மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னையில் குண்டு வெடிப்பு – தலையங்கம்

ஆச்சாரி

May 3, 2014

1998 ஆம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் குண்டு வெடித்திருக்கின்றது. எந்நேரமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இருக்கும் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் வெடித்திருப்பது  அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது.

குண்டு வைத்தவர்கள் யார், எக்காரணத்திற்காக குண்டு வைக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

தமிழக சிறப்பு காவல் துறையினர் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

சீமாந்திராவில் வெடிக்க இருந்த வெடிகுண்டாக இருக்கலாம் என்பது பலருடைய கருத்தாக தெரிகின்றது. இரயில் திட்டமிட்ட நேரத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்து விட்டதால் சென்னையில் வெடித்திருக்கலாம் என்பது யூகமாக இருக்கின்றது. சீமாந்திராவில் இன்னும் சில தினங்களில் தேர்தல் நடக்க இருப்பதாலும், மோடி அங்கு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நேரத்தை ஒட்டி நடந்திருப்பதாலும் தேர்தலை மையமான காரணமாக இருக்கலாம் என்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள். காவல்துறையும் இது நேரம் வைத்து வெடிக்க செய்யப்பட்டிருக்கும் குண்டு தான் என்று தெரிவித்தது இருக்கின்றார்கள். மேலும் சில நாட்களுக்கு முன் பெங்களூர் பா.ஜ.க. கட்சி அலுவலகத்திற்கு அருகில் வெடித்த குண்டை ஒத்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.

அதே நேரத்தில் நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாகீர் உசேனுக்கும் இந்த குண்டு வெடிப்பிற்கும் தொடர்பு உள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகின்றது. எதிர்கட்சியினரும், ஊடகங்களும் கைது செய்யப்பட ஜாகீர் உசேனை சரியாக விசாரித்திருந்தால் இந்த குண்டு வெடிப்பை தவிர்த்து இருக்கலாம் என்று முடிவு செய்து கூறி வருகின்றன. முதல்வர் இக்கருத்தை முழுமையாக மறுத்திருக்கிறார்.

சில தினங்களாகவே பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கை வழியாக சென்னைக்குள் ஊடுருவ திட்டம் இருக்கிறார்கள் என்ற செய்தியும் பரப்பப்பட்டு வந்த நிலையில் இக்குண்டு வெடித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்புகின்றது.

தீவிரவாத செயல்கள் அரசின் செயலின்மையால் தான் நடக்கின்றன. அரசியல்வாதிகள் அரசியல் பிரச்சனைகளை சரியாக தீர்க்காமல் தப்பும் தவறுமாக முடிவெடுப்பதாலே தீவிரவாதிகள் தோன்றுகின்றனர்.

துப்பாக்கி வெடுகுண்டு என்று திரியும் தீவிரவாதிகள் இதுவரை என்ன சாதித்து விட்டனர்? இந்தியாவில் எத்தனையோ குண்டு வெடித்து இருக்கின்றது. அரசுக்கு எச்சரிக்கை செய்வதை தவிர இக்குண்டு வெடிப்புகள் மூலம் என்ன சாதிக்கப்பட்டு இருக்கின்றது?

யாருக்கும் தெரியாமல் மறைந்து சென்று குண்டு இருக்கும் ஒரு பையை வைத்துவிட்டு வருவதில் என்ன வீரம் இருக்கின்றது?

இக்குண்டு வெடிப்பை விவாதிக்கும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அடுத்த பரபரப்பு செய்தி வந்த உடன் இதை மறந்து விடுவார்கள். ஊடகங்கள் மறந்த உடன், காவல்துறையும் சத்தமின்றி மறந்துவிடும். அல்லது கையில் சிக்குபவர்களை கைது செய்து வழக்கை முடித்துக் கொள்வார்கள். குண்டு வைத்தவர்களும் சில நாட்களில் மறந்துவிடுவார்கள். ஆனால் தனது மகளை பறிகொடுத்த பெற்றோரால் எப்படி மறக்க முடியும்?

If it appears to your teen that you’re http://www.besttrackingapps.com being inconsistent or half-hearted in your efforts, what incentive do they have not to do the same

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “சென்னையில் குண்டு வெடிப்பு – தலையங்கம்”
  1. Thiagu says:

    With regard to the Chennai central bomb your viewpoint is correct. If terrorists of any hue are involved as alleged by the police, arresting and punishing them as per law is not enough. The psychology of terrorism has to be tackled by political means.
    THIAGU
    TNLM.

அதிகம் படித்தது