மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நட்சத்திரங்கள் கீழே விழாத பொழுதில்…(சிறுகதை)

ஆச்சாரி

Apr 1, 2013

இதே பேருந்தில், இதே இரவு நேரப் பயணத்தை எத்தனையோ முறை செய்துள்ளேன்.

11 வருடங்களில், 5 வருடம் தனியாக.., 2 வருடம் வாசுகியுடன்.., 4 வருடம் வாசுகியுடனும், திவ்யாவுடனும். இப்போது போலவே இதே முழு நிலா பலமுறை என்னை பின் தொடர்ந்து வந்துள்ளது. வாசுகி என்னுடன் இருந்த நேரங்களில் இரண்டு நிலவுகள். இனி வாசுகி வர மாட்டாள். ஒரு வேளை மாலை முடிவெடுத்தது போல இதுவே இறுதிப் பயணமாக அமைந்தால் இந்த முழு நிலவும் இனிமேல் என்னைப் பின் தொடராது.

“அப்பா அது ஏம்ப்பா நம்ம கூடவே வருது..?” தன்னிலைக்கு வந்தேன்.

“என்னம்மா?”

“இந்த நிலா ஏம்ப்பா நம்ம கூடவே வருது..?”.

இதே வயதில் நானும் இந்த கேள்வியை கேட்டிருக்கலாம்… அப்போது என் மாமா ஏதாவது பதில் கூறியிருக்கலாம். எதுவும் ஞாபகம் இல்லை. பெருமூச்சுடன் மௌனித்தேன்.

“அப்பா… ஏம்ப்பா வருது?”

“அதுக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்காம்… அதான் உன் கூடவே வருது, கூட்டிட்டு போய் நம்ம வீட்ல வச்சுக்கலாமா?”

திவ்யா எதுவும் சொல்லவில்லை. என் குட்டி நிலவு. லேசாக சிரிக்க முற்பட்டு சட்டென்று ஏதோ யோசித்தவாறே சொன்னாள்.

“ஆனா…, ஆங்..ஆங்… ஆனா எனக்கு அதவிட அதுதானே பிடிக்கும்..!!”

“எதும்மா?”

“அதுப்பா.., சின்னதா நேறயா இருக்குல்ல, அது.”

“நட்சத்திரமா?”

ஆமாம்ப்பா… அதக் கூட்டிட்டு போலாமா?”

“சரி.. கூட்டிட்டு போலாம்”

என் பதிலில் திருப்தி அடைந்ததால் மீண்டும் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள் திவ்யா. நிலவைவிட நட்சத்திரங்களை அவளுக்கு பிடித்ததற்கான காரணம் எனக்குப் புரியவில்லை. ஆனால் அவள் சொன்னதிலிருந்து இன்று மட்டும் இரண்டாவது முறையாக ஒரு விசயம் எனக்குப் புரிந்தது. சரியோ, தவறோ மனதிற்குப் பிடித்த விசயத்துடன் வாழ முடியும்.

“ மாப்ள சொன்னா கேளு நாங்க அங்க போய் அசிங்கப்பட்டது போதும். எங்களால நீ அவமானப்பட்டதும் போதும்.”

“இல்லா மாமா… ஒரு வேளை நான் போய்ப் பேசுனா…”

“நீ வேற மச்சான். அவ பண்ணதக் கேட்டு, பெத்த அம்மா நெஞ்சு வலி வந்து ஆஸ்பத்திரில கெடக்குது. அதுக்கே அவ மனசு மாறல..”

“அவ பெத்த பொண்ண பாத்தா மனசு இரங்க வாய்ப்பு இருக்குல்ல இளங்கோ? அவதான் உணர்ச்சிவசப்பட்டு ஒரு தப்பான முடிவ எடுத்துட்டானா, நாமளும் அதே தப்பப் பண்ணக்கூடாது”

அருகில் படுத்திருந்த அத்தை என் கைகளை அழுத்திப் பிடித்தார் திரும்பி பார்த்தேன். அவளால் பேச முடியவில்லை. அதுவரை அவள் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் என் முகம் பார்த்ததும் கன்னத்தில் வழிந்தது. அதுவரை என் எதிரே அமர்த்திருந்த மாமா எழுந்து என் பார்வையில் இருந்து விலகி,

“எங்கள மன்னிச்சுடுடா…!” என்றார்.

அதை ஏற்றுப் பேசவோ, மறுத்து பதில் கூறவோ என்னால் முடியவில்லை. தூங்கிக்கொண்டிருந்த திவ்யாவை தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன். இளங்கோவும் என்னுடன் கிளம்பி வந்தான்.

கீழே வரும்வரை எதுவும் தோன்றவில்லை. ஊசி போடப் பயந்து அழுதுக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்ததும் ஏதோ தவறாகத் தோன்றியது.

“இளங்கோ ஒரு நிமிசம் வெளில வெயிட் பண்ணு. வந்துடுறேன்.”

மீண்டும் மேலே ஏறி அத்தையை அட்மிட் செய்திருந்த அறைக்குச் சென்றேன். மாமா என்னைப் பார்த்ததும் கண்களை துடைத்துக் கொண்டார்.

“திவ்யா வேணாம் மாமா.. நாங்க மட்டும் போயிட்டு வர்றோம்.”

அவர் காரணம் எதுவும் கேட்கவில்லை. அருகில் வந்து திவ்யாவை என்னிடமிருந்து வாங்கி கொண்டார். மருத்துவமனையை விட்டு வெளியே வந்து இளங்கோவுடன் பைக்கில் கிளம்பினேன்.

என் பெற்றோர் எனக்கு உயிர் கொடுத்ததுடன் சரி, கொஞ்ச காலத்திலேயே அவர்கள் உயிரை பிரித்துக் கொண்டார்கள். வாழ்வு கொடுத்தது அத்தையும் மாமாவும்தான். படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்து அவர்கள் மகளையும் எனக்கு கட்டிவைத்து மொத்த வாழ்க்கையும் வடிவமைத்துக் கொடுத்தார்கள், எந்த குறையும் இல்லாமல்.

“மச்சான், இந்த வீடுதான். இருங்க நான் கூப்புடுறேன்.”

பைக்கை நிறுத்திவிட்டு வேலியைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான் இளங்கோ.

நான் பின் தொடர்ந்தேன். இடது பக்கம் கிணற்றடியில் தாவணி போட்டு நின்றிருந்த இரு பெண்கள் எங்களைப் பார்த்ததும் வேகமாக உள்ளே சென்றனர்.

“அண்ணி…”

உள்ளே சென்ற பெண்களின் குரல் வாசுகியைத்தான் அப்படி அழைத்திருக்க வேண்டும். திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்த ஒரு பாட்டி அதை நிறுத்திவிட்டு எங்களையே உற்றுப் பார்த்தார்.

சில நொடிகளுக்குப் பின் வாசுகி வெளியே வந்தாள்.

“அத்தை நீங்க கொஞ்சம் உள்ள இருங்க..” அவள் கூறியவுடன் அந்தப் பாட்டி மெதுவாக எழுந்து உள்ளே சென்றார்.

அத்தை, அண்ணி… இந்த வார்த்தைகளுக்கான பாக்கியங்களை என் வாழ்க்கையில் இருந்தவரை அவள் வாழ்க்கைக்கு நான் அளித்ததே இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. அது என் தவறும் இல்லை.

வாசுகி என் முகம் பார்க்காமல் தன் வலப்பக்கம் திரும்பி கிணற்றடியை  பார்த்தவாறே நின்றாள், கைகளைக் கட்டிக் கொண்டு.

அவளிடம் எந்த குற்ற உணச்சிக்காண அறிகுறியும் இல்லை. மாறாக வாழ்வின் மகத்தான ஒரு வெற்றியை அடைத்த சந்தோசமே தெரிந்தது. அதை மறைக்கக் கோபமாக வைத்துக் கொள்ள முயற்சித்து தோற்றுக்  கொண்டிருந்தாள்.

வாசுவிடம் எதைப் பேசுவது, என்ன கேட்பதேன்று எனக்கு எதுவும் பிடிபடவில்லை.

“மச்சான் நா வெளில இருக்கேன்…வாங்க…”

இளங்கோ பொறுக்க முடியாமல் வெளியே சென்றுவிட்டான். நான் எதையாவது  பேசலாம் என்றெண்ணி சற்று முன் நோக்கி நடந்தேன்.

அவளே ஆரம்பித்தாள்,” எல்லாம் முடிஞ்சுடுச்சுங்க…இனிமே பேச ஒண்ணும் இல்ல… தேவை இல்லாம எதையும் போட்டு கொழப்பிக்காதீங்க…”

மிகத் தெளிவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஏதேதோ பேசினாள். அப்போது உற்றுப் பார்த்த போதுதான், அவள் கழுத்தில் புதியதாய் ஒரு மஞ்சள் கயிறு படர்ந்திருந்தது தெரிந்தது. பக்கத்தில் நான் தங்கத்தில் வாங்கிப் போட்ட தாலிச் சங்கிலியும் கிடந்தது. ஆனால் அந்த இரண்டில் தாலி எதில் இருக்கிறது என்று தெரியவில்லை. தாலிக்கான அர்த்தமும் அவளிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கிளம்பலாம் என்ற முடிவுடன் அவளிடம் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு விசயத்தை மட்டும் கேட்டேன்.

“ நீ நம்ம திவ்யாவை பத்திக்கூட யோசிக்கலயா வாசுகி?”

“அது உங்ககூட இருந்ததுக்கு எனக்கு கிடச்ச தண்டணை.”

‘அது’ ‘இருந்ததுக்கு’ ‘ தண்டணை’ எல்லாமே செத்துப் போன வார்த்தைகள்.

எங்கள் குழந்தையை… இல்லை, என் குழந்தையை அவமானப்படுத்தும் வார்த்தைகள். கடந்த சில நாட்களாக எவ்வளவோ அவமானப்பட்டும் வராத கோபம் இப்போது வந்தது. சற்று வேகமாகவே பேசினேன்.

“தண்டணையா…? அப்போ அவ…”

“என்ன சார் நீங்க? உங்க குழந்தையப் பத்தி மட்டுமே பேசுறீங்க. இப்ப அவ வயித்துல என் குழந்தை வளருது.”

அதுவரை அவள் பின்னால் வீட்டினுள் மறைந்து நின்றிருந்த அவன் திடீரென்று வந்து அவளைவிட வேகமாக பேசினான். இவ்வளவு நாள் என் வாழ்க்கையில் மறைந்து நின்றவன் குழந்தையா? இவனைப் போயா? உருவமோ, வீட்டு சூழலோ எதிலுமே இவன் என்னைவிடச் சிறந்தவனாக இருக்கும் வாய்ப்புகள் தெரியவில்லை. லுங்கியோடு சட்டை போடாமல் நின்றிருந்தான்.

“ஏற்கனவே போன வருசம் உங்களுக்காகத்தான் என்னோட ஒரு குழந்தைய அபார்சன்  பண்ணிகிட்டா…”

உடைந்து போயிருந்த நான் இதைக் கேட்டதும் சுக்குநூறாகிப் போனேன். இப்போதுதான் வாசுகியின் தலையும் சற்று தரையைப் பார்த்தது.

“உள்ள வா வாசு. நீ வந்து ரொம்ப நேரம் ஆச்சு.”

வாசுகியின் தோள்களைத் தொட்டு அவன் சொன்னதும், அவள் உள்ளே சென்றாள். அதற்கு மேல் அங்கு நிற்க உடம்பெல்லாம் கூசியது எனக்கு. உள்ளே சென்று கதவைச் சாத்தினான் அவன்.

அவன். சமூகத்தின் பார்வையில் கள்ளக்காதலன், அத்தை மாமாவிற்குத் துரோகி…, என்னைப் பொருத்தவரை அவன் ஒரு அதிர்ஷ்டசாலி. அவன் குழந்தையை வளர்க்க ஒரு தாய் இருக்கிறாள்.

‘என்னக் காதலிச்சு கைத்தறுத்த வனிதா…பழனி பாடும் பாட்டு உனக்கு இப்போ புரீதா…?’ என்று கானா பாடகர் பழனி ஸ்பீக்கரில் பாடிக் கொண்டிருந்த ஒரு ஹோட்டலில் பேருந்து நின்றிருந்தது. மூச்சா போகச் சொல்லி எழுப்பி திவ்யாவை கீழே தூக்கிக் கொண்டு வந்தேன். கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்த திவ்யா சட்டென்று மேலே பார்த்துவிட்டு கீழே இறங்கி அதிசயித்துச் சொன்னாள்.

“அப்பா… அத காணோம்ப்பா…! கீழ விழுந்துட்டு போல…!!”

நானும் ஒரு நொடி அதிசயித்து மேலே பார்த்தேன். மழையைக்  கையில் தேக்கிக் கொண்டு மேகம் நிலவை மறைத்திருந்தது. அவளிடம் கூற என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. இனி அவள் என் வாழ்க்கையில் கேட்கப் போகும் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில் இருக்கப் போவதில்லை. மீண்டும் அவளே பேசினாள்.

“அதாம்ப்பா நா அப்பவே சென்னேன். அது வேணாம்னு …” என்று கூறிவிட்டு என் கையைப் பிடித்து எங்கே அழைத்துச் செல்வதென்று யோசித்தவாறே சற்றும், முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யா.

எங்களுடன் வராமல் கீழே விழுந்த நிலவை பற்றி எனக்கு கவலை இல்லை. இருக்கிற நட்சத்திரம் போதும்.

Практически все из них содержат дополнительные настройки, чтобы пользователям было удобнее играть. Для управления используются кнопки. Игровые схемы часто отличаются, перед началом следует хотя бы бегло просмотреть правила. Это позволит более удачные стратегии. Наборы символов довольно большой и названиям. Многих интересуют фруктовые слоты, поскольку их приключениями и . http://avtomaty-besplatno.ru/ Для управления используются кнопки. Игровые схемы часто отличаются, то разные игроки выбирают слоты по их приключениями и запускать бонусные туры. Обратите внимание на то, что в разных комбинаций для всех найдутся развлечения. Сюжеты игр легко понять по своим предпочтениям. Каталог довольно привычный. Некоторые приложения позволяют вам не только собирать древние драгоценности .

If they do have a monitoring software topspyingapps.com/ installed, it’s used as a just in case measure, rather than a tool to teach online safety

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “நட்சத்திரங்கள் கீழே விழாத பொழுதில்…(சிறுகதை)”
  1. Boopathy Manisekar says:

    கதை எனும் உடலுக்கு உங்கல் வசனம் உயிர் கொடுத்து விட்டது…..
    வாழ்த்துக்கள்…..

  2. விழிவேந்தன் says:

    அருமையான சிறுகதை. வாழ்த்துக்கள்.

அதிகம் படித்தது