மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தார்ணி டெவில்

ஆச்சாரி

Feb 1, 2012

தார்ணி டெவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு அதிசய எறும்புண்ணி. இது தார்ணி டிராகன் என்றும் அழைக்கப்படும். ஆஸ்திரேலியவின்  வறண்ட பகுதிகளில் இவை காணப்படுகிறது. இருபது வருடங்கள் வாழக்கூடியது.தார்ணி டெவிலின்  வெளிப்புறம் மேல் பரப்பில் வரிசையாக பெரிய தண்டை முட்களால் மூடப்பட்டுள்ளது. இத்தண்டை முற்கள் அவைகளின்  எதிரிகளிடம் இருந்து தற்காத்துகொள்ள உதவுகிறது.

தார்ணி டெவிலின் ஒரு அசாதாரண அம்சம் அதன் தோல் மை உறிஞ்சும்  காகிதம் போன்று நீர் உறிஞ்சும் திறன் உடையது. தோல் பகுதியில் இருக்கும் மயிரிழை போன்ற நாளம் மூலம் மழை நீர், ஈரமணல் , காற்றில் உள்ள நீரை உறுஞ்சுகிறது. அது நிற்கும் இடத்தில் நிற மை கலந்த நீர் ஊற்றி செய்த ஆராய்ச்சியில் இதைக் கண்டறிந்தனர்.

இதன் உடலின் நிறம் பச்சோந்திகளைப் போல் வண்ணம் மாற்றம் அடையக்கூடியது. பின்னணி நிரத்திற்கேற்ப இதன் நிறம் மஞ்சள்,சிகப்பு, கருஞ்சிகப்பு, கருப்பு என்று மாறும் தன்மையுடையது. எதிரிகளிடம் இருந்து ஏமாற்று வித்தை செய்து இது எளிதில் தப்பிக்க உதவுகிறது.
எதிரிகளைக் கண்டு பயம் ஏற்படும்  போது இருமுன்னங்கால்களுக்கு இடையே தலையை  சொருகிக்கொள்ளும். கழுத்தின் பின் புறத்தில் உள்ள  குமிழ் போன்ற சதை வளர்ச்சி தலை போன்று போலியாக காட்சியளிக்கும்.

எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நினைத்தால் காற்றை உள்ளுக்குள் இழுத்து  ஊதி உடலை பெரிய பந்தைப் போல் ஆக்கி பெரிய தோற்றமளிக்கும் தன்மையுடையது.
குளிர்காலத்தில்  தார்ணி டெவில் இரவில் தூங்கப் போகும் போது, நிலத்தில் உள்ள மணலைத் தோண்டி உடம்பை மணலில் புதைத்துக்கொண்டு உறங்கும். இதன் மூலம் உடல் இரவு முழுவதும் வெப்பமாக இருக்கும்.

இது மெதுவாக நகரக் கூடிய பல்லி, எனவே எளிதில் உணவாகக் கூடிய இரை விலங்கு . ஆனால் விரைவாக உண்ணக்கூடிய விலங்கு. ஒரு வேலை உணவிற்கு 600 முதல் 3000 எறும்புகள் வரை உண்ணக்கூடிய தன்மையுடையது. ஒரு முறை ஒரு எரும்பைத்தான் அதனால் விழுங்க முடியும்.  ஆனால் நிமிடத்திற்கு 45 எறும்புகளை உண்ணக்கூடியது தாரணி டெவில்.

Do you want your child meeting strangers in your http://www.phonetrackingapps.com/ area

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தார்ணி டெவில்”
  1. kondraivendhan says:

    ஆகா…..!!!! அருமையான அரசியல் டெவில். இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடிய அதிசய நிறபேத டெவில். அதாகப்பட்டது வர்ண ஆஸ்ரமத்தில் புழுத்துப்பெருகிய டெவில். முழுசாக உண்ணாமல், கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சும் அற்புத ஆற்றல் உள்ள டெவில். இது தன்னை அண்டிவருபவர்களையெல்லாம் இந்த பல வர்ண ஆஷ்ரம கோட்பாட்டில் உள்ள பல அடுக்கு மாளிகையில் இடம் ஒதுக்கி மேலே உச்சாணியில் இருந்து ரத்தம் உறிஞ்சும் டெவில். அருமையான உண்மைக்கதை. இது போல பல உண்மைக்கதைகளைத் தேடிப்பிடித்து வாசகர்களுக்குத் தாருங்கள். புண்ணியம் பல கோடி.

அதிகம் படித்தது