மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தழைத்தோங்கும் நான்காம் தலைமுறை

ஆச்சாரி

Nov 1, 2012

அவசரமயமான இவ்வுலக வாழ்வில், யாரும் எதற்காகவும் பொறுமைகாக்க விரும்புவதேயில்லை அதிலும் இந்த தலைமுறையினர் எந்த விஷயத்தையும் விரைவாக செய்யதுமுடிக்கவே வழி தேடுகின்றனர் (பணம் சம்பாதிப்பதிலிருந்து..சாலை பயணம், சிற்றுண்டி உணவு என அனைத்திலும் வேகம்). தலைமுறைக்கு தலைமுறை வேகம், செயல்திறன் ஆகியவற்றின் தேவை அதிகரித்து கொண்டேயிருக்கும் இவ்வேளையில் தற்போது வேகமாக வளர்ந்துவரும் தலைமுறையினை பற்றியே நாம் பார்க்க இருக்கிறோம். Generation(G)என குறிப்பிடப்படும் 1ஜி,2ஜி,3ஜி,4ஜி என்னும் தலைமுறை வழியாக கம்பியில்லா தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் நாம்  அசாதிரியமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. சுமார் 35 ஆண்டுகால இடைவெளியில் நான்காவது தலைமுறையில் காலூன்றியிருப்பது மட்டுமின்றி அதில் தலைமுறைக்கு தலைமுறை மிகுந்த வேகமும், வேறுபாடும் கொண்டு வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்தியாவின் தற்போதைய அலைவழி சேவை 1ஜிமுறையில் அறிமுகமாகி தற்போது 2ஜி, 3ஜி முறையில் இயங்குகின்றன. 4ஜி அமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைய அலைவழி தொழில்நுட்பத்தின் முன்னோடியாக (அ) ஜீரோ தலைமுறையாக( ) விளங்கியது  மொபைல் ரேடியோ தொலைபேசியாகும்(mobile radio telephone[MTS]). கம்பியில்லா தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் 1ஜி அமைப்புகளில் வானொலி அலைகள் analog (அலைமருவி) முறையில் வேலை செய்தன ஆனால் இரண்டாம் தலைமுறையில் digital(எண்மருவி) முறை பயன்படுத்தப்பட்டது.2ஜி அமைப்பையே நாம் இந்தியாவில் பரவலாக பயன்படுத்திவருகிறோம்.

2ஜி (2G) என்று சுருக்கமாக, பரவலாகக் குறிப்பிடப்படுவது கம்பியில்லா தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் கண்ட இரண்டாம் தலைமுறை முன்னேற்றங்களை அடக்கிய தொலைபேசி அமைப்பாகும், இந்தியாவில் பெரும் ஊழலைக்கண்டு 2ஜி பற்றிய அறிவை பாமரன் வரை கொண்டு சேர்த்த பெருமை நமது மத்திய அரசையே சேரும்.2ஜிஅலைப்பேசி தொலைதொடர்பு தொடர்புகள் முதன்முதலாக 1991ஆம்ஆண்டு ஜி.எஸ்.ம்(GSM) அமைப்பில் பின்லாண்டைச் சேர்ந்த ரேடியோலிஞ்சாவால் துவங்கப்பட்டது.

முந்தைய 1ஜி தலைமுறை தொலைதொடர்புபை விட 2ஜி மூன்று விதங்களில் மேம்பட்டிருந்தது:

> தொலைபேசி உரையாடல்கள் digitally encrypted(என்மமுறை மறைவுக்குறி) முறை பயன்படுத்தபட்டுள்ளது.

> கொடுக்கப்பட்ட அலைக்கற்றையை திறனுடன் கையாண்டதால் கூடுதல் அலைப்பேசி இணைப்புகளைத் தர இயன்றது.

> தகவல் சேவைகளை கொடுக்கக்கூடிய திறனை உள்ளடக்கியிருந்தது; எழுத்து வடிவிலான SMS (குறுஞ்செய்திகள்) முதலில் அனுப்ப கூடியது.

பொதுவாக 3ஜி அல்லது மூன்றாம் தலைமுறைஎன்று அறியப்படும் சர்வதேச மொபைல்தொலைதொடர்புகள்-2000 (IMT-20001ஜி) என்பது சர்வதேச தொலைதொடர்புகள் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட கைபேசி தொலைதொடர்பு தரமுறையாகும். ஜிஎஸ்எம்(GSM), எட்ஜ்(EDGE)மற்றும் சிடிஎம்ஏ2000(CDMA)ஆகியவையும், அத்துடன் டெக்ட்(DECT) மற்றும் வை-மேக்ஸ்(wi-MAX) ஆகிய தொழில்நுட்ப சேவைகளில் மூன்றாம் தலைமுறை பயன்பாடு கிடைக்கும்.. இதில் பரந்த அளவிலான கம்பியில்லா தொலைபேசி (wide-area wireless voice telephone), காணொளி அழைப்புகள் மற்றும் கம்பியில்லா தகவல் பரிமாற்றம் ஆகிய அனைத்து சேவைகளும் ஒரே தொழில்நுட்ப தளத்தில் உள்ளடங்கி கிடைக்கின்றன.

2ஜி மற்றும் 2.5ஜி சேவைகளை ஒப்பிடும் போது, 3ஜி சேவையானது குரலொலி மற்றும் தகவல் சேவைகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில், உயர்ந்த தகவல் பரிமாற்ற விகிதத்தில் எச்எஸ்பிஏ (HSPA) நுட்பத்தில் கையாள அனுமதிக்கிறது.

சர்வதேச தொலைதொடர்பு ஆணையம் (ITU), வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பேண்ட்விட்த்தை அதிகரிக்கவும், பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளுக்கு உதவவும் மொபைல் தொலைபேசி தரமுறைகளின் மூன்றாம் தலைமுறையை – அதாவது, IMT-2000 என்பதை – வரையறுத்திருக்கின்றது. உதாரணமாக, ஜிஎஸ்எம் (தற்போது பிரபலமாக இருக்கும் கைபேசி தரமுறை- அதுதான் நாம் யூஸ் பண்ற SIM கார்டு தொழில்நுட்பம்) குரல் சேவையை அளிப்பதுடன், சர்க்யூட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தகவல்களை நொடிக்கு 14.4 கிலோபிட்கள் என்ற அளவில் பதிவிறக்கம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மொபைல் மல்டிமீடியா பயன்பாடுகளுக்கு உதவும் வகையில், மிக விரிந்த அலைக்கற்றைகளில்சிறப்பு பெற்ற அலைவரிசை பயன்பாட்டுடன் 3ஜி நுட்பமானது பேக்கெட்-ஸ்விட்சிங் செய்யப்பட்ட தகளைக் கையாள்கிறது.

4ஜி அல்லதுநான்காம் தலைமுறை, open wireless architecture(திறந்தவெளி அலைவழி கட்டுமானம்) கொண்டு செயல்படுகிறது மேலும் இது சர்வதேச மொபைல் தொலைதொடர்புகள்-வளர்ச்சி (IMT-advanced)தரமுறைஎன்று சர்வதேச தொலைதொடர்புகள்ஆணையத்தால் வரையறுக்கப்பட்டது. ultra-band internet services (அல்ட்ரா-பான்ட் இணைய சேவைகள்). உயர் துல்லியமான அலை தொலைக்காட்சி (HD mobile TV ), 3D தொலைகாட்சி, காணொளி குழு தகவல் பரிமாற்றம்(video conferencing) ஆகிய அனைத்தும் 4ஜியின் கீழ் வழங்கப்படும் சேவைகளே.  இந்தியாவில் பார்தி ஏர்டெல் 4ஜி சேவையை தில்லி,கொல்கத்தா ,பெங்களுரு ஆகிய நகரங்களில் வழங்குவதன் மூலம் உலகில் 4ஜி சேவையை பயன்படுத்தும் ஒரு சில நாடுகளிள் இந்தியாவும் இடம்பெறுகிறது.  இந்த 4ஜி மூலம் அதிக பேண்ட்விட்த்தைக் கொண்டு அதிவேக தகவல்பரிமாற்றத்திற்கு வலிவகுத்துள்ளது. வைமேக்ஸ்2.0  , நீண்டகால LTE-(long term evolution)ஆகிய தொழில்நுட்ப சேவைகள் மூலம் 4ஜி அமைப்பு இயங்குகிறது.

இதர சேவைகளை விட 4ஜி கொண்டுள்ள கூடுதல் பயன்பாடுகள்,

> வளர்ச்சி பெற்ற OFDM() நுட்பதைக்கொண்டு அதிக அளவிலான அலைகற்றைத் திறன் கொண்டிருக்கும்.

>  மேம்படுத்தப்பட்ட அலைத்தொடர்பு.

>  குறைந்த செலவில் அலைவழிக் கட்டுமானம் கொண்டது.

> அலைபேசியில் நொடிக்கு 100 மெகா பிட்ஸ் அளவில் (download)தரவிறக்கமும், நொடிக்கு  50 மெகா பிட்ஸ் வேகத்தில் (upload)பதிவேற்றமும் செய்யும் திறன்கொண்டது. கம்ப்யூட்டரில் 1 ஜிகா பிட்ஸ் அளவில் தரவிறக்கம் செய்யலாம்.

>  குறைந்த அளவேயான அலைக்கற்றை பயன்பாடு.

>  மிகத் துல்லியமான ஒலி/ஒளி பறிமாற்ற சேவை கொண்டுள்ளது.

ஆனால் இந்த 4ஜி பயன்பாடுதிறம்பட செயல்பெற அலைபேசிகருவியானது 4000mAh பாட்டரி திறன் தேவையை பூர்த்திசெய்துவிட்டால் 4ஜி யின் தடம் பெரிதாகும்.

அதில் வை-மேக்ஸ்2.0IEEE’s 802.16m முறை4ஜி சேவை 2010 ஆம் ஆண்டு முதல் கைபேசியில் வழங்கபடுகிறது. எல்.டி.இ-வளர்ச்சி (LTE-advanced) முறை சேவை பயன்பாடு கொண்ட கைபேசிகள் 2011 முதல் கிடைக்கபெருகிறது. ஆனால்  வை-மேக்ஸ்2.0யை விட LTE-advanced முறை பயனுறுதி மிக்கது. எனவே வை-மேக்ஸ்2.0அவ்வளவுவரவேற்ப்பு பெற்றிடவில்லை. ஆனால் இந்தியாவில் LTE-advanced வசதி கொண்ட கைபேசிகள் இன்னும் வழக்கத்திற்கு வரவில்லை என்பதுதான் உண்மை. தற்போது இந்தியாவில் பயன்பாட்டிலிருக்கும் 4ஜி வசதிகொண்ட அலைபேசியின் மூலம் முழுமையான 4ஜி சேவையை பெறமுடியாது மாறாக 3.5ஜி அளவு சேவைகளையே பெற இயலும். முழுமையான 4ஜி சேவை வசதி கொண்ட கருவிகளை இந்தியாவுக்கு தகுந்தாற்போல் வடிவமைப்பதில் ஏர்டெல் நிறுவனம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. வளரும்!

Exercise correct the errors in subject-verb agreement in https://www.justbuyessay.com the following paragraph


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தழைத்தோங்கும் நான்காம் தலைமுறை”

அதிகம் படித்தது