நீங்கள் தமிழில் புலமை உடையவரா? வாருங்கள் விளையாடலாம்
ஆச்சாரிApr 15, 2013
அ
|
கோ |
ய |
ண |
த
|
பு |
டி |
வி |
க
|
ல் |
சி |
ரு |
வாசகர்களே…
மேலே கண்ட பனிரெண்டு எழுத்துக்களில் பல தமிழ்ச் சொற்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் தாங்கள் குறைந்தது முப்பது தமிழ் வார்த்தைகளை, இந்தப் பனிரெண்டு தமிழ் எழுத்துக்களை ஒழுங்குபடுத்திக் கண்டுபிடிக்க வேண்டும்.
எ.கா:- கோடி, கல், அவியல்
இதே போல் இப்பனிரெண்டு எழுத்துக்களையும் மாறி மாறி இணைத்து முப்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வார்த்தைகளைத் தாங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழில் ஆழ்ந்த புலமை உடையவரே!
குறிப்பு:
அ) தாங்கள் கண்டுபிடிக்கும் வார்த்தைகள் அனைத்தும் தமிழ்ச் சொற்களிலே இருக்க வேண்டும்.
ஆ) ஆங்கில வார்த்தைகளை இதில் இணைத்து எழுதக் கூடாது.
எ.கா:- டி.வி, சி.டி
இ) இது முழுக்க உங்களை நீங்களே தமிழில் புலமை இருக்கிறதா? எனப் பரிசோதித்துக் கொள்ளும் முயற்சியே.
ஈ) முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்.
வாழ்த்துக்கள்!
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீங்கள் தமிழில் புலமை உடையவரா? வாருங்கள் விளையாடலாம்”