மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நினைவில் நீ மிதக்கிறாய் (கவிதை)

தவக்களை

Aug 15, 2020

siragu ninaivil1

நினைவில் நீ மிதக்கிறாய்
நிஜத்தில் நீ பறக்கிறாய்
தரையிலிருந்து எழும்பி பறக்கும் காய்ந்த பூக்களெல்லாம்
உன் கூந்தலில் பூக்கத் துவங்கிவிட்டன!
இப்போது நாம் பின்னோக்கி போவோம்!
பெருவனத்தின் பாழடைந்த கோவிலுக்குள்
ஆடைகளின்றி நிற்கும் கற்சிலைகளின் உடையாகி போன தூசுகளும்
ஒட்டடைகளும் ஆங்காங்கே ஊறும் பூச்சிகளும் நம்மை விந்தையாக
பார்த்து கொண்டிருக்கின்றன
அவைகளுக்கு நாம் லட்சத்தில் ஒருத்தர்
நீயோ எனக்கு
லட்சத்தில் ஒருத்தி

**********

நிழலை விரித்து அழைக்கிற மரத்தின் அடியில்
யாருமே படுக்கவில்லை
நிலத்தைத் தவிர

***********

siragu ninaivil2

 

பார்வையினுள் சிறு கடல்
விரிந்து பெரிதாகி
எல்லையற்று மிதந்து கொண்டிருக்க

நடுக்கடலின் படகு
நெருங்க நெருங்க
பெரிதாகி பயமுறுத்துகிறது

என்னிடமிருந்து தப்பியோடு சிறு நண்டின்
கொடுக்குகள் யாருக்கும் தீங்கிழைத்ததில்லை

நடுக்கடலில் வாழும்
உயிர்களுக்கு மட்டுமே தெரியும் நீர்தாத்தா சொன்ன கதைகளில்…
என் கதை இருக்குமா??


தவக்களை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நினைவில் நீ மிதக்கிறாய் (கவிதை)”

அதிகம் படித்தது