மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பவளப் பாறைகள் – பகலிரவு சுழற்சி முறை

ஆச்சாரி

Sep 15, 2012

இந்தியாவை ஓட்டிய கடல் பகுதிகளிலும் உலகின் பிற பகுதிகளிலும் காணக்கிடைக்கும் இன்றும் ஆச்சர்யமூட்டும் பவளப் பாறைகள்(Coral Reefs) ஒரு அரிய நுண்ணுயிரி ஆகும்.  மிக சிறிய உயரினமான இவை நிடாரியா(cnidaria ) எனும் வகையை சார்ந்தது மேலும் இவை செசில் (sessile) வகை இனமாகும் அதாவது ஓரே இடத்தில் ஒட்டி வாழும் உயிரி. இவை சாதாரணமாக 1 மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன.அப்படி இருக்க இவை தனது டெண்டகுள்களின் (tentacles) உதவியுடன் சிறிய மீன்கள், ப்லான்டூனிக் (planktonic) விலங்குகளை உணவாக கொள்கின்றன மேலும் மற்ற ஒளிசேர்க்கை உயிரிகளான பாசிகள் (algae) போன்றவற்றின் உதவியின் மூலம் ஒளிசேர்க்கை(photosynthesis) சக்தி பெற்று வாழ்ந்துவரும் இவற்றின் மரபணு பற்றிய ஆராய்ச்சி ஒன்றில் இவற்றின் பகலிரவு சுழற்சி முறை புலப்பட்டிருக்கிறது.

பவளப்பாறைகளில் மூன்று வகைகள் உள்ளன. அவை,

கண்டத்திட்டுப் பவளப்பாறைகள்,

தடுப்புப்       பவளப்பாறைகள்,

வட்டப்        பவளத்திட்டுகள்

எனப்படும்.

கடலை வாழ்விடமாக கொண்ட இப் பவளப் பாறைகள் கூட்டம் கூட்டமாக அடர்ந்து விரிந்து  வாழக்கூடியவை. இக்கூட்டமானது  கால்சியம் கார்பனேடால் (calcium carbonate) ஆன கடினக் கூட்டை கொண்டுள்ளது. இவ்வகை பவளப்படுக்கைகள்  பசிபிக் பெருங்கடலில் அதிகம் காணப்படும். மிகுந்த ஆழமான கடல் பகுதிகளில் வாழும் இப் பவளப்பாறைகளுக்கு  ஒளிச்சேர்க்கை உயிரிகளான டைனோப்லஜெல்லேட்(Dinoflagellates) உடன் நட்புகொண்டிருக்கிறது.  டைனோப்லஜெல்லேட் சூரிய ஒளி யை பயன் படுத்தி பவளப் பாறை களுக்கு சக்தியூட்டுகிறது மேலும் அச் சூரிய ஒளியின் மூலம் கணிமக்கூட்டை(mineralized skeleton) பாதுகாப்பிற்காக உருவாக்குகின்றது இது  பவள கால்சிபிகேசன்(Coral Calcification) எனப்படும்.

அவ்ரிலி மோயா (Aurelie Moya) என்ற விஞ்ஞானியின் குழுவினர் செய்த ஆய்வில் பகலிரவு சுழற்சியின் ஒரு அங்கமான டைனோப்லஜெல்லேட்சின் synchronization பற்றி கண்டறிந்துள்ளனர். பவளப்பாறையின் முதல்மரபணு(எஸ்டிபிசிஏ) ஒளிச்சேர்க்கைக்கு வித்திடுகிறது என்று சொல்லும் இவர்கள் அம்முதல் மரபணுவை எஸ்.டி.பி.சி.ஏ(STPCA) என்று அழைக்கின்றனர். அந்த எஸ்.டி.பி.சி.ஏ ஒரு படிவத்தை(enzyme) உருவாக்கி அதனை கார்பன்-டை-ஆக்சைட்(Carbon Dioxide) டிலிருந்து பை-கார்பனைடாக(Bicarbonate)  மாற்றுகிறது. இந்த செயல் பகலைவிட இரவில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

மேலும் இவ்வாராய்ச்சியில் படிவம் ஆனது கீழ் பகுதியில் உள்ள தண்ணீர் படிவத்தையே அதிகம் கண்காணிக்கிறது.அந்த அமில வளர்ச்சியின் காரணமாக பகலை விட இரவில் விழிப்புடன் செயல்படுகிறது.

Calcification நடக்க பற்பல ஹைட்ரோஜன் அணுக்கள் தேவைப்படும்.ஆனால் பகலில் நடக்கும் போது வெளியேற்றப்பட்டுவிடும். ஆனால் இரவில் பவளத்தில் நடக்கும் அமில அதிகரிப்பால்  ஹைட்ரோஜன் அணுக்களும் அதிகரிக்கும் அதனால் இரவில் நடைபெறும். மேலும் அதிகப்படியான அமில அதிகரிப்பினால் வரும் பாதிப்பை தடுப்பதற்காக எஸ்.டி.பி.சி.ஏ பைக்கார்பநேட்டை தயாரிக்கிறது என்பதையும் இவ்வாராய்ச்சியில் கண்டுள்ளனர்.

மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண்அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கும் இந்த பவளப்பாறையின்  பகலிரவு சுழற்சி முறை மற்றும் மூலக்கூறு செயல்பாடுகள் பற்றிய பல செய்திகள் இன்னும்  மர்மமாகவே உள்ளன. வருங்காலத்தில் நடக்கும் ஆராய்ச்சிகள் உண்மைகளை வெளிக்கொணரும் என்று நம்புவோம்.

Adjectives and adverbs used to compare more than two people or https://www.eduessayhelper.org/ two things


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பவளப் பாறைகள் – பகலிரவு சுழற்சி முறை”

அதிகம் படித்தது