மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாட்டாமையுடன் கவலையில்லா காளையர் கழகம்

ஆச்சாரி

Nov 1, 2012

நாட்டாமை சரத் குமாருடன்   கவலையில்லாக் காளையர் கழகம். (கவலையில்லாக் காளையர் கழகம் குறித்து அறிய முந்தய கட்டுரைகளை படிக்கவும்).
மணி , வேலு, பார்த்தசாரதி மூன்று பேரும் அந்த சாலையில் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். சும்மாவா?. கூடங்குளம் அணு உலைக்கு அதரவாக உலகிலேயே பெரிய பேரணி நடத்த போகும் சரத்குமார் நண்பர்கள் மூவருக்கும் அழைப்பு விடுத்து இருந்தார்.

மணி: என்ன கூட்டத்தையே காணோம். பேரணி அப்படின்னா ஒரு நூறு பேராச்சும் வர வேணாமா?

பார்த்தசாரதி: உனக்கு சரத் குமார் பத்தி தெரியாது. சரியா வந்திடுவார்.
மணி: அதோ அண்ணன் சரத்குமார் வந்திட்டார்.
சரத்குமார்: மணி! வேலு! பார்த்தா!  நேரத்துக்கு வந்திட்டீங்க போல இருக்கு. எனக்குத் தான் துணை நடிகர்கள் கிடைக்க கொஞ்சம் நேரம் ஆச்சு.

மணி: துணை நடிகர்களா?.

சரத்குமார்: ஆமா மணி! பேரணினா ஆள் வேணாமா?.

பார்த்தசாரதி: என்ன சொல்றீங்க. பேரணி துணை நடிகர்களை வச்சு நடத்த போறீங்களா?.

சரத்குமார்: ஆமா! அதுவும் நிறைய அரசியல் படங்களில நடிச்சு அனுபவம் இருக்கவங்க. சரியா கோஷம் போடுவாங்க.

வேலு: ஆமா ! என் திடீர்னு இந்த அணு உலை ஆதரவு பயணம்?.

சரத்குமார்: இப்படி நீங்க கேட்டா நீங்க ஏன் எனக்கு ஓட்டுப் போட்டீங்கன்னு கேட்க வேண்டி இருக்கும்.

வேலு: அதுக்கு இல்ல சரத் சார்! உங்கள நம்பி நிறைய நிறைய பேர் வராங்க. நீங்க காரணம் சொல்ல வேணாமா?.

சரத்குமார்: நிறையப் பேரா?. ஏன் பொய் சொல்றீங்க?. ஈழத்தில் போர் நடந்த போது  போர நிறுத்தக் கூடாதுன்னு டெல்லியில போய் பேசிட்டு வந்தேன். ஒரு வருடம் கழிச்சு சிங்கள அரசு ஏன் போரை நிறுத்தலேன்னு கேட்டேன்.
அப்போவே காரணம் கேட்காதவங்க இப்போ கேட்பாங்களா?.

பார்த்தசாரதி: அதுவும் சரி தான். ஆனா சரத்குமார் சார். உதயகுமார் அணு உலைக்கு எதிரா நிறைய கருத்துக்களை முன் வைக்கிறாரே. அவருக்கு நீங்க பதில் சொல்ல வேணாமா?.

சரத்குமார்:  இப்படி கேட்கிற நீங்க நான் தனியா தேர்தலில நிற்கும் போது வெறும் 900  ஒட்டுத் தான் வாங்கினேன். ஏன் ஓட்டுப் போடலேன்னு மக்கள் கிட்டப் போய் பதில் கேட்டீங்களா?.

மணி: கூடங்குளம் மக்கள் மீது மிருகத்தனமா தாக்குதல் நடத்தி இருக்காங்களே! அதப் பத்தி உங்க கருத்து என்ன?.

சரத்குமார்: ஆமா  தெரியும்! அதனால தான் கூடங்குளம் பெயரை நான் படம் எடுக்க பதிவு பண்ணி வச்சிருக்கேன். ஒரு வேலை அடுத்த தேர்தலில தோத்துட்டா “கூடங்குளம் – ஒரு சரித்திர சோகம்” னு
படம் எடுக்கலாம்.

வேலு: அப்போ பிழைப்பில கெட்டியா இருக்கீங்க.

சரத்குமார்: அத ஏன் கேட்கறீங்க. நான் பண்ணாத தொழில் இல்லை. இந்த அணு உலை ஆதரவு  கூட நல்ல தொழில்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே ஆரம்பிச்சது இருப்பேன். இப்போ பாருங்க முடியற நேரத்தில தான் வர முடிஞ்சுது.

மணி: இப்பவும் ஒன்னும் கேட்டுப் போகல சார்! கூடங்குளம் மக்கள் உறுதியா இருக்காங்க. அங்க அவ்வளவு சுலபமா அணு உலை ஆரம்பிச்சுட முடியாது.  இது அவங்க வாழ்க்கை பிரச்சினை.

சரத்குமார்:  அருமை. அதான் எனக்கு வேணும்.  அப்பத் தான் நான் தமிழன்!. அதுவும் அந்த சமுதாய மக்களோட பிரதிநிதி னு சொல்லி நான் டெல்லியில போய் பேசலாம். உங்களுக்கு உதயகுமாரை தெரிஞ்சு இருந்தா போராட்டத்தை தொடர்ந்து நடத்த சொல்லுங்க.

பார்த்தசாரதி: அதான் அவர் அணு உலை மூடற வரைக்கும் போராட்டம் தொடரும்னு அறிவிச்சு இருக்காரே.

சரத்குமார்: இது போதும். மத்திய அரசும் கூடங்குளம் மக்கள் அத்தனை பேரும் செத்தாலும்  அணு உலை ஆரம்பிக்கிற திட்டத்தை கை விட மாட்டோம்னு வாக்குக் கொடுத்து இருக்காங்க.  அப்போ நான் சாகிற வரைக்கும் காசு பார்க்கலாம். சரி வாங்க நீங்களும் பேரணியில கலந்துக்குங்க.

“அணு உலை உடனே திற” என்ற கோஷங்கள் கேட்க ஆரம்பித்தன. பேரணி ஆரம்பமானது.

 

This committee session will have more of the atmosphere of a scholarly examination than any prior meeting of snap this link here now the group

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நாட்டாமையுடன் கவலையில்லா காளையர் கழகம்”

அதிகம் படித்தது