மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேங்காய்ப்பால் கோழிக் குழம்பு

ஆச்சாரி

Oct 1, 2012

தமிழ்  நாட்டில்  அசைவ உணவு வகைகளில் நாம் காரம் அதிகமாகவே சேர்த்து உட்கொள்கிறோம். உணவருந்த எந்த  உணவகத்திற்கு சென்றாலும், பரிமாறுபவரிடம் நாம் கேட்கும் வழக்கமான கேள்வி,” இங்கு காரசாரமாக எது கிடைக்கும்?”. ஆனால், கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் குழம்பு வகையானது, “கார”க் குடும்பத்தை சேர்ந்தது அல்ல. இட்லியுடனோ, ஆப்பமுடன் சேர்த்தோ, இதனை உண்டால், ஒரு புதிய அனுபவம் நிச்சயம்.

தேவையான பொருட்கள்:

கோழி                               : அரை கிலோ
சமையல் எண்ணெய்   :5 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு.
வெங்காயம்(சிறியது)  :ஒரு கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி                     : இரண்டு (பெரியது)
பச்சை மிளகாய்          : மூன்று
வர மிளகாய்               : இரண்டு
கருவேப்பிலை            : ஒரு கொத்து
சிக்கன் தூள்                : மூன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள்               : ஒரு தேக்கரண்டி
உப்பு                          : தேவையான அளவு
கடுகு                         : அரை தேக்கரண்டி
தேங்காய்                    : ஒரு மூடி(தேங்காய் பால்)

செய்முறை:

சட்டியில் சமையல் எண்ணையை விட்டு கடுகு, பச்சை மிளகாய், வர மிளகாய், கருவேப்பிலை, சிறிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர், கோழி இறைச்சி சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, மசாலா தூள் சேர்த்து, அதன் பிறகு சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும். நன்கு மூடி வேக வைக்கவும். பாதியாக கோழி இறைச்சி வெந்ததும், தேங்காய் பாலை ஊற்றி, நன்கு கலக்கி மூடி வைக்கவும். தேங்காய்ப் பால் வற்றி, குழம்பு நிலைக்கு வரும் வரை வேகவிட்டு காத்திருக்கவும். பிறகு உங்களுக்கு தேவையான பதத்தில் இறக்கி எடுத்துக் கொள்ளவும். இறக்கி வைத்தவுடன், அதன் மேல் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு: இறைச்சியை சமைக்கும் முன், தயிரில் கழுவுவது நல்லது. இதனால், இறைச்சி மிருதுவாக இருக்கும்.

Even when a writer uses an impersonal point of view, avoiding i, me, my, we sense a the mla handbook for writers of research papers personality

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேங்காய்ப்பால் கோழிக் குழம்பு”

அதிகம் படித்தது