செட்டிநாட்டு சமையல் – பலாக்காய் கோலா உருண்டை,வாழைப்பூ வடை
ஆச்சாரிDec 21, 2013
பலாக்காய் கோலா உருண்டை
பலாக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
பொட்டுக்கடலை – 50 கிராம்
இஞ்சி – 10 கிராம்
கிராம்பு – 2
ஏழக்காய் - 2
பட்டை – சிறிது அளவு
தேங்காய் பூ – சிறிது அளவு
எண்ணெய் – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை:
பலாக்காயை தண்ணீரில் நன்கு வேக வைத்து அரைத்துக் கொள்ளவும். மற்ற எல்லாவற்றையும் சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய அனைத்தையும் நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த பலாக்காயையும் மற்றும் மேல் சொன்ன அரைத்த கலவையையும்சேர்த்துப் பிசைந்து, இதனுடன் போதிய அளவு உப்பு சேர்த்து, நமக்குத் தேவையான அளவு உருண்டையாக உருட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும். இப்போது பலாக்காய் கோலா உருண்டை தயார். இதனுடன் தேங்காய் அல்லது தக்காளிச் சட்னி செய்து உண்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
————————————————————————————————————————————————————————–
வாழைப்பூ வடை
கடலைப்பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
சின்னவெங்காயம் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
சோம்பு – சிறிது
மிளகாய் வத்தல் - 2
வாழைப்பூ - தேவைக்கு
உப்பு – தேவைக்கு
மஞ்சள் தூள் - சிறிது
செய்முறை:
முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கடலைப்பருப்பு, துவரம் பருப்பு இரண்டையும் அரைமணிநேரம் ஊறவைக்கவும். வாழைப்பூவை நரம்பு எடுத்துத் தனியாக அரைக்கவும். இப்போது நன்கு ஊறிய பருப்புடன் சோம்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், உப்பு இவற்றைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த வாழைப்பூவையும், வெங்காயத்தையும் இதனுடன் சேர்த்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும். இப்போது வாழைப்பூ வடை தயார். சிறுநீரகத்தில் கோளாறு இருப்பவர்கள் இதனைச் சாப்பிடலாம். மாலை நேரத்தில் குடிக்கும் தேநீரோடு இதனைச் சேர்த்து சாப்பிடுவதும் தனிச் சுவையாக இருக்கும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.





கருத்துக்கள் பதிவாகவில்லை- “செட்டிநாட்டு சமையல் – பலாக்காய் கோலா உருண்டை,வாழைப்பூ வடை”