மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை

ஆச்சாரி

Mar 1, 2012


பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். நவம்பர் 1999 ஆம் ஆண்டு யுநெஸ்கோ உலக தாய்மொழி தினமாக அறிவித்தது.  பிப்ரவரி 21 1948 இல் பாகிஸ்தானின் ஆளுநர் முகமது அலி ஜின்னா, “உருது தான் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்குமான ஒரே தொடர்பாட்டு மொழி” என அறிவித்தார். இதை பங்களா மொழியை தாய் மொழியாகக் கொண்ட கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) மிகக்கடுமையாக எதிர்த்தது. பிப்ரவரி 21 1952 ஆம் ஆண்டு சில மாணவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அடக்க மேற்கு பாகிஸ்தான் காவலர்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் காவல்துறையால் கொல்லப்பட்டனர். அதை நினைவில் கொண்டு தாய்மொழியின் முக்கியத்துவம் மற்றும் மொழி சுதந்திரத்தின் அவசியத்தை உணர்த்தவும் இந்த தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அந்த இனத்தின் மொழியை அழிப்பார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தாய்மொழி வெறும் ஓசையும், எழுத்து வடிவமும் கொண்டது மட்டுமல்ல, அந்தந்த இனத்தவரின் உணர்வோடு கலந்த ஒன்றாகும். பன்னாட்டு கலாச்சாரங்களோடு நாம் வாழ்ந்தாலும் தாய் மொழியை மட்டும் எவ்விடத்தும் எதற்காகவும் இழந்துவிடக் கூடாது. ஆந்திராவில் பள்ளிகளில் ஆங்கிலமும் இந்தியும் முதன்மைப் பாடமாக இருப்பாதால் பல மாணவர்களுக்கு அவர்களின் தாய் மொழியான தெலுங்கு மொழியே தெரியவில்லை என்று ஒரு செய்தி அறிந்தோம்.

இதைக் கூறும் இவ்வேளையில் நம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் நாம் நினைவில்கொள்ளவேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டம் 1938 இல் ராசாசி அவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உட்பட்ட இந்தியாவில் மதராச மாகாணத்தில் இந்தி மொழி கட்டாயம் என்ற பொழுது அதனை  தந்தை பெரியார் மற்றும் எதிர்க் கட்சியான நீதிக் கட்சியினரும் எதிர்த்தனர். இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1967 வரை இந்திரா காந்தி இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் இந்தியாவின் பயன்பாட்டு மொழியாக இருக்கும் என்று அறிவிக்கும் வரை தொடர்ந்தது. 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகமே இரத்த காடாக மாறியது.  இதில் எண்ணற்றோர் தங்கள் உயிரை  இழந்தனர். தமிழர்கள் இந்த தாய்மொழி தினத்தை நம் தமிழ் மொழிக்காக போராடிய மொழித் தியாகிகளை நினைவு கூறி நம் தாய்மொழியை போற்றி பாதுகாக்க உறுதிபூண வேண்டும்.

யுநெஸ்கோ தாய்மொழி கல்வியின் அவசியத்தை உலகெங்கும் பரப்பி வருகிறது. உலகில் உள்ள 7000 மொழிகளில் பாதிக்கு மேல் அழியும் நிலையில் உள்ளது. இதனை அறிந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தின் உள்ள எல்லா மொழிகளை ஆதரிக்கவும் பாதுகாக்கவும் செயலாற்றிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக சிறுபான்மையினர் பேசும் மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை அழிவில் இருந்து காக்க செயல்படுகிறது. பன்மொழி கலாச்சாரத்தை வரவேற்கிறது. மே 16 , 2007 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் 2008 ஆம் ஆண்டை உலக தாய்மொழி  ஆண்டாக அறிவித்துள்ளது.

2012 தாய் மொழி தினத்தை ஒட்டி யுநெஸ்கோவின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட  செய்தி மடலின் தமிழாக்கம்

‘ஒரு மனிதனுக்கு தெரிந்த மொழியை பேசினால் அது அவன் அறிவை மட்டுமே அடையும், அதுவே அவன் தாய் மொழியில் சொன்னால் அவன்  இதயத்தை சென்றடையும்’. என்று தென்னாப்பிரிக்க புரட்சியாளர் நெல்சன் மண்டேலா கூறினார்.  நம் சிந்தனையில் இருக்கும் மொழி மற்றும் நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி இதுவே நமக்கு கிடைத்த பெரும் சொத்து. பன்மொழிக் கொள்கையின் மூலம் நல்ல தரமான கல்வியும் எல்லா மொழிகளுக்கும் உரிய இடத்தைத் தந்து ஒரு ஏற்றத் தாழ்வு இல்லாத ஒரு சூழலை உருவாக்குவோம். நம்முடைய வாழ்கையின் தரம், முனேற்றம் இந்த இரண்டையும் நம்  மொழியாலே அமைகிறது.  மொழி தான் நாம். அதை பாதுகாப்பத்தின் மூலம் நம்மையே நாம் பாது காக்கிறோம்.

உலக தாய்மொழி தினத்தை பன்னிரண்டு யுனெஸ்கோ அமைப்பு வருடங்களாக கொண்டாடுகிறது. இந்த தினம் உலகில் உள்ள பல்வேறு மொழிகளை பாதுகாக்கவும் பல மொழி கொண்ட பல் வேறுபட்ட கலாச்சாரங்களை அங்கீகரிக்கவும் செய்கிறது. இந்த பதிமூன்றாவது வருட கொண்டாட்டம் பன்மொழிகளைக் கொண்ட ஒரு கல்வியை அர்ப்பணிக்கிறது. இதுவரை ஆராய்சியாளர்களின் பணி, பன்மொழி கொண்ட  கல்வியின் சிறப்பினை  நமக்கு உணர்த்துகிறது. அது சிறந்த முன்னேற்றத்தையும், குறிக்கோளையும் துரிதப்படுத்துகிறது. தாய்மொழியில் கல்வி கல்லாமை என்னும்  நிலைமை சமூகத்தில் இருந்து விரட்டபட வேண்டிய ஒன்று என்பதை உலக தாய்மொழி தினம் நமக்கு உணர்த்துகிறது. ஆனால் உண்மையில்  சிறுபான்மையினர் பேசும் மொழிகள் தற்காலிக கல்வி முறையால் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் தொடக்கக்கல்வியை தாய்மொழியில் தொடங்கி பிற்பாடு தேசிய மற்றும் பயன்பாட்டு மொழிக்கு மாறுவதன் மூலம் சம உரிமையும் அனைத்து மொழியினரின் பங்களிப்பையும் அதிகரிக்கும்.

யுநெஸ்கோ வின் அலைபேசி கற்றல் வாரம் மூலமாக அலைபேசி தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து மொழி கல்வியை எவ்வளவு சிறப்பாக கொடுக்கமுடியும் என்பது தெரிகிறது. இதன் மூலம் பன்மொழி கல்வியை பத்துமடங்கு எளிமையாக கொடுக்கமுடியும். இது நம் தலைமுறைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதனால் ஒரு மொழியின் குறைபாட்டை தடுக்கமுடியும். மொழிகளாக நாம் வேறுபட்டு நிற்பது பொதுவான உலகப் பண்பாடு. இந்த வேறுபட்டால் சமூகம் சிதறுண்டு கிடப்பதும் இயல்பே. இந்த நூற்றாண்டின் இறுதியில் 6000 மொழிகளில் பாதி மொழிகள்  அழிந்துவிடக்கூடிய நிலையில் உள்ளன. யுநெஸ்கோவின் உலகமொழி வரைபடமே அழியும் தருவாயில் உள்ளது. ஒரு மொழியின் அழிவு நம் மனித சமூகத்தின் கலாசார ஏழ்மையே ஆகும். ஒவ்வொரு மொழியும் ஒரு  கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு, அது ஒரு ஆக்கப்பூர்வமான பண்பாட்டின் கூட்டு. மனித குலத்தின் வேறுபட்ட கலாச்சாரத்தை(cultural diversity) இயற்கையின் வேறுபட்ட உயிரியல் இனங்களுடன்(Bio diversty) நாம் ஒப்பிடலாம். பல பழங்குடியினரின் மொழியல் உயிரியல் இனங்களின் உண்மையும் அதை நிர்வகிப்பதற்கான வழிமுறையும் புதைந்துள்ளது. வேறுபட்ட உயிரினங்களின் பாதுகாப்பு எப்படியோ அதைப் போன்றே பல்வேறு மொழி கலாச்சாரங்களின் பாதுகாப்பும். ஒரு மொழியின் வலிமை என்பது ஒரு சீரான பண்பட்ட வளர்ச்சியில் உள்ளது.. இதையே யுநெஸ்கோ அமைப்பு, ரயோவில் நடந்த ஐநாவின் சீரான பண்பட்ட வளர்ச்சிக்கான கருத்தரங்கில் கூறியது.

ஒரு மொழியின் செழுமை அந்த மொழி பேசும் மற்றும் அதை பாதுகாக்க துடிக்கும் அந்த சமூகத்தினரின் கையிலே உள்ளது. யுநெஸ்கோ அப்படிப் பட்ட சமூகத்திற்கு மதிப்பளிக்கிறது மற்றும் அவர்களின் கல்வி,  சமூக வளர்ச்சிக்காக குரல் கொடுத்து அவர்களின் சமூக திட்டங்கள் செம்மையாக இருக்க உதவுகிறது. பன்மொழி கொண்ட சமூகம் என்பது நம்முடன் வாழ்ந்துகொண்டுள்ள ஒரு வளம். அதை நம் உயர்வுக்கு பயன்படுத்துவோம். தாய் மொழியைக் காப்போம். அதை உயர்த்துவோம்.

Use a hyphen to avoid ambiguity or to form a single idea from two or online writing help for college students more words she recovered her health

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாய்மொழி காத்தல் நம் தலையாய கடமை”

அதிகம் படித்தது