மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீதி நின்று கொல்லும்

ஆச்சாரி

Mar 1, 2014

 

பிறவுயிர் திண்ணாது

மனிதவுயிர் மட்டும்

சுவைக்கும் சுவாமிகளே

 

மனித உயிர் தாழ்த்தி

மாட்டின் உயிர் உயர்த்தி

மானுடத்தை பின்னிறுத்தும்

மகா பாவிகளே

 

வாழ்வுரிமை மனிதகுல

நீதி என்றால்

வாழ்வுரிமை பறிப்பது

இந்திய நீதியா

 

ஒலிக்காத குரல் ஒலிப்பது

ஊடக தர்மம் என்றால்

குரல்வளை நசுக்கும்

உங்கள் கொடுஞ்செயல்

எந்த தர்மம்

 

குற்றம் அறியா

சிறுபறவைகள் பலவருடம்

சிறைபட்டு பறக்க

துடிக்கும் தருணம்

சிறகை ஒடிக்க

துடிக்கும் கயவர்களே

 

வாழ்ந்து கெட்ட மனிதன் உண்டு

கெட்டு வாழ்ந்த மனிதனும் உண்டு

கெடுப்பதற்கே வாழும்

கேடுகெட்ட மனிதர்

கூட்டம்  நீங்கள்

 

ருசிக்கும் வரை ருசியுங்கள்

மனித உயிரை

நசுக்கும் வரை நசுக்குங்கள்

எங்கள் குரலை

 

நினைவில் கொள்ளுங்கள்

அரசன் அன்றே கொல்வான்

நீதி நின்று கொல்லும்!

 

When we examine whether essaydragon.com/ the allies deliberately ignored the plight of the jews, we find the evidence to be inconclusive

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீதி நின்று கொல்லும்”

அதிகம் படித்தது