மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பறவைகள் பாலூட்டுமா?

ஆச்சாரி

Sep 1, 2011


பாலூட்டிகள் போலவே, சில பறவைகள் இளம் பறவைகளுக்கு கிராப் பால் (crop milk) என்ற ஒரு  பால் போன்ற திரவத்தை  ஊட்டுகின்றன. பாலூட்டிகள் போலன்றி ஆண் மற்றும் பெண் இரு பாலின பறவைகளும்  அந்த பாலை சுரக்கின்றன . “கிராப்  பால்”முக்கிய உணவாக இளம் குஞ்சுகளுக்கு உள்ளது. உணவுக்குழாய்(esophagus) கீழே வெளிப்புறம் நோக்கி திசுப்பை போன்ற உணவு சேமிப்பு அறை துருத்திக் கொண்டு உள்ளது. அதற்கு பெயர் தான் கிராப் ( crop). பொதுவாக பிற விலங்கிற்கு இறையாகாமல் உணவு தேடும் நேரத்தை குறைக்கவும், விரைவில் உணவு சேகரித்தல் மற்றும் சேமித்து வைப்பதற்காகவும் இந்த கிராப் அறை பயன் படுகிறது. இங்கு தான் அகத்திரையில் திரவம் நிறைந்த செல்கள் உதிர்தல் மூலம் “கிராப் பால்” தயாராகிறது.

கிராப் குறிப்பாக புறாக்களுக்கு மற்றும் சில பறவைகளுக்கு (pigeons, game birds) நன்றாக அமைந்துள்ளது. கிராப் பால் மிகவும் சத்தானது. ஒரு ஆய்வின் முடிவில் வீட்டில் வளர்க்கப்பட்ட  புறா குஞ்சுகளுக்கு கிராப் பால்  புகட்டிய போது  16 சதவீதம் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். புறாவின் பால் தாய்பால் மற்றும்  மாட்டு பாலை காட்டிலும் அதிக புரதம், கொழுப்பு சத்து  நிறைந்தது.

பிறந்த இரண்டு வாரங்களுக்கு புறா குஞ்சுகளுக்கு முழுக்க  முழுக்க இப்பாலையே உணவாக புகட்டுகிறது.

கிரேட்டர்  பிளமிங்கோ (Greater Flamingos) மற்றும் எம்பரர் பென்குயீன் (Emperor Penguin) குஞ்சுகளும் கிராப் பால் அருந்தி வளர்கின்றன.

ஆனால் புறாக்களை போன்று கிராப் அறையில் கிரேட்டர் பிளமிங்கோவிற்கு பால் உருவாகவில்லை. மாறாக செரிமானப்பாதையில் உள்ள அகத்திரை சுரப்பிகள் அனைத்தும் இவ்வேலையில் ஈடுபடுகிறது.
கிரேட்டர் பிளமிங்கோ பால் புறாப் பாலை  காட்டிலும் அதிக கொழுப்பு நிறைந்தது. ஆனால் புரதச் சத்து மிக குறைந்த அளவே கொண்டிருக்கிறது. இப்பாலில் அதிக  அளவு வெள்ளை மற்றும் சிகப்பணுக்கள் காணப்படுகின்றது. கிரேட்டர் பிளமிங்கோ குஞ்சுகள் இப்பாலை பிறந்த இரண்டு மாதங்களுக்கு  முழு உணவாக அருந்தி வளர்கின்றன.

எம்பரர் பென்குயீன் (Emperor Penguin) குஞ்சுகளும் இவ்வாறு கிராப் பாலை முழுவதுமாக அருந்தி இளைய பிராயத்தில் வளர்கிறது.  ஆண்  பென்குயீன் கடலுக்குள் இறை தேடச் செல்லும் போது தாய் பென்குயீன் குஞ்சுகளுக்கு பாலூட்டும், அது போன்று பெண் பறவை உணவு தேடச் செல்லும் போது ஆண் பறவை குஞ்சுகளுக்கு பாலூட்டும்.

I have taken several literature courses since, including intro to critical reading, and none have helped me develop my writing as much as intro to lit with amy murray see

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “பறவைகள் பாலூட்டுமா?”
  1. கண்ணம்மா says:

    வாசகர்களின் கேள்வியே உங்களுக்கும் எழும்பியதால் நீங்களும் அக்கேள்வியுடன் உங்கள் சிந்தனை குதிரையை ஓட விட்டு எங்களுக்கு ஒரு அழகான விவரமான கட்டுரையை தந்தமைக்கு மிக மிக நன்றிகள்…

    அருமையோ அருமை…
    வாழ்த்துகள் தோழி…

    தங்களின் மனம் போல் வாழ்க வளர்க சிறக்க..

  2. ராஜபாளாயத்தான் says:

    மிகவும் நல்ல கட்டுரை!!!

  3. Gunasekaran Ra T says:

    அறிய கட்டுரை. நன்றி.

அதிகம் படித்தது