நகைச்சுவை
ஆச்சாரிFeb 1, 2013
கணவன் மரணப் படுக்கையின் உச்ச நிலையில் இருக்கும் போது தன் மனைவியை அருகே அழைத்து
கணவன் : நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்மா
மனைவி: சொல்லுங்க
கணவன்: நான் இறந்ததுக்கப்புறம் எதிர்த்த வீட்டு மாரிமுத்துவ கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கோ.
மனைவி: அய்யோ, அவன் உங்களுக்கு பரம்பர எதிரியாச்சே! !
கணவன்: அவனப் பழிவாங்குறதுக்கு இதவிட்டா வேறுவழி தெரியலடி
மனைவி: ஆ….???
*********************************************************************************************
ஆசிரியர்: என்னடா அஞ்சு மார்க் வாங்கிட்டு சிரிக்கிற, வெட்கமா இல்ல.
மாணவன்: ஒண்ணுமே எழுதாததுக்கு அஞ்சு மார்க் போட்ருக்கீங்களே.. உங்களுக்கு வெக்கமா இல்ல. . .
*********************************************************************************************
எல்.கே.ஜி பையன் : அலோ.. எம் மகன் இன்னிக்கு ஸ்கூலுக்கு வரமாட்டான் அவனுக்கு காச்சல்.
ஆசிரியர்: நீங்க யார் பேசறது?
எல்.கே.ஜி பையன் : நா..ன்.. நான் எங்கப்பா பேசுறேன்.
*********************************************************************************************
அவள்: ஏங்கா ஒம் புருசன் என்னா வேல பாக்குறாரு
இவள்: தீயணைப்புத்துறைல வேல பாக்குறார்டி
அவள்: அப்போ சம்பளம், கிம்பளம் நல்லா கெடைக்கும்ல
இவள்: க்கும் அந்தக் கொடுமைய ஏண்டி கேக்கறே…
சோறாக்க அடுப்பப் பத்தவச்சா தீ..ன்னு சொல்லி
தண்ணிய ஊத்தி அணைச்சுபுடுறார்டி
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைச்சுவை”