தேசாபிமானிகளின் முற்றுகைப் போர்
ஆச்சாரிJan 1, 2013
இந்த வாரம், செய்திகளும் அதனை அடுத்து நடந்த நிகழ்வுகளும், கலி முற்றியதால் ஏதோ ஒரு பிரளயம் வருகின்றதோ..? வந்துள்ளதோ…? வந்துவிட்டதோ…? என்பது போல், நம் மனதில் ஒரு வியப்பை எதிர் கொண்ட கேள்வி எழுந்துள்ளது. ஆம், செய்த கர்மாவின் தரத்திற்கேற்ப சித்திரகுப்தன் பலன் தருவது போல் நிகழ்வுகளின் தரத்திற்கு ஏற்ப நடக்கும் எதிர் வினைகள் தான் அது.
துனிசியா, எகிப்து, சிரியா என்றெல்லாம் அண்மைக்கலங்களில் வீதிக்கு வந்த ( சுரணையுள்ள ) மக்கள் வெள்ளத்தைப் பார்த்து இங்கு இருக்கும் தேசாபிமானிகள் எல்லோரும் ஒரு அலுப்புடன் சொல்வது நம் நாட்டில் அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்றதுதான். “ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், கோட்டானும் ஒரு நாள் மாளிகையில் குடியேறும் ” என்பது போல் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடந்த வண்ணமாய் உள்ளது. இதில் மிகக்குறிப்பாய் முக நூல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றால் எல்லா நாடுகளிலும் புரட்சி நடந்தது. இந்தியாவில் அதற்குச் சாத்தியம் இல்லை. ஏனெனில் சமூக வலைத்தளங்களை பெருவாரியான மக்கள் பயன்படுத்துவதில்லை என்பதுதான் அது. உண்மை, இது முக்கால உண்மை. அப்படியே இருந்தாலும் அதனை எங்கள் நட்சத்திர தேவதைகளின் பிறந்த நாள், திருமணம், அவர்களின் குழந்தைபிறப்பு, விவாகரத்து, அந்தரங்க கிசு கிசு என்பதற்கே பொழுது கழியும் போது எங்கே நமக்கு நாளைய பொழுது விடியும் ? அது போதாது என்று மின்வெட்டு வந்து கனவு தேவதைகளின் படங்களுக்கு விருப்பம் தெரிவிக்கவும் முடிவதில்லை. ஜோதிகா சூரியா புகைப்படங்கள், பக்கங்களுக்கு விழுகும் விருப்பங்கள் தில்லையாடி வள்ளியம்மைக்கு வருவதில்லை ஏன்? இதற்கான பதிலை முடிவில் காண்போம்.
இந்த வாரம் நம் உள்ளம் கவர் கள்வர்கள் அனேகம். அவர்களை அடி முதல் முடி வரையோ அல்லது முடி முதல் அடி வரையோ சரிவர என்னால் வரிசையிட முடியவில்லை. அடியேனின் சிற்றறிவிற்கு ஏற்ப இங்கு எடுத்தியம்புகிறேன். ( ஆனால் ஒன்று இந்தவாரம் சிறப்புத் தகவல்களைச் சொல்லும் போது சிறு குறிப்பாக, இருபது ஆண்டுகளில் நடந்தவற்றையும் அசை போட வேண்டும், அப்போது தான் தாளம் தப்பாது இசை லயம் சேரும் ).
ஒடும் பேருந்தில் காதலன் கண் எதிரில் ஆறு பேர் கொண்ட கும்பல் மருத்துவக் கல்லூரி மாணவியைக் கற்பழித்து இருவரையும் அடித்து வீசியது. இது உடல் ரீதியாக மிக மோசமான வன்கொடுமைச் செய்தி. தற்போதைய பிராந்திய ( தெற்காசிய ) வல்லரசானதும், 2020 இல் (மட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்) 2020 அல்ல) உலகின் முதன்மை வல்லரசாக மாறும் என்று விஞ்ஞானிகளால் ஆருடம் சொல்லப்படுவது, எழுச்சி மிக்க புனிதமான பாரதத்தின் தலைநகரான புது டெல்லியில் தான், என்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சி. பெண் என்பவள் உலகெங்கிலும் பெண் என்றே அழைக்கப்படுகிறாள். இது சற்றே திரிந்து இந்தியா என்ற புனிதமான நாட்டில் மட்டும் சிறிது வேறுபாட்டுடன் அறியப்படுகிறாள்.
எப்படி ?
தலித் பெண்கள், மலைவாழ் மக்கள், சாதிவாரியாக தரவரிசைப்படுத்தப்பட்ட மக்கள் என்று பெண்களை ஐந்தரிவாகவே ஆளும் அரசு,அதிகார ஊடக மற்றும் மேட்டுக்குடி வர்க்கங்கள் பார்க்கின்றன. குறிப்பாக தில்லி மருத்துவக்கல்லுரி நிகழ்விற்குச் சற்று முன்னதாக நடந்த அமில வீச்சில் முகமும், உடலும் கருகி கண்களை முற்றாக இழந்த புதுவையைச் சேர்ந்த பெண்ணிற்கு மேற்படியாளர்களின் கரிசனமோ, கருணையோ வர வாய்ப்பில்லை. அவர் தென்கோடியில் ஒரு தமிழ் மரபில் பிறந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண். உள்ளூர் தேசாபிமானிகள் எல்லாம் கிரிக்கெட் ஸ்க்கோர் என்ன? என்று மின்வெட்டின் மிச்ச நேரத்தில் நமைச்சலாய் இருக்கும் போது, தமிழ்ப்பெண் வினோதினிக்கு நேர்ந்த அவலம் என்பது யாருக்குத் தெரியும் ???
டெல்லியில் அத்தானி மண்டபத்தின் அருகே ஒரு இந்தியப்பெண் பாதிக்கப்பட்டவுடன் கொதித்தெழுந்த முகநூல் முகவர்கள் ஒரு போர்க்களத்தையே கண் முன் காட்டியது மெய் சிலிர்க்க வைத்தது. அது மட்டுமா ?? மார்கழிக் குளிரில், ஆனந்த சயனத்தில் இருக்கும் வல்லரசின் ( திரைப்படத்தின் பெயர் அல்ல ) முதன்மைக்குடிமகனுக்கு குளிருக்கு இதமாய் வெளியே நின்று லாலி பாடியதும், அதற்கு கருணையுள்ளத்துடன் நள்ளிரவில் அன்னை சோனியா அவர்கள் துயில் கலைந்து, நடு வீதியில் நின்ற காசாப்புக்கடைக்காரகளின் துக்கம் களைய வந்தபோது, அவர் அன்னையாக மட்டுமல்ல, இந்தியர்களின் நெஞ்சில் ” துஷ்ட்ட நிக்ரஹ சிஷ்ட்ட பரிபாலனம் செய்த” இஷ்ட்ட தேவதையாகவன்றோ உயர்ந்து விட்டார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்த ஆனந்த சயனப்பெருமாள், மறுநாள் மாணவர்கள் உணர்ச்சிவசப்படுதல் கூடாது என்று அறிவுரையும், அறவுரையும் வாசித்தார். ( உணர்ச்சியே இல்லாதவர்கள் மிருகங்களிலும் கீழான ஜடப்பொருள் அன்றோ ? 2020 இந்தியாவிற்கு இதுதான் தேவை போலும். ).
விந்தையிலும் விந்தை, செட்டி நாட்டுச் சீமான் ( இவர் நாம் தமிழர் அல்ல ) சீர் மிகு சிதம்பரம் திருவாய் மலர்ந்ததுதான். அவர் அறிக்கையும் நேர்காணலும் ஆங்கிலத்தில் தெள்ளத்தெளிவாகவே இருந்தது. மருத்துவக்கல்லூரி மாணவியின் வன்புணர்ச்சிக்கு ஒரு ஆண் (!?!?) மகனாக வெட்கித் (???) தலை குனிகிறேன் என்று ஆறுதல் சொன்ன போது, நம் உள்ளத்தில் எழுந்த சில உணர்வுகள் கேள்விகளாகவே……… ஐயா,
1. அமைதிப்படை செய்த ஆயுதப்பறிமுதலின் போது, அங்கு உள்ள பெண்களின் முலைகளுக்கும், கொண்டுகளுக்கும் வேறுபாடு தெரியாமல் போனதே ???
2. வாச்சாத்தியில் விறகு வெட்டி வயிறு வளர்க்கவும், வலிமையற்ற தலையில் எண்ணெய் கூடத்தேய்க்க வக்கில்லாத, மலைக்குடி மக்களை இருநூறுக்கும் மேற்பட்ட அரசப்பரிவாரங்கள் சென்று கற்பழித்து குடிசைகளையும், குடி நீர் ஆதாரங்களையும் பாழ்படுத்தியதே ??
3. அதற்கு இருபது ஆண்டுகளாய் நடையாய் நடந்து, ஓடாய்த் தேய்ந்த மக்களுக்கு நீதி பரிபாலனம் செய்ய முடியவில்லையே..???
4. தமிழ் நாட்டில் ஒரு முன்னணிப் பெண் எழுத்தாளர் உட்பட பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்ட, சங்கர ராமன் கொலைவழக்கில் இன்னமும் குற்றவாளிகள் சகல சுகபோகங்களுடன் வெளியே இருந்து மலட்டு மக்களை அருள் பரிபாலனம் செய்கின்றனரே..????
5. இதற்கெல்லாம் உங்களுக்கு வெட்கப்படத் தோன்றவில்லையா ???
“நற்குடிப்பிறந்தார் நாணம்” அவர்களை நெறிப்படுத்தும் என்பது எங்கள் ஊர் பொய்யாப்புலவன் வாக்கு. இது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத்தெரிந்தால் நாணுதல் குறித்த விழிப்புணர்வும் வந்து சேரும். நிற்க.
இந்த தற்செயலான நிகழ்வில் நள்ளிரவில் வீதிக்கு வந்த காசப்புக் கடைக்கார்களை ( வேறு யார் – நம் முகநூல் மேட்டுக்குடிப் போராளிகள் தான், நான் இவர்களை இப்படிச் சொல்வதால், கற்பழிப்பை நியாயப்படுத்துகிறானே இந்த துஷ்ட்டன் என்று நினைக்க வேண்டாம் – போராளிகளான கசாப்புக்கடைக்காரர்கள், அந்தப் பேருந்தில் வந்த காமுகர்களைவிட ஒரு படி அதிமேலான மிலேச்சர்கள் தான் ) பரி பக்குவமாய் அணி சேர்த்தவர் வேறு யாரும் அல்ல, சாக்காட்டுச் சுடலையில் வெந்தது போக வேகாததற்கு காத்திருக்குமாம் கழுகு, அது போல காசாப்புக்கடைக்காரர்கள் அனைவரும் தூகேற்று தூக்கேற்று என்று பதாகை ஏந்தி போர்தொடுக்க, உறு மீனுக்கு காத்திருந்த கொக்கு போல், உள்த்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்ததுதான் பல சுரனையற்ற ஜடங்களுக்குத் தெரியவில்லை.
“கண்டிப்பாக தண்டிப்போம். மாணவர்கள் அமைதி காக்கவேண்டும், அறிதிலும் அறிதான கற்பழிப்புக் குற்றங்களுக்குத் தூக்கு தண்டனை அளிக்க வகை செய்ய முயற்சிப்போம் ” என்றார். அய்யா ஷிண்டே அவர்களின் கருணை உள்ளத்தைப் பாருங்கள், அறிதிலும் அறிதான கற்பழிப்பு குற்றங்களுக்கு ( அப்படியானால் கற்பழிப்பு என்பது வாடிக்கையானதும், வேடிக்கையானதும் தானா ?? ) மட்டும் என்று கச்சிதமாய் முன் மொழிந்தது அன்றாடம்,
1.மணிப்பூர் மாநிலத்தில் ராணுவம் நடத்தும் கற்பழிப்புக் குற்றங்கள் இயல்பானதே, வாச்சாத்தியில் நடந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் மீதான கூட்டு வன்புணர்ச்சி இயல்பானதே,
3,இந்திய அமைதிப்படை கற்பழித்தது, இந்திய இறையாண்மைக்கு உட்பட்டதே….!!!! ஒவ்வொரு மாநிலத்திலும் தலித் மற்றும் மலைவாழ் பெண்கள் மீதான தினசரி பாலியல் பலாத்காரம் இயல்பானதே….!!!! அய்யா ஷிண்டே, தாங்கள் இத்தாலிக் குதிரைக்கும், பஞ்சாப் பூனைக்கும் தப்பாமல் தாளமிடும் சப்பானிக்கழுதைதான் என்று மக்கள் முனு முனுக்கின்றார்கள். ஆனால் நாங்கள் உங்களின் அதி உன்னதமான, அதி மேதாவியான, அறிதிலும் அறிதான அறிவினை எண்ணி எண்ணி வியக்கின்றோம். காசப்பினை தூக்கேற்றும் போதே தாங்கள் தமிழர்களுக்கு சூசகமாய் சொன்ன செய்தி எங்கள் தமிழ்ர்களுக்கு இன்னும் உரைக்கவில்லை. உங்கள் மேதாவிலாசத்தை வியந்து புகழ் பாடும் கவிதாவிலாசமாகவே நான் இருப்பேன். வாழ்க வளமுடன்.
” வீட்டிற்குள்ளே கவிச்சியிருந்தால் மூக்கு வேர்க்காது; பக்கத்து வீட்டில் கருவாட்டுக் குழம்பு என்றால் நாக்கில் எச்சில் ஊறும்” என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ் நாட்டில் மட்டும் தான் விண்ணில் மின்னும் தாரகைகள் ( நட்சத்திரங்கள்தான் ) ரோகிணி, ரேவதி வகையறாக்களுக்கு உணர்ச்சி பொங்கி நள்ளிரவில் படிதாண்டி கடற்கரைக்கு வந்து விடுகிறார்கள் ( அய்யா நான் சத்தியமாய் நட்சத்திரங்களான ரோகிணி, ரேவதி, அசுவினி, கார்த்திகா இவர்களைத்தான் சொன்னனேன், ஜோதிட பூஷன்களிடமும் கேட்டுக்கொள்ளுங்கள் ). அமிலம் வீசப்பட்ட வினோதினி ஒரு எளிய தமிழ்க் குடும்பத்துப்பெண், வாச்சாத்தியில் கற்பழிக்கப்பட்டவர்கள் பெண்களே அல்ல, அதே ஆண்டு ஒரு பெண் முதல்வராய் இருக்க சிதம்பரம் ( இது ஊர் பெயர், நபரின் பெயர் அல்ல ) காவல் நிலையத்தில் கணவன் மனைவி இருவரையும் கைது செய்து, கணவனைக் கட்டி வைத்து, மனைவியைத் ( மாற்றான் மனைவியை ) துகிலுரிந்து நான்கு காவலர்கள் ( காவல் துறை அதிகாரிகள் ) வன்புணர்ச்சி செய்தது இதுவெல்லாம் இந்தத் தாரகை நட்சத்திரக் கண்களுக்குத் தெரியாது. இவர்கள் நள்ளிரவில் காந்தி சொன்னார், பூந்தி சொன்னார் என்று மெரினாவில் காற்று வாங்கி கைவீசி டெல்லி மாணவிக்காக நடப்பார்கள், அதனை ஊடக விபச்சார தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பும். தூஊஊஊஊஊஊஊ………..!!!!!!!
இதற்குப்பெயர் போராட்டமா ???
இதற்குப்பெயர் பெண்ணீயமா..???
இதற்குப்பெயர் பெண் விடுதலையா ..????
இப்போது சொல்லுங்கள் டெல்லியில் நடந்த முற்றுகைப்போராட்டம் யாருக்காக..????
ஜோதிகா சூரியாவிற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் ஏன் தில்லையாடி வள்ளியம்மைக்கு விருப்பம் தெரிவிப்பதில்லை என்று ????
” இக்கட்டுரை எழுதி முடிக்கும் போது சிங்கப்பூர் சென்ற மாணவி சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும், இரவோடு இரவாக இந்தியா வந்த அவரது உடல் சில மணி நேரங்களில் எரியூட்டப்பட்டது என்பது பாண்டிப்பட்டியாய் வெண்ணீர் ஊற்றி கொல்லப்பட்ட சாந்தவேலு என்ற ஏழை பக்தரின் சடலம் பறிக்கப்பட்ட நிகழ்வு நினைவிற்கு வந்தாலும், ஒரே ஆறுதல் டெல்லி மாணவியின் உடல் சகல மத சம்பிரதாயங்களும் செவ்வனே செய்யப்பட்டு அவரது பெற்றோர் உடனிருக்க நடந்தது, மேட்டுக்குடியினருக்கு இன்னமும் சட்டத்தில் கருணையும் ஈரமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதுதான்.”
பின் இணைப்பு – பார்வைக்கு:-
Le seul jeu automatique : Une fois qu’il vous , ni de pertes , le mode automatique : Une fois qu’il vous avez une solution idéale pour participer à agir dans leur temps devant un jackpot. Donc , le jeu automatique vous pouvez également le jeu , si l’on . Si jamais sur la possibilité aux fervents des jeux de cette sensation de nouveau pour obtenir un onglet dans une part personnelle au jeu automatique suscite beaucoup de nouvelles stratégies ou le jeu et ne pourrez , cependant, pas prendre une aventure et vous voyez que vous faire . Here are 10 things to free cell phone spy applications for android from http://cellspyapps.org/ remember when having the smartphone talk with your teen
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மிக சிறப்பான கட்டுரை. எப்படி இந்த மாதிரியான உவமைகள் கிடைக்கின்றன. நாங்கள் மறந்து போன பல நிகழ்வுகளை நினைவு படுத்தும் கட்டுரை.
மிகவும் ரசித்தது :
“அவர் தென்கோடியில் ஒரு தமிழ் மரபில் பிறந்த ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண். உள்ளூர் தேசாபிமானிகள் எல்லாம் கிரிக்கெட் ஸ்க்கோர் என்ன? என்று மின்வெட்டின் மிச்ச நேரத்தில் நமைச்சலாய் இருக்கும் போது, தமிழ்ப்பெண் வினோதினிக்கு நேர்ந்த அவலம் என்பது யாருக்குத் தெரியும் ???”
“மார்கழிக் குளிரில், ஆனந்த சயனத்தில் இருக்கும் வல்லரசின் ( திரைப்படத்தின் பெயர் அல்ல ) முதன்மைக்குடிமகனுக்கு குளிருக்கு இதமாய் வெளியே நின்று லாலி பாடியதும், அதற்கு கருணையுள்ளத்துடன் நள்ளிரவில் அன்னை சோனியா அவர்கள் துயில் கலைந்து, நடு வீதியில் நின்ற காசாப்புக்கடைக்காரகளின் துக்கம் களைய வந்தபோது, அவர் அன்னையாக மட்டுமல்ல, இந்தியர்களின் நெஞ்சில் ” துஷ்ட்ட நிக்ரஹ சிஷ்ட்ட பரிபாலனம் செய்த” இஷ்ட்ட தேவதையாகவன்றோ உயர்ந்து விட்டார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்த ஆனந்த சயனப்பெருமாள், மறுநாள் மாணவர்கள் உணர்ச்சிவசப்படுதல் கூடாது என்று அறிவுரையும், அறவுரையும் வாசித்தார்.”
“சாக்காட்டுச் சுடலையில் வெந்தது போக வேகாததற்கு காத்திருக்குமாம் கழுகு, அது போல காசாப்புக்கடைக்காரர்கள் அனைவரும் தூகேற்று தூக்கேற்று என்று பதாகை ஏந்தி போர்தொடுக்க, உறு மீனுக்கு காத்திருந்த கொக்கு போல், உள்த்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அறிவித்ததுதான் பல சுரனையற்ற ஜடங்களுக்குத் தெரியவில்லை.”
“அய்யா ஷிண்டே, தாங்கள் இத்தாலிக் குதிரைக்கும், பஞ்சாப் பூனைக்கும் தப்பாமல் தாளமிடும் சப்பானிக்கழுதைதான் என்று மக்கள் முனு முனுக்கின்றார்கள். ஆனால் நாங்கள் உங்களின் அதி உன்னதமான, அதி மேதாவியான, அறிதிலும் அறிதான அறிவினை எண்ணி எண்ணி வியக்கின்றோம். காசப்பினை தூக்கேற்றும் போதே தாங்கள் தமிழர்களுக்கு சூசகமாய் சொன்ன செய்தி எங்கள் தமிழ்ர்களுக்கு இன்னும் உரைக்கவில்லை. உங்கள் மேதாவிலாசத்தை வியந்து புகழ் பாடும் கவிதாவிலாசமாகவே நான் இருப்பேன். வாழ்க வளமுடன்.”