மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பழுதுபடாத விழுதுகள் – சிறுவர் சிறுகதை

ஆச்சாரி

May 24, 2014

pazhudhupadaadha vizhudhugalபிரணவ் பத்தாம்வகுப்புப் படிக்கும் மாணவன்நன்றாகப் படிப்பவன்தான். இருந்தாலும் தன் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் படிப்பில் அக்கறைஇல்லாமல் விளையாட்டுத்தனமாய் இருந்தான். இதனால் அனைத்துப் பாடங்களிலும் மிகவும்குறைவாக மதிப்பெண் பெற்றான். பிரணவின் அம்மாவிற்கு இது மிகுந்த வருத்தத்தைத் தந்தது. ஒருநாள் பிரணவின் மாமா ஊரிலிருந்து வந்திருந்தார். அவர் கல்லூரிப்படிப்புப் படித்தவர்சொந்தத்தொழில் செய்யவேண்டும் என்பதற்காக வேலைக்குச் செல்லாமல் ஊரில் விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார். பிரணவிற்கு சேர்ந்தாற்போன்று நான்குநாட்கள் விடுமுறை என்பதால் அவனை ஊருக்குக் கூட்டிச்செல்ல வந்திருந்தார். அவரிடம் பிரணவின் அம்மா தன் மனக்குறையைச் சொன்னார். பிரணவின்மாமா எந்த அறிவுரையையும் குழந்தைகள் மனத்தில் தைக்கும்விதத்தில் சொல்வதில் சமர்த்தர். “கவலைப்படாதக்கா! இந்த விஷயத்தை நான் பாத்துக்குறேன்”- என்றவர் பிரணவை ஊருக்குக் அழைத்துச்சென்றார்.

அதிகஓசை போக்குவரத்துநெரிசல் ஏதுமின்றி பரபரப்பில்லாமல் இருந்தன கிராமத்துத்தெருக்கள்.பிரணவ் தினமும்காலையில் மாமாவோடு வயலுக்குப்போனான். பச்சைப்பசேலென்ற பயிர்கள், தண்ணீர்செல்லும் வாய்க்கால்கள், உயர்ந்தவரப்புகள், நீர்இரைக்கும் பம்புகள் என்று எல்லாமே புதுஅனுபவமாக இருந்தது அவனுக்கு. மாமாவின்வயல் வீட்டிலிருந்து தொலைவில் இருந்தது. போகும்வழியில் ஒரு களத்துமேடுஅந்தக்களத்து மேட்டில் ஓர் ஆலமரம்அந்த ஆலமரத்தடியில் சற்று இளைப்பாறிவிட்டுத்தான் அவர்கள் நடையைத் தொடர்வார்கள். களத்துமேட்டில் கதிரடிக்கும்பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளை ஆலமரத்தில் தூளிகட்டித் தூங்கப்போட்டார்கள். சற்று வளர்ந்தபிள்ளைகள் மரத்தைச்சுற்றி ஓடிப்பிடித்து விளையாடினார்கள்.

pazhudhupadaadha vizhudhugal2பிரணவ் அந்தமரத்தை உற்றுப்பார்த்தான். ஓங்கிவளர்ந்த விருட்சம் அது. ஏராளம்விழுதுகள் அதில் சடைசடையாய்த்தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றுள் சில முழுமையாய் வளர்ந்து தரையில் கால்பாவி நின்றன. சில முழுவளர்ச்சி பெறாமல் அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. பிரணவ் அடிமரத்தை உற்றுப்பார்த்தான். பருத்த அடிமரம்ஆனால் சற்றேத் தூர்ந்துபோய் பட்டைகள்உரிந்து அதன் முதுமை அப்பட்டமாகத் தெரிந்தது. நகரத்தில் வசித்துவரும் அவனுக்கு அந்த ஆலமரத்தின் பிரமாண்டம் அசாதாரணமாகத் தெரிந்தது. நாலாபுறமும் கால்பாவி நின்ற அதன் விழுதுகளால்தான் அந்தமரம் இன்னும் கீழே விழுந்துவிடாமல் நிற்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடிந்தது.

மாமாவிடம் கேட்டான். அவன்கருத்தை ஆமோதித்தார் அவர். இதுதான் அவனுக்கு அறிவுரைகூற ஏற்றசமயம் என்று தோன்றியது அவருக்கு “இதுல நமக்கெல்லாம் ஒரு படிப்பினை இருக்கு பிரணவ்!”- என்றார் அவர். “என்ன படிப்பினை மாமா!”- கேட்டான் பிரணவ்.

“அடிமரம்தான் நம்முடைய பெற்றோர்கள்! மரத்தோட விழுதுகள்தான் அவங்களோட பிள்ளைங்க அதாவது நாம! பெத்தவங்க பிள்ளைங்கக்கிட்ட பெருசா ஒன்னும் எதிர்பார்க்கல! படிக்குறகாலத்துல நல்லாபடிச்சு முன்னுக்கு வரனும்ங்குறதுதான் அவங்க எதிர்பார்ப்பு! அடிமரம் தூர்ந்துபோனாலும் நாலாபுறமும் கால்பாவி நிக்குற விழுதுகள் மரத்தை விழுந்துராமத் தாங்குறமாதிரி நல்லாப்படிச்சா நாமளும் பெத்தவங்களுக்கு முதுமைல ஊன்றுகோலா இருக்கமுடியும்! அப்படி இல்லாட்டி முழுமையா வளர்ச்சி அடையாத விழுதுகள் மரத்துக்குப் பாரமாத் தொங்குறமாதிரி நாமளும் பெத்தவங்களுக்கு பாரமா இருக்கவேண்டியதுதான்! நீ எப்படி பிரணவ்? பெத்தவங்களுக்குப் பாரமா இருக்கப்போறியா இல்ல ஊன்றுகோலா இருக்கப்போறியா?”- என்று கேட்டார் மாமா.

பசுமரத்தாணி என்பார்களே அதுபோன்று மாமா சொன்னவார்த்தைகள் பிரணவின் மனத்தில் ஆழமாகச்சென்று பதிந்துவிட்டது. தான் நன்றாகப்படிக்க வேண்டும் விளையாட்டுத்தனத்தை மூட்டைகட்டி வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டான். “இனிமே நான் நல்லா படிப்பேன்!”- எனறான் அவன் மாமாவிடம்“சரி வா போகலாம்!”- என்றார் அவர். இருவரும் வயலைநோக்கித் தங்கள் நடையைத் தொடர்ந்தார்கள்.

Use the shortest sentences for the strongest discover more right over here statements every mouse died

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பழுதுபடாத விழுதுகள் – சிறுவர் சிறுகதை”

அதிகம் படித்தது