மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தோல்வி என்பது தோல்வி அல்ல!(கவிதை)

ராஜ் குணநாயகம்

Jun 25, 2016

Siragu-failiure

 

வெற்றியின் எதிர்ச்சொல்

மாத்திரமே!
ஒவ்வொரு முறையும்

உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை

அதன்அர்த்தம்

தோல்வியல்ல—

நீ எவ்வாறு வெற்றி கொள்வது

என்பதற்கான படிப்பினைகள்

வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!
அதிகம்,அதிகம்

நீ வெற்றிகளை தவறவிடுகிறாய்

என்றால்………..

அதிகம்,அதிகம்

நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய்

என்று அர்த்தம்!
தோல்வி என்பது

உனக்குள் நீ தோற்காதவரை

உன்னோடு நீ தோற்காதவரை

வெற்றிகளே!
தோல்வி என்பது

தோல்வி அல்ல

வெற்றியின் இரகசியங்களே

உன் முயற்சிக்கான வெற்றிகளே

உனக்குள் நீ தோற்காதவரை

உன்னோடு நீ தோற்காதவரை…………….

 

-ஈழன்-


ராஜ் குணநாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தோல்வி என்பது தோல்வி அல்ல!(கவிதை)”

அதிகம் படித்தது