம்மிடம் இருக்கும் அளவுக்குத் தான் பிறருக்குக் கொடுக்க முடியும். என்னிடம் பணம் இருந்தால் பணத்தைத் தான் கொடுக்க முடியும். என்னிடம் ரூ.10 இருந்தால் அதற்குள் தான் கொடுக்க முடியும். என்னிடம் வெறுப்பு இருந்தால் அதைத் தான் பிறருக்குக் கொடுக்க முடியும். என்னிடம் பெருந்தன்மை இல்லாமல் குடும்பத்தில், நட்பில், வேலை செய்யும் இடத்தில், இயக்கத்தில், கட்சியில் அரசு ஆட்சியில் எப்படி ஏற்படுத்த முடியும்? ‘தன்’ சட்டியில் இருந்தால் தான் சமுதாயத்தில் இருக்கும்.

அதிகம் படித்தது