மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நாட்டுக்கோழி மிளகு குழம்பு

ஆச்சாரி

Nov 1, 2012

இதை நாட்டுக்கோழி மிளகு குழம்பு என்று சொல்வதைவிட நாட்டுக்கோழி மிளகு ரசம் என்று சொல்வதே பொருத்தம். எங்கள் கிராமத்தில், யாரையேனும் சளிப் பிடித்து வாட்டி வதைத்தால், இந்த குழம்பு தான்.

தேவையானப் பொருட்கள்:

1) நாட்டுக்கோழி                        : அரைக் கிலோ

2) சிறிய வெங்காயம்                : 50 கிராம்

3) தக்காளி                                 : 2

4) கொத்தமல்லித்தூள்             : 2 தேக்கரண்டி

5) வர மிளகாய்                          : 3

6) மிளகு                                     : 3 தேக்கரண்டி (வறுத்துப் பொடியாக அரைத்தது)

7) தேங்காய்                                : நான்கு துண்டுகள்

8 )கடுகு                                       : தேவையான அளவு

9) நல்லெண்ணெய்                    : தேவையான அளவு

10) உப்பு & கருவேப்பிலை &
கொத்துமல்லித்தழை               : தேவையான அளவு

செய்முறை :
முதலில், சிறிய வெங்காயம், தக்காளி மற்றும் வரமிளகாயை எண்ணையில் விட்டு நன்கு வதக்கவும். இந்த கலவை சூடு தணிந்து, ஆறியவுடன், தேங்காய் மற்றும் கொத்துமல்லித்தூள் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும். அதைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டு, வாணலியில் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கடுகு சேர்த்து, வரமிளகாயை போடவும். நன்கு வறுத்து அரைத்துவைத்த மிளகுத் தூளை இதில் போடவும். பின்னர், நாட்டுக்கோழியுடன் கருவேப்பிலை சேர்த்து, வாணலியில் போட்டு வதக்கவும். இப்போது, முதலில் அரைத்து வைத்த வெங்காய தக்காளி கலவையை நாட்டுக்கோழியோடு சேர்த்து நன்கு கலக்கி, அடுப்பில் நன்றாக வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் கொத்துமல்லித் தழை சேர்த்து, நல்ல கொதி வந்தவுடன், அதில் லேசாக மிளகுத் தூளை தூவி விடவும். இதற்குப் பிறகு, ஒரு கொதி வரும்வரை வாணலியை அடுப்பில் வைத்துவிட்டு, பின்பு, இறக்கி பரிமாறவும்.

சுவை மிகுந்த காரசாரமான நாட்டுக்கோழி மிளகு குழம்பு தயார்.

It also suggests the importance of the teachers understanding of children as www.writemyessay4me.org/ learners

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “நாட்டுக்கோழி மிளகு குழம்பு”
  1. sankarganesh says:

    nanga karaikudi enga urilaum ithmathary seyuom chattynadu spl

அதிகம் படித்தது