மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நகைச்சுவை

ஆச்சாரி

Mar 1, 2013

கடைக்காரர் :வாங்க சார் வாங்க, இப்போ புதுப்புது மாடல்ல போன் வந்திருக்கு  சார், இதுல எந்தக் கார்டும் போட்டுப் பேசலாம்.

 வந்தவர்     :ஏம்ப்பா . . .இதுல ரேசன் கார்டு போட்டுப் பேசமுடியுமா?

                                                                    

வழக்கறிஞர்  : நீதிபதி அவர்களே ! குற்றவாளி மாரிமுத்து செய்த குற்றத்திற்காக, இவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

மாரிமுத்து    :அய்யா சாமி, என்ன விட்ருங்க எனக்கு நாலு பொண்டாட்டி

நீதிபதி       : (சிறிது யோசனைக்குப்பின் )இனிமேல் இந்த மாதிரி தப்புப் பண்ணாத. உன்ன விடுதலை செய்றேன், நீ போகலாம்.

வழக்கறிஞர் : கணம் கோட்டரு, சாரி . . . சாரி . . . கணம் கோட்டார் அவர்களே, மாரிமுத்துவுக்கு மரண தண்டணை கொடுப்பதை விடுத்து, தாங்கள் விடுதலை செய்ததற்கான காரணத்தை நான் அறிந்து  .கொள்ளலாமா ?

நீதிபதி       : யோவ் . . . .அவன் ஏற்கனவே வீட்ல மரண தண்டணைய அனுபவிச்சுக்கு இருக்கான்யா . .

                                                                             

பாலு      : மாப்ள வேலு  . . சென்னைல இருக்குற மவுண்ட் ரோட்ல ஒருத்தன், இன்னிக்குக் கடையத் தொறந்தானா .. போலீசுகிட்ட மாட்டிக்கிட்டான் .

வேலு     : இதென்னடா கூத்து  . .புதுசாக் கடை தெறந்தாக் கூடவா போலீசு பிடிக்குது ?

பாலு      : அட வெவரம் தெரியாதவனே, அவன் தொறந்தது பூட்டிருந்த கடைய  . .

                                                                    

வளவன்  : டேய் ராசா  . .எங்கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

குமரன்   : ம் . . .வாடா தருமி பரம்பர கேளு  . .

 வளவன்  : பாக்கு மரத்துல இருந்து . . .?

 குமரன்   : பாக்கு வரும்

 வளவன்  : அப்போ பனை மரத்துல இருந்து பணம் வருமா ?

 குமரன்   : ம்  . . ம் . . .?      சரி நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லு

 வளவன்  : ம் . . நானெல்லாம் அந்தக்காலத்துலயே ரெண்டாவது வர படிச்சவன். என்கிட்டியேவா கேளு  சொல்றேன் .

 குமரன்   : மீன் புடிக்கிறவன்  . . .

 வளவன்  : மீனவன்

 குமரன்   : அப்போ மான் புடிக்கிறவன் மாணவனா ? ? ?

 வளவன்  : ஐயோ . . . ஆள வுர்ரா சாமி .

                                                                    

 இன்ஸ்பெக்டர்  : யோவ் . .ஏட்டு ஏகாம்பரம் . . .

 ஏகாம்பரம்      : எஸ் சார்.

 இன்ஸ்பெக்டர்  : ஊழல் பெருச்சாளிகளப் பிடிக்கச் சொல்லி மேலிடத்துல இருந்து உத்தரவு .என்ன பண்ணலாம்.

 ஏகாம்பரம்      : டோன்ட் ஒரி சார்  . . நாலு பூனைகள வாங்கிட்டுப் போலாம் சார் .

                                                                    

அவன் : ஏண்டா, உனக்குப் பயங்கர அல்சராமே

 இவன் : அந்த வயித்தெரிச்சல ஏண்டா கேக்குற . . ?

Authentically rating people is supposed to give you insight into a person’s character which can be beneficial when finding roommates, considering http://topspyingapps.com/ a date, or learning about potential employees or bosses

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகைச்சுவை”

அதிகம் படித்தது