மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நமது வங்கிக்கணக்கை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்

ஆச்சாரி

Dec 1, 2012

நாம் அனைவரும் உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வங்கிகளில் சேமிக்கிறோம், மின்னணு-கடன் அட்டை(Credit Card), அல்லது மின்னணு-வங்கி அட்டை(Debit Card) மூலமாக பணத்தை தானியங்கி வங்கி(ATM) களிலும், கடைகளிலும், இணைய சந்தையிலும்(online shopping), பயணச்சீட்டு முன்பதிவு மற்றும் பல்வேறு இடங்களில் பயன்படுத்துகிறோம்.தற்பொழுது மின்னணு-கடன் அட்டை மற்றும் மின்னணு-வங்கி அட்டையின் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகிறது. அதே போல குற்றங்களும் பெருகிக்கொண்டே தான் இருக்கின்றன. மின்னணு களவு என்பது அதிகரித்து வருகிறது.

இத்தகைய திருடர்களின் நோக்கம் பிறர் கணக்கிலிருக்கும் பணத்தை அவர்களது அட்டையின் மூலம் திருடுவது, வங்கிக் கணக்கிலிருந்து இணையத்தில் (online தேப்ட்)  கொள்ளை அடிப்பது.

எவ்வாறு  களவுகள்  நடக்கின்றன ?

பொதுவாக தனிப்பட்ட நபரின் வங்கி சம்பந்தப்பட்ட தகவல்கள் கசிவதால் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது. எத்தனையோ வழிகளில் உங்கள் தகவல்களை திருட களவாட காத்திருக்கிறார்கள்.

அட்டையில் ஒரு பக்கம் உங்கள் (கணக்கு வைத்திருப்பவர்) பெயர், வங்கியின் பெயர், முக்கியமான 16 இலக்க கார்டு எண் போன்றவை பொறிக்கப் பெற்றிருக்கும். மற்றொரு பக்கம் கருப்பு நிற மின் காந்த பட்டையில் மின்னணு கருவியால் படிக்கக்கூடிய தகவல்கள் அடங்கியிருக்கும். மேலும், CVV எனப்படும் Card Verification Value, அட்டையின் பயன்பாடு முடிவடையும் தேதி இவையெல்லாம் பொறிக்கப் பெற்றிருக்கும். இத்தகைய தகவல்கள் கசிவதால் தான் குற்றங்கள் நடக்கின்றன.

இதில் எத்தனை வகைதான் இருக்கிறது?

இந்த மாதிரி குற்றங்கள் இரண்டு வகை, முதல் வகை இணையத் தொடர்பின்மை(offline) திருட்டு. அடுத்தது இணையத் தொடர்பு(online) திருட்டு.

உங்கள் அட்டை (atm/debit/credit) திருடப்பட்டு, உங்களைப் பற்றிய, உங்கள் அக்கவுண்ட் பற்றிய விவரங்களுடன் நடைபெறுவது offline(தொடர்பில்லமை) திருட்டு. உங்கள் பணப்பையை  திருடியோ, உங்கள் மின்னஞ்சலில் நுழைந்தோ, உங்கள் வீடு மற்றும் அலுவலக குப்பையிலிருந்தோ அல்லது வேறு எந்த வழியிலோ திருடர்கள் உங்கள் விவரங்களை பெறுவார்கள். இப்படி நடப்பது  தொடர்பின்மை(offline) குற்றம்.

அதாவது உங்கள் அட்டையும், அது சம்பந்தப்பட்ட தகவல்களும் இல்லாமல் திருட்டு நடக்காது.

இது பரவாயில்லை, அடுத்து பயங்கர கொள்ளையை தொடர்பு(online) குற்றத்தில் பாருங்கள்.

உட்கார்ந்த இடத்திலிருந்தே இணையம் வாயிலாக உங்கள் பணத்தை எந்த நேரத்திலும் கொள்ளை அடிக்கலாம்.

இணையத் தொடர்பு(online)  திருட்டு மூன்று முறைகளில் நடக்கிறது

1. Phishing: திருடர்களால் உங்கள் வங்கி மற்றும் அட்டை தகவல்களுக்காக தூண்டில் போடப்படுவது. முதலில் திருடன் உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பெறுவான். பிறகு உங்களுக்கு உங்கள் வங்கியிலிருந்து வருவதைப் போல ஒரு மின்னஞ்சல் வரும், நம்பத்தகுந்தவை போலவே இருக்கும் (இந்த மின்னஞ்சல் வேறு (எந்த) மாதிரியாகவும் இருக்கலாம்). அந்த மின்னஞ்சலில் இணைப்பு(link) ஒன்று தரப்பட்டிருக்கும். இதுதான் தூண்டில். அதை நீங்கள் சொடுக்கினால், உங்களை ஒரு log-in(உள்ளே நுழைதல்) பக்கத்திற்கு கொண்டு செல்லும். உங்கள் வங்கியின் தளத்தைப் போலவே வடிவமைக்கப் பட்டிருக்கும். அதில் உங்கள் log-in(உள்ளே நுழைதல்) பெயர் மற்றும் கடவுச்சொல்(password) கொடுத்து விட்டால் போதும் உங்கள் வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் காலி.

2. Skimming: திருடர்கள் உங்கள் அட்டையைப் போலவே ஒரு அட்டையை தயாரிப்பார்கள். ஒரு குறுவட்டு (cd) யிலிருந்து மற்றொரு குறுவட்டில்(cd)  தகவல்களை பதிவது போல். இதற்காகவே skimmer என்ற கருவி உள்ளது. உங்கள் அட்டையை அதில் தேய்த்தால்(swipe) போதும். மற்றொரு வெற்று(blank) அட்டையில் பிரதி எடுத்து உங்கள் கணக்கில் பணத்தை காலி செய்வார்கள். உங்கள் அட்டை கடன் அட்டையாக இருந்துவிட்டால் அதன் கடன் எல்லை(credit limit) வரை காலி செய்து விடுவார்கள். பிறகு திருடனின் கடனை நீங்கள் தான் அடைக்க வேண்டும்.

பொருட்கள் வாங்கிவிட்டு நீங்கள் அட்டை மூலமாக பணம் செலுத்தும்போது உங்கள் பார்வையிலிருந்து மறைத்து skimmerல் தேய்ப்பார்கள். Skimming சாப்பாட்டு விடுதிகளிலும்,பெட்ரோல் பங்க்களிலும் நடைபெறலாம்.

3. Application குற்றம்: திருடன் ஒரு வங்கிக் கணக்கை உங்கள் பெயரில் ஆரம்பிப்பான். அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் (ரசீதுகள், வங்கி கணக்குகள் மற்றும் பல ) திருடி கிரெடிட் அட்டை பெற்று செலவு செய்தால் நீங்கள்தான் வங்கிக்கு திருப்பிச் செலுத்தவேண்டும்.

இதில் இருந்து எப்படி தப்புவது? கவனமாக இருக்கவேண்டும்.

நீங்கள் மின்னணு-கடன் அட்டை அல்லது மின்னணு-வங்கி அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும் ஆவணங்களை நகல்களாக கொடுக்கவும். மேலும் அந்த நகல்களில் உங்கள் கையொப்பம், தேதி, எதற்காக அளித்தது என்றும் எழுதி விண்ணப்பிக்கலாம்.

உங்கள் வங்கி மற்றும் மின்னணு-கடன் அட்டை கணக்குகளை வாரத்திற்கு ஒரு முறையேனும் பணப்பரிமாற்ற ரசீதுகளுடன் சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணைய வங்கி தொடர்பு வசதி இருந்தால் பணப்பரிமாற்றங்களை பார்த்துக்கொள்வது எளிது.

சந்தேகிக்கும் படி ஏதேனும் உங்கள் கணக்கில் நடந்திருந்தால் உடனடியாக வங்கியை தொடர்பு கொள்ளுங்கள். தவறான பரிமாற்றம் இருந்தால் புகார் அளிக்க தாமதம் வேண்டாம். இது பாதிப்புகளை குறைக்கவும், தவறை கண்டுபிடிக்கவும் உதவும்.

அனைத்து பழைய வங்கி ரசீதுகள், உங்கள் பெயர் மற்றும் முகவரி உள்ள ரசீதுகளை அப்புறப்படுத்துமுன் கிழித்துவிடுங்கள். இது Application குற்றம் நடக்காமல் தவிர்க்கும்.

எளிதாக ஊகிக்க முடியாத கடவுச்சொல்லை பயன்படுத்தவும். பெயர், பிறந்த தேதி, வண்டி எண் இதுபோன்றவற்றை கடவுச்சொல்லில் பயன்படுத்த வேண்டாம்.

ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். மாற்றிக் கொள்ளுங்கள்.

அட்டையின் பின்புறமுள்ள CVV எண்ணை மனதில் பதிய வைத்துக்கொண்டு அழித்து விடவும்.

உங்கள் பரிமாற்றம் குறித்த குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் alert களுக்கு வங்கியில் பதிந்து கொள்ளுங்கள்.

கடைகளில் அட்டை மூலமாக பணம் செலுத்தும்போது, அட்டையை உங்கள் பார்வையிலிருந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளவும்.

இணையதளத்தில் பணப்பரிமாற்றம் செய்யும் போது அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மைக்கு VISA அல்லது Master card secure code உள்ளதா என்று கவனிக்கவும்.

  • வெப்சைட்டின் முகவரி https. என்று உள்ளதா என்று கவனிக்கவும்.
  • ATM(தானியங்கி வங்கி)ல் பணம் எடுக்கும்போது வேறு யாரையும் உள்ளே விட வேண்டாம்.
  • உங்கள் அட்டையை வேறு யாரிடமும் கொடுக்க வேண்டாம்.
  • PIN எண்ணை எழுதி வைக்க வேண்டாம். எழுதினாலும், அட்டையுடன் வைக்க வேண்டாம்.
  • அட்டை தொலைந்து போனால், உடனடியாக வங்கியில் தெரிவித்து அட்டையை முடக்கி விடவும்.

திருடர்கள் இன்னும் பல்வேறு புது வழிகளில் (VISHING, SPOOFING, MONEY MULE மற்றும் பல…) திருட முயற்சி செய்வார்கள். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நவீன பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

ATM(தானியங்கி வங்கி) ல் எதாவது புதிதாக அல்லது வினோதமாக தென்பட்டால் அந்த ATM machine ஐ பயன் படுத்த வேண்டாம்.

பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருக்கும். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்உங்கள் அட்டையை பிரதி செய்வதற்காக Skimmer ஐ ATM ல் பொருத்துகிறார்கள் மற்றும் உங்கள் pin அல்லது கடவுச்சொல்லை தெரிந்துகொள்வதற்காக wireless நிழற்படக் கருவிகளை பயன்படுத்துகின்றனர்.

எனவே விழிப்புடன் இருந்து களவுகளை தடுங்கள்.

The idea of helping students organize their knowledge also suggests that novices might benefit from models of how experts approach problem solving https://www.eduessayhelper.org especially if they then receive coaching in using similar strategies e

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நமது வங்கிக்கணக்கை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்”

அதிகம் படித்தது