மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் 2014- ஒரு விமர்சனம்

ஆச்சாரி

Apr 26, 2014

தேர்தலில் திராவிடக் கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர்களுக்கு வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடிகளையும் மீறி சிறப்பாக இந்தப் பணியை செய்து முடித்துள்ளனர். ஆணையத்தின் கடும் நடவடிக்கைகளால் பணப் புழக்கம் பெரிதும் குறைந்திருந்தது. சென்ற மாதம் தங்கத்தின் விலை கூட குறைந்தது இந்தக் காரணத்தால் என்று கூறப்பட்டது. இருப்பினும் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவி பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருப்பது நமது திராவிடக் கட்சிகளின் எல்லையற்ற சாமர்த்தியத்தை எடுத்துரைக்கிறது. இத்தகைய திறமையை எந்தவித மக்கள் நலப்பணிகளிலும் அவர்கள் பயன்படுத்தியது இல்லை. தமிழகத்தில் இந்த இழிநிலை அதிகமாகத் தென்படுவது நமக்கு மிகப்பெரிய அவமானம். உழைக்கத் தயங்கும் சோம்பேறிகளான தமிழர்கள் இலவசப் பொருட்கள் பெறுவது மற்றும் வாக்குக்கு பணம் பெறுவது போன்ற செயல்களுக்கு துளி கூட வெட்கப்படுவது இல்லை.

அடுத்ததாக தலைநகரமான சென்னையில் குறைந்த வாக்குப்பதிவு நடந்திருப்பது கடும் விமர்சனத்திற்குரிய ஒன்றாகும். அரசியல் வாதிகளால் அதிக சலுகைகள் காட்டப்படும் சென்னை மாநகரம் தங்களது மக்களாட்சி கடமையை நிறைவேற்றுவதில், சுணங்குவது எரிச்சலடையச் செய்கிறது. மின்சாரம், சாலை வசதிகள், தொடர்வண்டி சேவைகள் கட்டமைப்புகள் என்று பல சேவைகளை சென்னை மாநகரம் பெற்றும், நகர வாசிகள் வாக்களிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும். மேற்கூறியது ஒரு காரணமாக இருந்தாலும் சென்னை மாநகரத்தில் வசிக்கும் பலர் இந்த கோடை காலத்தில் விடுமுறையில் சென்றுள்ளனர். மேலும் மத்திய, தென் சென்னையில் வசிக்கும் பல இளைஞர்கள் வெளிநாடுகளில் செய்வதும் வாக்களிப்பதை தடை செய்திருக்கலாம்.

தமிழகத்தில் நடந்த பல முனைப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கட்சிகளின் உண்மையான பலம் ஓரளவுக்கு தெரிய இது உதவும். மேலும் பல முனைப் போட்டியால் சில பொருளாதார நன்மைகள் நிகழ்ந்துள்ளன. தேர்தலுக்கான சுவரொட்டிகள், கையேடுகள், அட்டைகள், பதாகைகள், ஒலிபெருக்கிகள், தானி வாகனங்கள் போன்றவை பலமுனைப் போட்டியால் அதிகப்படியாக பயன்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது கட்சிகளுக்கு செலவினத்தையும் சேவைகளை வழங்கும் மேற்கண்ட பிரிவினருக்கு வருமானத்தையும் வழங்கியது.

கடந்த இரண்டு தேர்தல்களாக தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் இதனைக் காணமுடியும். ஆனால் வேட்பாளர்களில் பத்து சதவிகிதம் கூட பெண்கள் இல்லை. இது அரசியல் கட்சிகள் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் பெரும்தயக்கம் கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இது வரும் தேர்தல்களில் மாற்றம் அடைய வேண்டும்.

அடுத்ததாக இந்தத் தேர்தலில் ஒருவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனப்படும் NOTA பொத்தான் வாக்கு எந்திரங்களில் இடம் பெற்றிருந்தது மிகவும் வரவேற்கக்கூடிய செயலாகும். வாக்குகள் இந்தப் பொத்தானுக்கு அதிகப்படியாக விழுந்தால் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வது விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் தகுதியான சரியான நபர்களை வேட்பாளர்களாக நியமிப்பர்.

மேலும் இந்தத் தேர்தலில் பரப்புரைக் கூட்டம் நடக்கும்பொழுது அதிக அளவில் ஆட்கள் பணம் கொடுத்தே சேகரிக்கப்பட்டனர். ஒரே நபர் காலையில் ஒரு கட்சியின் கரைவேட்டியை அணிந்து கூட்டத்தில் நிற்பதும், மதியம் வேட்டியை மாற்றிவிட்டு வேறு கட்சி கூட்டத்திற்கு செல்வதும் வெகு இயல்பாக காணப்பட்டது. கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆள் சேர்ப்பது கண்டிக்கப்படவேண்டிய போக்காகும். அடிப்படை வேலைகளை செய்துவரும் பல பணியாளர்களுக்கு இதனால் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏற்கனவே சோம்பித் திரியும் தமிழர்களை மேலும் சோம்பேறிகளாக்கும் இந்தப் போக்கு ஒழிக்கப்படவேண்டியதாகும்.

 

Like http://phonetrackingapps.com/ any form of social media, we need to challenge our children to use the internet responsibly- a task that is much easier said than done

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “தேர்தல் 2014- ஒரு விமர்சனம்”
  1. அ.ரவி says:

    ஐயா,

    சென்னையில் மிக குறைந்த வாக்குப் பதிவு என்பது மிகவும் அவமானகரமான விஷயம்தான். ஆயினும் இதில் வேறு ஒரு கோணமும் உண்டு. சென்னைவாசிகளில் பலர் வேலை நிமித்தமாக பணி மாற்றம் பெற்று வந்திருப்பவர்கள். இவர்களுக்கு வாக்கு அவரவர் சொந்த ஊர்களில் மட்டுமே இருக்கும். மேலும் ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு வாடகை வீட்டை மாற்றிக் கொண்டு செல்பவர்களுக்கும் வாக்குரிமை இல்லாமல் போயிருந்திருக்கலாம். இல்லையா ?

    ரவி

அதிகம் படித்தது