மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாரத புண்ணிய பூமியிலிருந்து… (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Oct 31, 2020

siragu-pengal1

இளஞ்சிறுமி ஆடைக் களைந்து வன்புணர
இரக்கமற்ற எண்ணமும் காமுற்ற நெஞ்சமும்
எப்போதும் மனிதம் மறுக்கும் செயலும்
கொண்டலையும் வல்லூறுகள் உலவும் நாடிது

பெண்ணவள்  யோனியில் இரும்புக்கம்பி செலுத்தி
பாவையின் பல்லுடைத்து மூக்கறுத்து முதுகுத்
தண்டுடைத்து எக்காளத்துடன் திரியும் திமிரான்கள்
மதவெறி மடையன்கள் உலவும் நாடிது

காதல் மறுத்தால் திராவகம் ஊற்றி
கவினழகை சிதைத்து அரிவாள் வெட்டால்
உடலைத் துண்டாடும் தறுதலைக் காதல்
மயிரான்கள் செருக்குடன் உலவும் நாடிது

மகளின் காதல் கணவனைப் புதைத்து
அவள் வயிற்று இளந் தளிரைச்
சாம்பலாக்கும் சா(தி)வெறி கொண்டலையும்
தகப்பன்கள் கோட்டான்களாக  உலவும் நாடிது

ஏட்டிலும் பாட்டிலும் எழுதி வைத்தார்
நாடிது பெண்களைக் கண்ணெனக் காக்குமென
நடப்பில் நனவில் நங்கையின் கண்களைத்
தோண்டி அவளின் உலகை நெருப்பாற்றில்
இட்டுவைக்கும் கயவர்கள் உலவும் நாடிது

பெண் தசை தேடி, உயிர்க் கொடுத்தாளின்
முலைக் கசக்கி காம நஞ்சு உண்ணும்
களியாட்ட கயவர்கள் உலவும் நாடிது !!

பெண்களில்லா நாட்டை உருவாக்க
பாடெடுக்கும் மனுவின் ஈட்டம்;
போராடி நைந்துபோகப் பிறப்பெதற்கு? பாங்காய்
வாழ்வமைத்திட பாரத புண்ணிய பூமியிலிருந்து
பாவையரே வெளியேறு!

பெண்களைத் துரத்திய நாடிது என்று
எண்திசை நாடுகளும் காறியுமிழட்டும்
எச்சில் துளிகளில் மூழ்கட்டும் பாரத புண்ணிய பூமி;


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாரத புண்ணிய பூமியிலிருந்து… (கவிதை)”

அதிகம் படித்தது