மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீட்டினும் நீட்டாமை!! (கவிதை)

தமிழ்த்தம்பி

Sep 16, 2017

Siragu-en-kanmoodinaai1

 

 

வணிகம் போற்றும் வறட்டுலகில்

மனிதம் மிக்க மருத்துவராய்

இனியொரு விதி செய்ய

வித்திட்டவள்

அனிதாவெனும் ஆற்றல்மிகு நங்கை!

 

அவள் விதைத்ததெலாம்

நல்வினையாகும் நேரத்தில்

கொல்வினையாய் கொண்டதொரு

நீட் எனும் கயிறே..

விழுங்கியது அவர் உயிரே..

 

ஏ.. பாசிச சனாதன கயவர் கூட்டமே..

தீட்டை வைத்து திளைத்தது போதாதா?

நோட்டை மாற்றி நோகடித்தது போதாதா?

பீட்டாவை வைத்து பிளிறியதும் போதாதா?

மாட்டை வைத்து மாரடித்ததும் போதாதா?

 

போதாது..போதாதென்று..

நீட்டை வைத்தும் நெடுநீதியை அடிக்கத்

துடிக்கிறாயே..

உன் கரங்கள் முழுதும் கமலங்களா?

இல்லை..

அரித்தெடுக்க ஆர்ப்பரிக்கும் அமிலங்களா?

 

மொழியில் உன் விழி  பிதுங்கியது மறந்ததா?

சல்லிக்கட்டில் உன்மலுக்கட்டு

மடிந்ததும் மறந்ததா?

குருவாரில் (ஆசிரியர் வாரம்)

குப்புறவிழுந்ததும் நினைவில் வருதா?

பொங்கலில் பொங்கியதும் பொட்டில் அடித்ததா?

 

தமிழன் அவன் ஒரு அமிழ்தன்!

தரணிக்கே அறம் (குறள்) கற்பித்தவன்!!

உலகுக்கே உன்னதம் சொன்னவன்!!

யாதும் ஊரே.. யாவரும் கேளிர்!!

 

அறம் தெரிந்ததால்..புறம் அறியாதவனன்று!

அவன் புறம் புகுந்தால்,

உன் நிறம் வெளுக்கும்!

 

காவியே.. கல்லறை செய்யும் பாவியே..

பூட்டு உன் கையில் சாவி எம் கையில்

நீ திருட்டுச் சாவி போட்டாலும் திறக்காது

நீ நீட்டுச்சாவி போட்டாலும் நிலைக்காது.

 

சாவி மிரண்டால் காவி கொள்ளாது!

நினைவில் கொள்! நிறுத்திக்கொள்!!

 

 


தமிழ்த்தம்பி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட்டினும் நீட்டாமை!! (கவிதை)”

அதிகம் படித்தது