மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம் – மே 17, 2012

ஆச்சாரி

May 17, 2012

முதல் ஆண்டைத் தொட்டிருக்கும் சிறகு இதழ், வாசகர்களுக்கு தனது முதல் நன்றியைத் தெரிவிக்கிறது. உங்கள் தொடர் ஆதரவால் சிறகு முதல் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் தன் பயணத்தைத் துவக்குகிறது. இன்றைய  அவசர உலகில் அச்சுப் பத்திரிகை வாசிக்கும் வழக்கம் இளைய சமுதாயத்தினரிடையே மிகவும் அரிதாகிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் தலைப்புச் செய்திகளை மட்டும் கேட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். பரபரப்பிற்காக தேவையற்றதை தலைப்புச் செய்தியாக்கி விட்டு செய்தியின் உண்மைத் தன்மையை மறைத்து விடுகின்றன சில தொலைக்காட்சிகள்- சில தமிழ் நாளிதழ்களும் அப்படியே செய்கின்றன.

தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையின் உண்மைத்தன்மையை உணர்த்த- அவர்களுக்கு அதன் மூலம் தீர்வு கிடைக்க- தமிழரின் தனித்த பண்பாட்டை நிலை நிறுத்த- தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்திப் பிடிக்க- இவை போன்ற உயரிய சமூக மேம்பாட்டுக் குறிக்கோள்களுடன் ‘சிறகு’ இதழ் தொடங்கப்பட்டது.

தமிழகத்தை அலட்சியம் செய்யும் அண்டை மாநிலங்கள், வளர்ச்சி என்ற பெயரில் தமிழக மக்கள் மீது திணிக்கப்படும்  இயற்கை வளத்தைக் குலைக்கும்- அரசுகளின் சில திட்டங்கள் இவற்றை நன்கு ஆராய்ந்து உண்மையை தொடர்ந்து எடுத்து விளக்கி வருகிறது நமது சிறகு.

தற்போது இணைய ஊடகமாக இயங்கி வரும் சிறகு- வாசகர்களின் நல்  வரவேற்பால் எதிர்காலத்தில் அச்சு ஊடகமாக வரும் காலம் விரைவில் வரும். எமது இந்த நோக்கங்களுக்கு ஒரு வருடமாக ஆதரவு அளித்து ஊக்கம் தந்துகொண்டிருக்கும் வாசகர்களுக்கும் சிறகு உயர ஒல்லும் வகையிலெல்லாம் துணை புரியும் நண்பர்களுக்கும் சிறகு ஆசிரியர் குழுவின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

I basically decided on http://www.paper-writer.org my project based on my interests, the ability to work with the advisor, the project, and the small need for funding in that order

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தலையங்கம் – மே 17, 2012”
  1. Karthik says:

    நல்ல தலையங்கம்.

அதிகம் படித்தது