உங்களால் இந்த விடுகதைகளுக்கு விடை கூற முடியுமா?
ஆச்சாரிApr 1, 2013
1. ஓடும் சங்கிலி, ஒதுங்கும் சங்கிலி, பள்ளத்தப் பாத்தா பதுங்கும் சங்கிலி அது என்ன சங்கிலி?
2. கத்திபோல் இலை இருக்கும்
கவரிமான் பூப் பூக்கும்
தின்னப் பழம் பழுக்கும்
திங்காத காய் காய்க்கும்- அது என்ன?
3. சின்ன மச்சான் குனிய வச்சான் – அவன் யார்?
4. கத்தாழ முள்ளுக்குள்ள கண்ணாடிப்பாம்பு
அந்த ஆளக்கண்டா மேலும் கீழும் குதிக்கும் – அது என்ன?
5. கிணற்றைச் சுற்றி வெள்ளைக்கல் – அது என்ன கல் ?
6. அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும் – அது என்ன?
7. சின்ன வீட்டுக்குள்ள விறகு அடஞ்சிருக்கு – அது என்ன வீடு?
8. வசதிவந்தா கூடி வரும், வறுமை வந்தா ஓடி விடும் – அது என்ன?
9. விழுது விடுவான், ஆலமரமில்லை
வீடு கட்டுவான் கொத்தனார் இல்ல – யாரு இது?
10. கையுண்டு காலில்லை
கழுத்துண்டு தலையில்லை – அவன் யார்?
11. ஓடுவான், ஒதுங்குவான், ஒற்றைக்காலில் தவமிருப்பான்
- யார் இவன்?
விடைகள் :
1. நீர்
2. வேப்பமர இலை , வேப்பம்பூ, வேப்பம்பழம், வேப்பங்காய்
3. முள்
4. நாக்கு
5. பல்
6. உதடு
7. தீப்பெட்டி
8. சொந்தம்
9. சிலந்தி
10. சட்டை
11. கதவு
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “உங்களால் இந்த விடுகதைகளுக்கு விடை கூற முடியுமா?”