மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நகைச்சுவை

ஆச்சாரி

Feb 15, 2013

ஆசிரியர்             :     மாணவர்களே! இன்னிக்கு நான் உங்களுக்கு

கடன் வாங்கிக் கழித்தல் கணக்குச்

சொல்லித்தரப் போறேன்.  சுரேசு இங்க வா,

இப்போ நான் உங்கிட்ட ஒரு கணக்கப்

போடுவேன். அதுக்கு நீதான் சரியான

விடையைச் சொல்லணும் ஒ.கே வா.

சுரேஷ்              :     சரிங்க சார்

ஆசிரியர்             :     நான் உங்கப்பாவுக்க 5 ஆயிரம் ரூவா கடன் தாரேன்

சுரேஷ்               :     தாங்க சார் (கை நீட்ட)

ஆசிரியர்              :     டேய் கணக்குக்குடா

சுரேஷ்               :     சரிங்க சார் (கை மடக்கி)

ஆசிரியர்              :     நான் உங்கப்பாவுக்கு 5 ஆயிரம் ரூவா கடன்

தாரேன். அவரு ஒரு மாசத்துக்கு  ஆயிரம்

ரூபாய் எனக்குத் திருப்பிக் கொடுத்தார்னா 5

ஆயிரம் ரூபாய எத்தன மாசத்துல திருப்பிக்

கொடுப்பார்?

சுரேஷ்               :     தெரியல சார்.

ஆசிரியர்             :     கணக்குப்  புரியலையா? சரி நான் மறுபடியும்

சொல்றேன் கேளு.  நான் உங்கப்பாவுக்கு 5

ஆயிரம் ரூவா கடன் தாரேன். அவரு ஒரு

மாசத்துக்கு ஆயிரம் ரூபாய்  எனக்குத்

திருப்பிக் கொடுத்தார்னா 5 ஆயிரம் ரூபாய

எத்தன மாசத்துல திருப்பிக் கொடுப்பார்?

சுரேஷ்               :     தெரியல சார்?

ஆசிரியர்             :     உனக்கு கணக்கு சரியாப்  புரியலன்னு நெனைக்கிறேன். நான் மறுபடியும் சொல்லட்டுமா?

சுரேஷ்               :     போங்க சார்… எங்கப்பாவப்பத்தி உங்களுக்குத்தான் சரியா புரியல…

ஆசிரியர்             :     என்னடா சொல்ற!!!

சுரேஷ்               :     அவரு வாங்குன கடன இதுவர யாருக்கும் திருப்பிக் கொடுத்ததே இல்ல சார்

ஆசிரியர்             :     ஆ…….

————————————————————————————————————————————

கடவுள்              :     உனக்குப் பிடித்த வரம் ஒன்று கேள்

அவன்               :     எங்க வீட்டுல இருந்து சொர்க்கத்துக்கு ரோடு போட்டுக் கொடுங்க.

கடவுள்              :     அது முடியாது வேற கேளு

அவன்               :     ஒரு பொண்ண உண்மையா என்ன காதலிக்க வை

கடவுள்              :     சொர்க்கத்துக்கு சிமெண்ட் ரோடு வேணுமா? தார் ரோடு வேணுமா?

—————————————————————————————————————————————

ஆசிரியர்              :     உயிரெழுத்து, மெய் எழுத்து,  ஆய்த எழுத்து

மாணவர்              :     ஹூம். . .  இதெல்லாம் கேக்கணுங்கிறது எங்க தலையெழுத்து.

———————————————————————————————————————————

பிச்சைக்காரன்        :     சார், தயவு செஞ்சு ஒரு ஆறு ரூவா கொடுங்க காபி குடிக்கணும்

அவன்               :     ஏய் காபியே மூணுரூபா தானே?

பிச்சைக்காரன்        :     இன்னொண்ணு என்னோட காதலிக்கு சார்.

அவன்               :     க்கும் நீயே ஒரு பிச்சக்காரன் ஒனக்கு  ஒரு காதலியா?

பிச்சைக்காரன்        :     இல்ல சார் என்னப் பிச்சக்காரனாக்குனதே  என் காதலிதான்

————————————————————————————————————————————

தியேட்டரில் . .  கணவன் மனைவி

மனைவி             :என்னங்க பின்னாடி இருந்து ஒருத்தன் கால சுரண்டுறான்.

கணவன்             :     அப்படியே திரும்பி ஒம்மூஞ்சியக் காட்டு, சாவட்டும் தறுதல…

————————————————————————————————————————————–

அவன்               :     எதுக்கு சார் படிச்சிக்கிட்டு இருக்கிற பையன போட்டு இப்படி அடிக்கிறீங்க?

இவன்               :     சும்மா இருங்க சார், தேர்வுக்குக் கூடப் போகாமப்  படிச்சிட்டு இருக்கான் சார்.

Metacognition also includes self-regulationthe ability to orchestrate ones learning to plan, monitor success, and correct errors when essay writing service using http://collegewritingservice.org/ appropriateall necessary for effective intentional learning bereiter and scardamalia,

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “நகைச்சுவை”
  1. natraj says:

    இனிய தமிழ் மொழி எங்கல் மொழி யாருஇக்கும் சலைகதா மொழி

அதிகம் படித்தது