மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தூக்குத் தண்டனையை எதிர்க்கும் தமிழர் எழுச்சி இயக்கம்

ஆச்சாரி

Mar 1, 2013

   குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தூக்குத் தண்டணை வேண்டாம் என்று பல நாடுகளும், வேண்டும் என்று சில நாடுகளும் வாதிட்டும், முடிவெடுத்ததும் வரும் இச்சூழலில், தமிழக கர்நாடக அதிரடிப்படையினர் சென்ற பேருந்தை 1993 ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் குழுவினர் கண்ணிவெடித் தாக்குதல் மூலம் தகர்த்தனர்.இந்தத் தாக்குதலில்  வனத்துறை அதிகாரி, காவல் துறையினர் உட்பட 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.இதில் தமிழக அதிரடிப்படை காவல் சூப்பிரண்டாகப் பணிபுரிந்த கோபால கிருஷ்ணன் படு காயத்துடன் உயிர் பிழைத்தார்.

        இந்த வழக்கில் சந்தனக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதவன், பில வேந்திரன் ஆகிய நான்கு பெருக்கும் மைசூர் தடா நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் வழக்கில் அவர்கள் நான்கு பேருக்கும் தூக்குத் தண்டை விதிக்கப் பட்டது. இதனால் கர்நாடக பெல்காமில் உள்ள இண்டல்கா சிறையில் இந்த நான்கு பேரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடைய கருணை மனுக்களை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 11 ம் தேதி நிராகரித்து விட்டார்.

      இதனால் இருவாரங்களில் இவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என கர்நாடக சிறைத் துறையினர் அறிவித்தனர்.      18-02-2013 அன்று பெல்காம் சிறையில் இந்த நான்கு பெருக்கும் தூக்குத் தண்டணை நிறைவேற்றுவதற்க்காக மருத்துவப் பரிசோதனை நடந்தது. இச்சிறையில் தூக்குத் தண்டணை நிறைவேற்றுவதற்காக அசோக் என்பவருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

        இந்நிலையில் இந்த நான்கு பேர்களில் ஒருவரான மீசை மாதையனின் மனைவி தங்கம்மாள் என்பவர், “ செய்யாத குற்றத்துக்காக கடந்த 25 வருசமா அவருக்கு சிறையில தண்டண கொடுத்தது போதும், அதையும் மீறி எம்புருசன இந்த அரசு தூக்குல போடணும்னு முடிவெடுத்தா, என் குடும்பத்தோட அந்தச் சிறை முன்னாடி தீக்குளிப்பேன் ”  எனத் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். அதே நேரம் இந்த நால்வரில் மற்றொருவரான ஞானப்பிரகாசத்தின் மனைவி மேரி, “சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இவருக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, கடவுள் தான் என் கணவரைக் காப்பாத்தணும்” எனக்கூறியுள்ளார்.

     பர பரப்பாகச் சென்று கொண்டிருக்கும் இந்த நான்கு பேரின் தூக்குத்தண்டணைப் பிரச்சனையில் 09-02-2013 அன்று சுமிக் நாராயணன் என்பவர் ஒரு மனுவைத் தாக்கல் செய்து,இவர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டணையை ஆயுள் தண்டணையாக மாற்ற வேண்டும் எனக்கூறி இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.

         இவ்வழக்கு விசாரணை தொடர்ந்தது நடக்கும் இச்சூழலில் ஞானப்பிரகாசம்,பிலவேந்திரன், சைமன்,மீசை மாதவன் ஆகிய இந்த நான்கு அப்பாவித் தமிழர்களை தூக்கிலிடுவதை நிறுத்து எனக்கூறி தமிழர் எழுச்சி இயக்கமும், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து மக்கள் தடுப்புச் சுவர் ஆர்ப்பாட்டம் என்ற நிகழ்வை                   19-02-2013 செவ்வாய் அன்று காலை 11 மணி அளவில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியது.

          இப்போராட்டத்தில் மேலே கூறிய இரு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், மகளிர் இயக்கமும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ்ச் சான்றோர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்:         

1.வீரப்பனைக் கண்ணால் கூடப் பார்க்காத நான்கு அப்பாவித் தமிழர்கள் மீது போய்க் குற்றத்தைச் சுமத்தி,கடந்த இருபது ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டு, மனித நேயத்திற்கு எதிரான செயலைக் கண்டிப்பதோடு  . . .குற்றமற்ற நான்கு அப்பாவித் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

2. எங்கள் தேசம் காந்தி தேசம் என்று மார்தட்டிக் கொள்ளும் இந்திய அரசு, மறுபுறம் கடவுள் படைத்த உயிர்களை எந்த அரசாலும், அதிகாரத்தாலும் பறிக்கக் கூடாது என்று கூறிய காந்தியக் கருத்துக்கு எதிராக மரண தண்டணைகளை வழங்கும் கொலைகார தேசமாக இருப்பதைக் கண்டிப்பதோடு . . .மரண தண்டணையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

3. தூக்குத் தண்டணை தொடர்பான கருணை மனுவைப் பெரும் குடியரசுத் தலைவர், இரண்டரை ஆண்டுகளில் அவற்றின் மீதான முடிவை அறிவிக்க வேண்டும் என்று நிலை இருக்கும் பொது . . இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக, அப்பாவித் தமிழர்கள் மீதான கருணை மனுவை ஒன்பது ஆண்டுகள் கடந்த பிறகு நிராகரித்த குடியரசுத் தலைவரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

4. சதாசிவம் கமிசன் ஆணைப்படி, சிறப்பு அதிரடிப் படையின் காட்டுமிராண்டிச் செயலால் பாதிக்கப்பட்ட அப்பாவி  மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்ற சதாசிவம் கமிசனின் ஆணையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

5. சந்தனக் கடத்தலில் ஈடுபட்டதாக வீரப்பன் மீது மட்டும் நடவடிக்கை எடுத்த சிறப்பு அதிரடிப் படையினர், அந்த சந்தனக் கட்டைகளைப் பெற்றவர்கள் மீதோ  . . . அவர்களிடம் கொண்டு சென்றவர்கள் மீதோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டிப்பதோடு . . . இந்தச் சிறப்பு அதிரடிப்படையினருக்கு, தமிழக அரசு இலவசமாக வழங்கிய நிலங்களையும்,பதக்கங்களையும் திரும்பப் பெறவேண்டும்

     போன்ற பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த மக்கள் தடுப்புச் சுவர் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பாதுகாப்பிற்காக பல காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம்,  எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் சிறப்பாக முடிந்தது.

By prompting learners to articulate the papers for college steps taken during their thinking processes, the software creates a record of thought that learners can use to reflect on their work and teachers can use to assess student progress

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தூக்குத் தண்டனையை எதிர்க்கும் தமிழர் எழுச்சி இயக்கம்”

அதிகம் படித்தது